Trending

சர்க்கரை நோய் உணவு அட்டவணை pdf

 

சர்க்கரை நோய் உணவு அட்டவணை pdf

உணவு கட்டுப்பாடு நீரிழிவு நோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வைக்கிறது அந்த உணவு முறையானது நோயாளி மற்றும் அவரது குடும்ப உணவு முறையை ஒட்டி அமைவது அவசியம். நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கும் கொலஸ்ட்ராலை குறைபதற்கும் உதவுகிறது. முழு தானியங்கள் கொண்டைக்கடலை உளுந்து பச்சை பயறு போன்ற பயிர் வகைகள் மற்றும் கீரை வகைகளில் இயற்கையான நார்ச்சத்து மிகுந்து உள்ளது வெந்தயத்திலிருந்து கிடைக்கும் நார்ச்சத்து வகை ரத்தத்தில் சர்க்கரை அளவை ஓரளவு குறைப்பதால் அதை முளைகட்ட வைத்தோ, பொடியாகவோ உட்கொள்ளலாம். இந்த பதிவினில் சர்க்கரை நோய்க்கான உணவு அட்டவணை தரப்பட்டுள்ளது அதன் PDF கீழே தரப்பட்டுள்ளது.


கொழுப்பே வேண்டாம்


உணவில் கொழுப்பை குறைப்பதன் மூலம் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவதையும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பையும் ஓரளவு தடுக்கலாம். சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய் வகை மிகவும் முக்கியமானதாகும் ஒரு நாளில் உபயோகிக்கும் மொத்த எண்ணெய் அளவை குறிப்பாக சாச்சுரேட்டட் கொழுப்பு அளவை குறைப்பது நலம். தாவர எண்ணெய்களை குறைந்த அளவில் உபயோகிக்கலாம். 


சாச்சுரேட்டட் கொழுப்பு


நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில், வனஸ்பதி ஆகியவைகளை கூடுமானவரையில் தவிர்ப்பது நலம்


பாலி அன் சாச்சுரேட்டட் கொழுப்பு


சூரியகாந்தி எண்ணெய் சன் பிளவர் எண்ணெய் சோள எண்ணெய் ஆகியவைகளை குறைந்த அளவில் உபயோகப்படுத்தலாம்


மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பு


கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சனோலா ஆகியவைகளை தேர்ந்தெடுப்பது நலம்.


பாலி மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு


நல்லெண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் ஆகியவைகளை உபயோகப்படுத்தலாம்


கலோரியில் கவனம்


உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் மொத்த கலோரி அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் மூலமும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ஒரு நாளில் உண்ணும் உணவை பரவலாக சிறுசிறு இடைவெளி விட்டு உண்ண வேண்டும். ஒருவேளை உணவை உண்ணாமல் இருப்பதோ, விரதம் இருப்பதோ கண்டிப்பாக கூடவே கூடாது. 


ஒரு நாள் உணவு அட்டவணை


ஒரு நாளுக்கான உணவு அட்டவணை இது. கீழே தினசரி அட்டவணையும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளுக்கான உணவு வகையில் ஏதும் ஒன்றை தேர்வு செய்து உண்ணலாம். மதிய வேளை போதுமான கலோரியை தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


காலை


உணவு

அளவு

இட்லி

2 முதல் 4

தோசை

2 முதல் 3

சப்பாத்தி

2 முதல் 4

உப்புமா

அரை/முக்கால் கப்

பூரி கிழங்கு

2 முதல் 3

கோதுமை ரவை

முக்கால் கப்


மதியம்


உணவு

அளவு

சமைத்த அரிசி

அரை/முக்கால் கப்

காய்கறிகள்

போதுமான அளவு

பயறுகள்

1 கப் வரை

ஆடையற்ற தயிர்

1 கப்

சாம்பார்/ரசம்

போதுமானது

நார்ச்சத்து காய்கறி அவசியம்


மாலை


உணவு

அளவு

பசும் பால்

100மிலி

கோதுமை உப்புமா

அரை கப்

பிரெட்

2 துண்டு


இரவு


உணவு

அளவு

இட்லி

தோசை

2 அல்லது 3

சப்பாத்தி

படுக்கும் முன்

பால் 75 மிலி



இந்த உணவுகளை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்

  1. பூசணிக்காய்
  2. பீன்ஸ்
  3. பாகற்காய் 
  4. சுரைக்காய் 
  5. கத்திரிக்காய் 
  6. முட்டைகோஸ் 
  7. வெள்ளரிக்காய் 
  8. காலிஃப்ளவர் 
  9. இஞ்சி 
  10. கீரை வகைகள் 
  11. நூட் கோல் 
  12. கோவைக்காய் 
  13. வெண்டைக்காய் 
  14. புதினா 
  15. வெங்காயம் 
  16. முளைகட்டிய பயிர் வகைகள் சௌசௌ 
  17. கொத்தவரங்காய் 
  18. கொத்தமல்லி தழை 
  19. காராமணி 
  20. கறிவேப்பிலை 
  21. முருங்கைக்காய் 
  22. குடைமிளகாய் 
  23. வாழைப்பூ 
  24. வாழைத்தண்டு 
  25. பீர்க்கங்காய் 
  26. புடலங்காய் 
  27. தக்காளி 
  28. வெள்ளை முள்ளங்கி 
  29. அவரைக்காய் 
  30. பப்பாளி காய்

அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டியவை

  1. ஆடை நீக்கிய மோர்
  2. சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை
  3. தக்காளி ஜூஸ்
  4. தெளிந்த சூப்
  5. மிளகு ரசம் 
  6. தக்காளி
  7. வெள்ளரி காய்
  8. வெங்காயம்
  9. வெள்ளை முள்ளங்கி
  10. குடைமிளகாய் 

ஆகிய காய்கறி சாலட் வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளை குழம்பாக அவித்து எடுத்து கொள்வதே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. வறுவல், பொறியலைத் தவிர்த்துவிடுங்கள்.


தினசரி உணவு அட்டவணை


மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தயாரிக்கப்பட்ட சரியான உணவு அட்டவணை இது. தினசரி 3000 கலோரிகள் நிரம்பிய உணவு சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவும்.


உணவுகள்

அளவு

இட்லி

2 - 4 (போதுமானது)

தோசை

2 - 3 (போதுமானது)

சப்பாத்தி

2 - 4

உப்புமா

அரை கப்

நூடுல்ஸ்

அரை கப்

புரோட்டா

1

அரிசி சமைத்தது

அரை கப்

கோதுமை ரவை

அரை கப்

ரவை

25 கிராம்

ஓட்ஸ்

25 கிராம்

பூரி கிழங்கு

2

சேமியா

அரை கப்

கேழ்வரகு

50 கிராம்

சோளம்

30 கிராம்

அவல்

25 கிராம்

ராகி சேமியா

ஒரு கப்

சமைத்த கடலை 

முக்கால் கப்

முளைக்கட்டிய பயறு

30 கிராம்

பசும் பால்

100 மிலி



தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் 


சர்க்கரை நோய் உணவு அட்டவணை

சர்க்கரை, தேன், குளுக்கோஸ், ஜாம், வெல்லம், இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள், கேக், இளநீர், குளிர்பானங்கள், மதுபான வகைகள், பாலில் கலந்து குடிக்கும் பொருட்கள், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா, சீதாப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் போன்றவற்றை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். அத்தி திராட்சை போன்ற காய்ந்த பல வகைகளையும் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தேன் கலந்து குடித்து கொண்டு இருந்தீர்கள் எனில் விட்டு விடுங்கள்.


தெரிந்து கொள்க: இந்தியாவில் தயாரிக்கப்படும் எல்லா வகையான பிஸ்கட்டுகளிலும் சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ளது எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்


கலோரி குறைந்த காய்கறிகள்


கலோரி குறைந்த காய்கறிகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளவது உடலில் நார்ச்சத்தினை அதிகப்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கான உணவு முறைகள் இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது


கலோரி குறைந்த காய்கறிகள் அட்டவணை


முட்டைகோஸ்

காலிஃபிளவர்

புதினா

வெள்ளரிக்காய்

பசலைக்கீரை

முருங்கைக்காய்

சிறுகீரை

பீன்ஸ்

பருப்புக்கீரை

குடமிளகாய்

முளைக்கீரை

கோவைக்காய்

பூசனிக்காய்

நூட்கோல்

பாகற்காய்

பப்பாளிக்காய்

கத்தரிக்காய்

வாழைப்பூ

வெந்தயக்கீரை

பரங்கிக்காய்

முள்ளங்கி

பீர்க்கங்காய்

வெண்டைக்காய்

தண்ணீர் காய்கள்



உணவின் பக்குவம்


உணவைத் தாளிக்கும் போதும் உபயோகப்படுத்தும் எண்ணெய் அனுமதிக்கப்பட்ட அளவுகுள்ளேயே இருக்க வேண்டும்

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளவும்

களி, கஞ்சி, கூழ் போன்றவற்றை உண்ணக்கூடாது

கேரட், பீட்ரூட், பட்டாணி, டபுள் பீன்ஸ் ஆகியவற்றை குறைவாக உபயோகிக்கலாம். உப்பு அதிகமாக அதிகமாக இரத்த அழுத்தம் கூடும். உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் இந்த கட்டுரையையும் படிக்கவும்


பழங்களில் கவனம்


ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, கொய்யா, பேரிக்காய், கிர்ணி, தர்பூசணி ஆகியவற்றை சர்க்கரை அளவு ரத்தத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போதும், உணவு கட்டுப்பாடு மட்டுமே சிகிச்சையாக இருக்கும் போதும் மற்றும் உணவியல் நிபுணர் கூறும் போதும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களின் சர்க்கரை அளவு இரத்தத்தின் சர்க்கரை அளவினை உயர்த்தலாம். பழங்களில் போதுமான நார்ச்சத்து மிகுந்து இருந்தாலும் சர்க்கரை அளவு பாதிப்பை உண்டாக்கலாம் அதனால் பழங்களை அளவுடன் உண்பதே நல்லது.


பழங்கள் - உணவு அட்டவணை


பழம்

அளவு

நெல்லிக்காய்

4 - 5

ஆப்பிள்

1 சிறியது

கொய்யா

1 சாதாரண அளவு

முலாம்பழம்

1 துண்டு

ஆரஞ்சு

1 சாதாரண அளவு

பப்பாளி

3 துண்டுகள்

பேரிக்காய்

1 சிறியது

சாத்துக்குடி

1 சாதரண அளவு

தர்பூசணி

1 துண்டு (200கி)

நாகப்பழம்

10 சிறியது



ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுது ஏற்படும் விளைவுகள் 


ரத்தத்தில் சர்க்கரை குறைவது என்றால் என்ன? ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது போல் குறைந்து விடுவதும் உண்டு. இதற்கு ஹைபோ கிளைசிமியா என்று பெயர். 


ஹைபோ கிளைசிமியா ஏற்படுவதற்கான காரணங்கள்

  • அதிக அளவு இன்சுலின் அல்லது சர்க்கரை குறைப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல் 
  • சாப்பிடாமல் இருந்து விடுவது, தாமதமாக சாப்பிடுவது உணவு திட்டத்தில் மாறுதல். 
  • வழக்கத்திற்கு விரோதமான உடற்பயிற்சி அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி.
  • நோய்வாய்ப்படுதல்
  • குறிப்பிட்ட நேரத்தில் இன்சுலின் மாத்திரை உணவு எடுத்துக் கொள்ளாதிருத்தல் 
  • அதிகமாக மது உட்கொள்வது 

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது ஏற்படும் அறிகுறிகள் 

  • அதிக பசி 
  • வியர்வை பெருகுவது 
  • உடல் நடுக்கம் 
  • படபடப்பு 
  • பலவீனம் 
  • தளர்ச்சி 
  • மயக்கம் 
  • பார்வை மங்குதல் 
  • மனநிலை மாற்றம் 

இந்த நிலைக்கான அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருந்தால், இதனை தொடர்ந்து மயக்கமும் சுயநினைவற்ற நிலையும் தோன்றும். இன்சுலின் சார்ந்த இளம் வயதினர்களுக்கு இழப்பு வருவது அறிகுறிகளில் ஒன்றாகும்.


சிகிச்சை 


சுய நினைவுடனும் உஷாராகவும் உள்ள ஒருவர் ரத்தத்தில் குறையும் சர்க்கரை அளவு சுமாரான பாதிப்புடன் இருக்குமேயானால் கைவசம் கிடைக்கக்கூடிய ஆகாரம் கலோரி அதிகம் இருப்பின் கவலை இன்றி எடுத்துக் கொள்ளலாம் பாதிப்பு அதிகம் இருப்பின் சர்க்கரையோ அல்லது குளுக்கோஸோ கொடுக்கப்பட வேண்டும் மயக்கமான நிலையில் நோயாளி சுய நினைவின்றி இருப்பின் டாக்டரிடம் காண்பித்து உடல் வலி செலுத்தும் குளுக்கோஸ் தரப்படுவதால் நோயாளி சில நிமிடங்களில் தன் நிலை வர ஏதுவாகும் 


தற்காப்பு நடவடிக்கைகள்

  • நாள்தோறும் குறித்த நேரத்தில் உண்ண வேண்டும் வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் அதாவது காலை மதியம் மாலை இரவு ஆகிய நான்கு வேலைகளில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் 
  • இடையிடையே மோர், தக்காளி, எலுமிச்சம் பழச்சாறு தெளிவான சூப் மற்றும் காய்கறி சாலட் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • தினமும் சிறுநீரிலும் ரத்தத்திலும் உள்ள சர்க்கரையை பரிசோதனை செய்வதோடு ரத்தத்தில் குறைவான சர்க்கரை தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளை குறைக்க வேண்டும்
  • மேலும் சந்தேகம் ஏற்பட்டால் டாக்டரை அணுகவும் 

இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


காலை உணவிற்குப் பிறகு மதிய உணவிற்கு முன் மாற்றங்கள் தோன்றினால் குறுகிய நேரத்திற்கு பயன்படுத்தக்கூடிய இன்சுலினை உதாரணம் (ஆக்ராபிட் அல்லது பிளைன்) மறுநாள் காலை எடுத்துக் கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளவும். இன்சுலினால் மாறுதல்கள் வேறு எந்த சமயத்திலாவது ஏற்படும் ஆனால் நீண்ட நேரத்திற்கு பயனளிக்கக்கூடிய இன்சுலின் உதாரணம் (மோனோ டாட்டர் அல்லது லென்டி) அளவை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக உடற்பயிற்சி செய்யும் போது உணவின் அளவை டாக்டர் அல்லது உணவு நிபுணரிடம் கேட்டு அதிகரிக்கவும். எப்பொழுதும் உங்களுடன் இனிப்பு குளுக்கோஸ் அல்லது சர்க்கரை எடுத்துச் செல்லவும். எப்போதும் வெளியே எடுத்துச் செல்லும்போது சாக்லேட் அல்லது சர்க்கரை தவறாமல் எடுத்து செல்லவும். முறையான உணவு கட்டுப்பாட்டில் இருப்பதின் மூலம் நீரிழிவு நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதனால் வரும் பாதிப்புகளை தடுக்கலாம் மாத்திரையின் தேவையை குறைக்கலாம். சரியான உடல் எடையை பராமரிக்கலாம். சர்க்கரை நோய் உணவு பற்றி மேலும் தகவல்களுக்கு healthline.com பக்கத்தைக் காண்க


🔴 சர்க்கரை நோய் உணவு அட்டவணை pdf


1 Comments

  1. தகவல்கள் முழுமையாக உள்ளன. படிப்பவர்கள் பயன் அடைவார்கள்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு