Trending

பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்

 

பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்

முன்னுரை


கவிஞர் கண்ணதாசன் பாரதியார் இறந்த பல ஆண்டுகளுக்கு பிறகு அவரது பக்கத்து வீட்டு பிராமண பெரியாரை சந்தித்து, 'என்ன ஐயரே! பாரதியாரோடு பேசி உள்ளீர்களா? பழகி உள்ளீர்களா?' என்று கேட்டாராம். அதற்கு அந்த பிராமண பெரியவர், 'அவன் இவ்வளவு பெரிய ஆளா ஆவான்னு தெரிஞ்சு இருந்தா அவங்கூட பழகி இருப்பேன்' என்றாராம்.


பாரதி என்ற கவி ரதத்தை அவரது காலத்தோரே அசைக்க மறந்து போயினர். கவி பித்தனாகவும். சித்தம் கலங்கியவனாகவுமே பாரதியை இப்பாரதம் அன்று கண்டது. இன்றோ பாரதி கற்பனையில் பாரத தேசத்தை இம்மக்கள் படிக்கின்றனர்.


மதுரகவி மகாகவி பாரதியை பார் இன்று சிரத்தை எடுத்து கவனிக்கிறது. அவர் கண்ட பாரத தேசம் குறித்தே இக்கட்டுரை தொகுப்பு. பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம் 3500 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை படிக்க இங்கே தொடவும். கட்டுரை PDF கீழே தரப்பட்டுள்ளது


ஒற்றுமை


ஜனங்களிடையே ஒற்றுமை அமைந்தால் நாட்டில் தீங்கு இல்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடே இவ்வொற்றுமையை குழைக்கும் பிரிவினை வாதமாய் உள்ளது. நாட்டில் அமைதியுற சாதி களையை களைதல் அவசியம். 


➤ இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு


அத்தகு மேன்மை பொருந்திய காரியத்தை தன் சிந்தையுள் இட்டு சிரமேற் கொண்ட கவிஞர் பாரதி ஒருவரே.


ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே


ஒற்றுமையில் வளர்ச்சி உண்டாயின். நெடிந்துன்பத்திலும் ஒற்றுமையால் வீழ்ச்சி உண்டாம். பாரதி இப்பாரதம் ஒற்றுமையோடு அமைதியுற வாழ கற்பனை செய்வித்தார்.


அர்ஜூனா மனிதன் தான் ஆற்றும் செயல் என்று எதுவும் இல்லை. தான் என நினைப்பது அவன் ஆணவமே. உண்மையில் நீ செய்வது ஒன்றுமில்லை. அதனால் எல்லோரிடமும் அன்பு செலுத்துவாயாக. உலகமே சகோதர வர்க்கம் தான்.


என்று கீதையின் உட்கருத்தை பாரதியார் நிகழ்கால பாரதத்தில் விதைக்கலாம் அது வேரிட்டு விருட்சமாகும் என எண்ணினார். கற்பனை எல்லாம் நிஜமாவதில்லை என்பதை காலம் காட்டியது.


தன் வாழ்நாள் 39 ஆண்டுகளில் பாரத மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியே பெரும்பங்கை கவிகளில் அர்ப்பணித்தார்.


முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்!


பாரதியின் ஒற்றுமை முழக்கம் பரத கண்டத்து மக்களின் சிலர் செவிகளுக்கே எட்டியது.


➤ பாரதியார் பற்றிய கட்டுரை


வளர்ச்சி


அந்நிய நாட்டு வளர்ச்சி இந்திய தேசத்தின் நம் பாரத மாதவின் செங்குருதியை குடித்து பெருகியது. 


இதை வைத்தே நம் தேசத்து தந்தை மகாத்மா காந்தி அடிகள், லண்டன் என்ற சிறு நகரத்தை உருவாக்க உங்களுக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் தேவைப்படுகிறதா? என்று உணர்ச்சி பொங்க வினவினார்.


மக்கள் தங்கள் உழைப்பை வீணே வெள்ளையர்களுக்கு காணிக்கை ஆக்கினர். இதை பலர் களையெடுக்க எண்ணிய நிலையில் பாரதியார் ஒழித்தெடுக்க நினைத்தார்.


காரணம் பல்வேறு தேச தலைவர்கள் அந்நேரத்திற்கான தீர்வினை வழங்கினர். நாம் எப்படி ஆங்கிலேயர்களின் கை கூலியாகவும் ஒத்துழைக்காமலும் இருப்பது என்பதை பற்றி சிந்தித்தனர். பாரதி மட்டுமே இனி நம் நாட்டுக்கு என்ன தேவை என்பதை கற்பனை செய்ய தொடங்கினார்.


ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்


என்று வீரமுழக்கத்தை வெளிப்படுத்தினார். பாரதியார் வ.உ.சி போன்றோர்களுக்கும் மிதவாதிகளுக்குமே உற்ற நண்பராகவும் இருந்தார்.


காந்தி சொற் கேட்பார் காண்பார் விடுதலை கணத்திலே 


என்பார். அத்தோடு திலகர் போன்ற தீவிரவாதிகளையும் ஆதரித்து கவிபாடினார்.


பகைவனுக்கு அருள்வாய் என்றும் இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் என்றும் இருசாரர்க்கும் சமமானவரானார்.


➤ பாரதி ஓர் தெய்வமாகவி


➤ பாரதியின் காதல் கதை


கோல்கை விஷயத்தில் வ.உ.சி போன்றோரின் பழக்கம் கிடைத்ததில்,


நடையும் பறம்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்


என்ற செந்தழல் தெறிக்கும் வரிகளுக்கும் சொந்தகாரராய் ஆனார்.


உலக தொழிலனைத்தும் உவந்து செய்வோம் 


என்று பாரதி கற்பனையில் அநேகம் இன்று சாத்தியமானதாகும்.


கல்வி


கல்வியில் பெரும் ஈடுபாட்டை பாரதியார் நிகழ்த்த எண்ணினார். வங்காள மகாகவி ஆங்கிலேய கல்வி முறை மேலும் நம்மை அடிமைபடுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்தார். இதனால் தான் பெற்ற நோபல் பரிசின் மொத்த தொகையையும் ஓர் கல்வி சாலை அமைப்பதற்கே செலவு செய்தார்.


நோபல் பரிசு வாங்கவில்லை ஆனாலும் பாரதிக்கு தனி ஆரம்ப பள்ளிக்கூடம் அமைக்க ஆவல் கொண்டிருந்தார். இதற்கு தனது இந்தியா பத்திரிக்கையில் ஊக்க கட்டுரைகளையும் எழுதி வந்தார்.


ஊர் மக்கள் உபாத்தியார்களை நியமித்தி மாணவர்களுக்கு வேதம், உபநிடதம், பூமி சாஸ்த்திரம், ஸயன்ஸ், பௌதிக ஞானம், சரீர பயிற்சி, யாத்திரை மற்றும் நல் ஒழுக்கம் இவற்றை பயில்விக்க வேண்டும்


என்று பலமுறை தெரிவித்திருந்தார். தமிழ் மொழி கல்வியே ஞானத்தை போதிக்கும் என்பதற்காக தமிழ் மொழியிலே மாணவர்களுக்கு கல்வியினை தானம் செய்தல் வேண்டுமென கண்டிப்புடன் கூறியும் இருந்தார்.


இதனை தேசீய கல்வி என்று பெருமிதத்துடன் போற்றினார்.


தமிழ் வளர்ச்சி


பாரதி மணிபிரவாள நடை மன்னராக இருப்பினும் தமிழில் உயிரையே கொண்டிருந்தார்.


யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் 

இனிதாவது எங்கும் காணோம்


என்று நல்மொழி நவின்றார். அத்தமிழ் வாழ நற்றுணையும் செய்யும் வண்ணம்.


இங்கிலீஷ் பதத்திற்கு நிகரான தமிழ் பதத்தை ஆக்குவதில் அயராது உழையுங்கள். அதிலும் கட்டாயம் இங்கிலீஷ் உணர்வு - செயல்பாடு சொற்களுக்கு நிகராக தமிழ் சொல் ஆக்குங்கள். நிச்சயம் உணர்ச்சி சொல்லை ஆங்கிலத்தில் பயன்படுத்தாதீர்கள்


என்று பாரதி கூறிய வார்த்தை அறிவியல் கருத்தும் அடங்கியதாகும்.


எவனொருவன் உணர்ச்சி பதத்தை வேற்றுமொழியில் பயில்கிறானோ அவ்வுணர்ச்சியை அவன் அம்மொழி உதவியுடனே உணர்வான். அதோடு மட்டுமல்லாமல் அது மனதிற்கு நெருக்கம் உள்ளதாவும் தோன்றாது.


தமிழில் உணர்ச்சி சொல்லை பயன்படுத்துவதில் சொல் வளர்ச்சி மட்டுமன்றி மன அமைதியும் அடங்கியுள்ளது.


ஆங்கில வளர்ச்சியையும் பிற மொழி வளர்ச்சியையும் கூட பாரதியார் களைய எண்ணவில்லை. எவ்வாறு அவ்வவ் இனமொழி காரர்கள் அவர்களது மொழியினை உயர்வாய் எண்ணுகின்றனரோ அதே போல் பாரதியார் தமிழ் வளர்ச்சி இவ்வின வளர்ச்சியாக கற்பனை செய்தார்.


அதேபோல் ஒவ்வோர் இனமும் கற்பனை செய்ய அவ்வினம் மட்டுமல்லாது அத்தோடு இந்நாடும் வளம் பெறும்


முடிவுரை


பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம் நல்வழியை அடையுமென்பது சத்தியமாகும். தொழில் வளர்ச்சி, கலை வளர்ச்சி, மொழி வளர்ச்சி என பிரித்து நோக்காமல் பாரதி குடும்பங்களில் வளர்ச்சியையே பெரும் வளர்ச்சியாய் கருதினார். 


➤ பாரதி கற்பனையில் பாரத தேசம் 3500 வார்த்தை


இதையே மகாத்மா பல கோடி கிராமங்களின் வாழ்வே இந்தியாவின் வாழ்வு என்பார். அதேபோல் பலகோடி குடும்பத்தின் வாழ்வு அச்சமூகத்தின் வாழ்வாகும்.


சாதியினை ஒழிக்க கழகங்களையோ மற்ற பிற குழுக்களையோ பாரதியார் நம்பவில்லை கல்வியை நம்பினார். கல்வி மனதினை மாற்றும் சிறந்தொரு கருவி.


தான் எனும் அகந்தை அழியுமாயின் தற்பெருமை நீங்கும். இவ்வுலகம் எவ்வாறு வாழவேண்டும் என்று கருதுகிறாயோ அவ்வாறு முதலில் உன்னை நீ மாற்று


பாரதி கற்பனை செய்த இத்தேசம் வளம்பெற அவரது சொற்படி நடத்தல் அவசியமாகிறது. பாரதி பாதம் பட்ட இப்பாரத தேசம் பெரும் புண்ணியத்தையும் பெருகிறது.


➤ கட்டுரை PDF DOWNLOAD

2 Comments

  1. உண்மையான பாரதியை ஊருக்கு காட்டும் முயற்சி இந்த கட்டுரை.பாரதியை புரியாதவர்களுக்கும் புரிய வைக்க இது உதவும்.

    ReplyDelete
  2. ஓராண்டு முடியும் தருவாயில்
    சென்ற நூற்றாண்டின் ஈடிலா கவிஞனின் நூற்றாண்டு நினைவுநாளினை நினைவுபடுத்திய நல்ல பதிவு.
    தென்றல் வாசகரிலும் அதன் அத்தனை எழுத்தாளர்களிலும் பாரதியின் கனவின் தாக்கம் மின்னிக்கொண்டே இருக்கும்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு