Trending

சுதந்திர தினம் கட்டுரை 2022

சுதந்திர தினம் கட்டுரை 2022



  
{tocify} $title={Table of Contents}

 

முன்னுரை


உலகம் தனது கண்களை ஈரத்துடன் இந்திய திருநாட்டின் பக்கம் செலுத்தி கொண்டிருந்த போது நாம் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தோம். இன்று இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றும் உலகம் தனது கண்களை இந்தியாவின் மீதிருந்து எடுத்தபாடில்லை. காரணம், விடுதலை அடைந்த மிக குறுகிய காலத்திலேயே பெரு வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக நம் இந்தியா வளர்ந்திருப்பது உலகம் அரசியலில் ஒரு ஆச்சரியம்.


இந்தியாவின் வளம் அளப்பரியது. வடக்கே வெள்ளி பனி மலைகள் முதல் தெற்கே திரண்டெழும்பும் ஆழி குமரி முனை வரை அதன் மேனி அழகை மேன் வளத்தை சொல்லிக் கொண்டிருக்கலாம். பெரு வளத்தை ஆங்கிலேயன் சுரண்டி தள்ளி சென்ற பின்னும் இந்தியா வீறு நடைக்கு எந்த தளர்வும் இல்லாதது சொல்லும் நம் வளத்திறத்தின் மாண்பை செரிவை.


இந்த 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நமக்கு கிட்டிய செல்வமாக கொள்ளலாம். இந்த 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் தலைமுறையில் நாமிருப்பதை எண்ணி உவகை கொள்ளலாம். அடுத்த 100வது சுதந்திர தின விழாவையும் நாம் கட்டாயம் சிறப்பிப்போம். 


இத்தகைய இச்சுதந்திர சுவாசத்தை இன்று நாம் திருப்தியோடு அனுபவிப்பதில் பலரின் அழு குரலும் வேதனைகளும் ஓலங்களும் மரண சங்கடங்களும் கலந்து இருக்கத்தான் செய்கிறது. அச்சுதந்திர தினத்தை அடையும் முன் இருந்த இந்திய அரசியல் நிகழ்வுகளையும் அதற்காக தன்னை கொடுத்த தியாகிகளையும் ஒரு நிம்மதி பெருமூச்சோடு அசைபோட்டு பார்ப்பதே இக்கட்டுரை.


இதையும் காண்க 

🔗 நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி

🔗 நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர்

🔗 வளமான இந்தியாவை உருவாக்குவோம் கட்டுரை

🔗 இந்தியா 2047-க்கான தொலைநோக்கு

🔗 2047ல் இந்தியா


தமிழ்நாட்டில் ஐரோப்பியர்


தமிழ்நாட்டில் முதன் முதலில் அடியெடுத்து வைத்த ஐரோப்பியர் போர்ச்ச்க்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா. கி.பி 1498 ஆம் ஆண்டு மூன்று வர்த்தக கப்பல்களுடன் மேற்கு கடற்கரைப் பகுதியான கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.


போர்ச்சுக்கீசியரின் நோக்கம்


அந்தக் காலகட்டத்தில் போர்ச்சுக்கீசியரின் நோக்கம் நில ஆக்கிரமிப்பு அல்ல. மாறாக அவர்கள் இந்திய அரசர்களுடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டு கிழக்குக் கடற்கரைப் பகுதியைப் போர்ச்சுக்கீசிய சந்தையாக்கிவிட வேண்டும் என்பதே ஆகும். அதை வாய்ப்பாகக் கொண்டு மக்களை சுத்தோலிக்க மதத்துக்கு மாற்றிவிடத் திட்டமிட்டனர். அந்த உள்நோக்கத்துடன் போர்ச்சுக்கீசியர் ஜெஸ்யூட்ஸ் பாதிரிமார்களை ஊக்குவித்தனர். 


🔗 வளமான இந்தியாவை உருவாக்குவோம் கட்டுரை


முதல் புரட்சி


தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியடிகள் மக்களுக்காக போராடிய போது அவருக்கும் பெரிதும் துணை நின்று உதவியவர்கள் தமிழர்களே. 


இந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்ட தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தும் விதமாக ஆங்கிலேயரான வின்சுடன் சர்ச்சில் பின்வருமாறு கூறினார்.


"மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உரைந்து உள்ளது"


அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.


"அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிப்பார்கள்" என்று


இந்தியாவில் எத்தகைய விடுதலை புரட்சி வெடித்தாலும் அதில் மறுக்க முடியாத முக்கிய பங்கை தமிழர் வகிப்பர்.


அதுபோல, இந்திய திருநாட்டின் விடுதலை புரட்சியை துவக்கிய வைத்ததோடு நில்லாமல் சுதந்திரதாகம் தாகத்தை இளைஞர் மத்தியில் தகிக்கும் தனல் போல ஆக்கிய பெருமை பூலித்தேவனுக்கு சேரும்.


1751 ஆண்டிலே இந்தியாவில் முதன்முறையாக வெள்ளையனுக்கு எதிராக ஒரு குரல் ஒலித்தது என்றால் அது பூலித்தேவனின் குரலே. 1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்துக்கும் பூலித்தேவனே முன்னோடியாகிறார்.


🔗 நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு பெருமைக்குரிய ஒன்றாகும். விஜயநகர, மதுரை சுல்தானிய, மராத்திய மேலாதிக்கங்களை அந்நிய ஆதிக்கமாகக் கருதாத தமிழ்நாடு, ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே தென்னிந்தியக் கிளர்ச்சி (1800-1801)க்குத் தோற்றுவாயாக இருந்தது தமிழ்நாடு. வேலூர் கிளர்ச்சியில் (1806) தமிழ்நாட்டுப் படைவீரர்கள் துணிவுடன் போராடினார்கள் . ஆயினும், அவ்விரு துவக்க கால ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் முறியடிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆங்கிலக் கல்வி பெற்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் உரிமை உணர்வும், விடுதலை வேட்கையும் பெற்று அரசியல் சார்ந்த அமைப்புகளை ஏற்படுத்தினர். சென்னை சுதேசி சங்கமும், சென்னை மகாஜன சபையும் அத்தகைய அமைப்புகளேயாகும். 1884 டிசம்பர் மாதம் சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் ஆண்டுக் கூட்டத்துக்குப் பின் திவான் இரகுநாதராவ் இல்லத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் கூடி இந்தியாவுக்குப் பொதுவான ஒரு அமைப்பை ஏற்படுத்தவும், அதன் மாநிலக் கிளைகளைத் துவக்கவும், அடுத்த ஆண்டு இறுதியில் தேசிய மாநாட்டைக் கல்கத்தாவில் கூட்டவும் தீர்மானித்தனர். ஆனால், அத்தீர்மானம் செயல் வடிவம் பெறுவதற்கு முன்னரே பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டுவிட்டது.


🔗 இந்தியா 2047-க்கான தொலைநோக்கு


வெள்ளையனே வெளியேறு


1942 ஆகஸ்டு 7,8 தேதிகளில் பம்பாயில் கூடிய காங்கிரஸ் 'வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தை கொண்டுவந்தது. அடுத்தநாள் காந்தி கைது செய்யப்பட்டார்.


1942 ஆகஸ்டு மாதம் முழுவதும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றன. அவையாவும் தனி நபர்களாலும், குழுக்களாலும், கூட்டங்களாலும் நடத்தப்பட்டவையேயாகும். அதனால் அப்போராட்டம் ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் இயக்கமாக உருவெடுக்க முடியாமல் போய்விட்டது. ராஜகோபாலாச்சாரியும் அவரது ஆதரவாளர்களும் காங்கிரசிலிருந்து வெளியேறியதால் ஆகஸ்டு கிளர்ச்சியில் அவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர். அதேபோன்று, மாணவர்களிடையேயும் தொழிலாளர்களிடையேயும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த கம்யூனிஸ்டுகள் இரண்டாவது உலகப் போரில் நேச நாடுகளை ஆதரித்ததால் அரசாங்கச் சார்புடையவர்களாக இருந்துகொண்டு 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை பலவீனப்படுத்தினர். தமிழ் நாட்டில் நாச வேலைகள் 1942 ஆகஸ்டு மாதத்தோடு முடிந்து விட்டன. அதன்பிறகு அகப்பட்ட காங்கிரஸ்காரர்கள் மீது சதி வழக்கு என்ற பெயரில் பல பொய் வழக்குகள் போடப்பட்டன.


1947, ஆகஸ்ட் 15 அன்று


இந்தியா சுதந்திரம் அடைந்த அன்றே தனது நிலப்பரப்பை இரண்டாக பிரித்து கொண்டது. 1.2 கோடி மக்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிலும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிலும் இடம்பெயர்ந்தனர். சுமார் 2 லட்சம் பேர் இறந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.


15 ஆகஸ்டு 1947 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக ஜவகர்லால் நேரு தலைமையில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பிரிவினையோடு துவங்கும் அந்நிகழ்வில் மகாத்மா காந்தி கலந்து கொள்ளவில்லை. 



🔗 2047ல் இந்தியா


1947, ஆகஸ்டு 15க்கு பின்


இந்திய நாட்டின் பிரிவினைக்குப் பின், பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினைக்கு முன்னர் மற்றும் ஒரு கலவரம் இந்துக்களுக்கும், சீக்கியருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்டது. இது இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதாவது பஞ்சாப், வங்காளம் மற்றும் டில்லியில் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 500,000 மக்கள் இறந்தனர்.


ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார். 26 ஜனவரி 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான அதே நாளில் இந்தியா குடியரசு நாடு ஆனது.


1951 முதல் 1952 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்ற முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் 562 மன்னராட்சி நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.


🔗 நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி


முடிவுரை


பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,

புன்மை யிருட்கணம் போயின யாவும்

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி


என நம் பாரத மாதாவின் திருப்பள்ளி எழுச்சியை அன்றே கணித்தார் பாரதி. நாம் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் உள்ளோம். இம்மாண்பு மிகு நிகழ்வுக்கு காரணமாய் இருக்கின்ற நமது விடுதலை வீரர்களை போற்றுவதை எண்ணி நாம் பேறுவகை கொள்ள வேண்டும். 


இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கினையும் மனதிற் கொண்டு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக தமிழர்களாகிய நாம் அயராது பாடுபடுவோம் என இந்த 75வது சுதந்திர தினத்தில் உறுதி எடுப்போம்.


அடுத்த கட்டுரை >

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு