Trending

TNPSC குரூப் 4 2022 தற்போதைய Cut Off நிலவரம்

TNPSC குரூப் 4 2022 தற்போதைய Cut Off நிலவரம்


தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஜுலை மாதம் 24 ஆம் தேதி நடத்திய, குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட  நிலையில், தற்பொழுது எந்த நேரமும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக பட்சமாக இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கிறது.


சுமார் 14000 பேர் வரை ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட உள்ளது. ஓவராலாக ஒரு ரேங்க் லிஸ்டும், கம்யூனல் வாரியாக ஒரு ரேங்க் லிஸ்டும் வெளியிடப்பட உள்ளது.


டைப்பீஸ்ட் காலியிடங்களை பொருத்தவரை மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு சீட்டுக்கு இருவர் என தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஹையர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.


7301 இடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்தாலும், சுமார் 18.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். இதில் ஜுனியர் அஸிஸ்டன்டு பதவிக்கு 3600 பேரும், டைப்பிஸ்ட் பதவிக்கு 2100 பேரும், ஸ்டெனோ டைப்பிஸ்ட் பதவிக்கு 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.


➤ 150 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு


➤ GROUP 4 ANSWER KEY 2022 PDF


இதன் முடிவுகள் அக்டோபர் மாதமே வெளிவருவதாக இருந்தது. பெண்கள் இட ஒதுக்கீட்டு முறையில் தேர்வாணையத்தால் தவறான நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவதால், ஆண்கள் பாதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


பெண்களுக்கு பொது மற்றும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பிரிவில், மெரிட்டில் சீட் கொடுக்கப்பட்ட பிறகும், 30% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால், ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு 50% இடங்கள் வரை கிடைத்து வந்தது.


சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து, சாதி ரீதியான இட ஒதுக்கீட்டில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய உத்தரவிட்டு உள்ளது.


மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும்போது, பெண்களுக்கு மொத்தக் காலியிடங்களில் 30% கிடைத்துவிட்டால் தனியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, புதிய சாஃப்ட்வேர் மூலம் தேர்வு முடிவுகள் ரெடியாகி வருகிறது. இதனால் எந்த நேரமும் தேர்வு முடிவுகளை வெளியிட ஆணையம், தயாராக உள்ளது.


➤ TNPSC ONLINE QUIZ


➤ TNPSC GROUP 4 SYLLABUS PDF


Cut Off குறைகிறது


கடந்த ஆண்டுகளில் வெளியான Cut Off மதிப்பெண்களைவிட, தற்பொழுது குறைவான மதிப்பெண்கள் பெற்றவருக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட உள்ளது.


அதன் காரணங்கள்,


மூன்றாண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படாததால் இந்த தேர்வை கொண்டே சுமார் 2000 இடங்கள் கூடுதலாக நிரப்ப அரசு கருதி உள்ளது. வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை போன்ற வருமானம் வரும் துறைகளில் கூட பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.


ஆங்கில வழியில் படித்தவர்கள் ஆங்கிலத்திலேயே தேர்வு எழுதி எளிதில் வேலைக்கு சென்று வந்தார்கள். தற்பொழுது  தமிழில் 40 மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் Cut Off குறைகிறது.


கேள்வித்தாள் கடினமாக கேட்கப்பட்டதாலும் Cut Off குறைகிறது.


குரூப் 2 தேர்வில் வெற்றி பெறும் 5500 பேர் குரூப் 4 தேர்விலும் தேர்வாக வாய்ப்புள்ளதால் இப்போதே பலரை ரிசர்வ் செய்ய வேண்டிய கட்டாயம் தேர்வாணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் Cut Off

அலுவலக உதவியாளர் பணிக்கு,

  • பொதுப் பிரிவில் 170 மதிப்பெண்களும்,
  • BC பிரிவில் 165 மதிப்பெண்களும்,
  • MBC பிரிவில் 163 மதிப்பெண்களும்,
  • SC பிரிவில் 155 மதிப்பெண்களும் Cut Off ஆக அமையும்.

தட்டச்சர் பணியை பொருத்தவரை,

  • பொதுப்பிரிவில் 160 மதிப்பெண்களும்,
  • BC பிரிவில் 155 மதிப்பெண்களும்,
  • MBC பிரிவில் 152 மதிப்பெண்களும்,
  • SC பிரிவில் 150 மதிப்பெண்களும் Cut Off ஆக அமையும்.

ஸ்டெனோகிராபர் பணிக்கு,

  • பொதுப்பிரிவில் 150 மதிப்பெண்களும்,
  • BC பிரிவில் 140 மதிப்பெண்களும்,
  • MBC பிரிவில் 130 மதிப்பெண்களும்,
  • SC பிரிவில் 120 மதிப்பெண்களும் பெற்றாலே வேலை வாய்ப்பு உறுதியாகும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே மதிப்பெண்ணே Cut Off ஆக வரும். புதிய முறையில் கட்ஆஃப் பெண்களுக்கு  குறைய வாய்ப்பு இல்லை.


VAO பணியை பொறுத்தவரை 274 சீட்டுகள் மட்டுமே இருப்பதால் எல்லா பிரிவினருக்கும் 180 மதிப்பெண் தேவைப்படும்.


➤ இந்த தேர்வில் உங்களால் 100/100 எடுக்க முடியுமா?


இங்கு மதிப்பெண் எனக்கூறப்படுவது கேள்விகளின் எண்ணிக்கையே ஆகும். முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு