Trending

ரமலான் வாழ்த்துக்கள் கவிதை படங்கள்

ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

தென்றல் இதழை படிப்போர் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள். மதங்களை கடந்த ஆன்மீக ஈர்ப்பினால் தென்றல் இதழ் நபிகள் நாயகத்தின் பெருமைகளை மட்டும் சொல்வதோடு மட்டுமல்லாமல் ரமலான் வாழ்த்துக்கள் கவிதைகளையும் வாசகர்கள் உங்களுக்காக தொகுத்து உள்ளது. அனைவரும் உங்களது இஸ்லாமிய நண்பர்களிடையேயும் உறவுகளிடையேயும் இந்த படங்களே பகிர்ந்து வாழ்த்துகளை மனதார தெரிவித்து கொள்ளுங்கள். எந்த துன்பத்தில் இருந்தும் இந்நன்நாளில் இருந்து அல்லாஹ் உங்களை காத்தருள்வாராக.

ரமலான் வாழ்த்துக்கள் கவிதை படங்களை Download செய்ய படங்களுக்கு கீழே இருக்கும் Download பொத்தானை அழுத்து படத்தை Long Press செய்து தரவிறக்கி கொள்ளவும்

ரமலான் வாழ்த்துக்கள் கவிதை படங்கள்

ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

பசியை
தூரமாக்கும்
பணிவை
ஆரமாக்கும்
கருணை
வருநாள்
ரமலான்
பெருநாள்


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

சென்றது
வலிகள்
தேய்பிறையாய்
வந்தது
வழிகள்
வளர்பிறையாய்


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

அல்லவை
நீங்க
நல்லவை
ஓங்க
அல்லாவை
பணிந்தான்
எல்லாமும்
அடைந்தான்


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

பிறை
வணங்குவோம்
நிறை
நேயத்துடனேயே
இறை
நெருங்குவோம்


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

பணிவு
பிறக்க
ஈகை
சிறக்க
அன்புடன்
அனைவருக்கும்
ரமலான்
வாழ்த்து


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

தொழுவோம்
அவனை
பெறுவோம்
கருணை
ஈகை
ஒன்றிலே
வாழ்தலும்
நன்று


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

பிறை
பார்த்து
இறை
தொழுவான்
குறை
தீர்ந்தே
நிறை
அடைவான்


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

என்
நோன்போ
பண்பானது
என்றும்
இறை
மாண்போ
அன்பானது


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

மண் பார்த்து
விளைவதில்லை
மதம் பார்த்து
தருவதில்லை
நேயமே
புனிதமாம்


ரமலான் வாழ்த்துக்கள் கவிதை

நல்லோர்
நன்மகிழ்
நன்னுடை
நன்சொல்
நல்லதே
நாடிடும்
நன்னாள்
இன்னாள்






Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு