அண்மை

தென்றல் தலை 1

 


தீபாவளி வந்துவிட்டது. யாரை பார்த்தாலும் 'தீபாவளி வந்துவிட்டதா?' என்று கேட்கிறார்கள். தீபாவளி வரும் போகும் ஆனால் துன்பம் அத்தனை எளிதில் போகாது. 


எல்லா பண்டிகைகளையும் போல சந்தோஷமான பண்டிகை மட்டுமல்ல தீபாவளி. அதிலே சில சங்கடங்களும் இருக்கிறது. இந்த பொங்கலை அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள் என யாராவது சொல்லி நீங்கள் கேட்டதுண்டா? ஆனால் தீபாவளிக்கு சொல்வார்கள்.


விநாயகர் படம் போட்ட வெடியை கையில் வைத்து வெடித்தால் விநாயகர் கூட காப்பாற்ற மாட்டார். அதனால் தீபாவளிக்கு பாதுகாப்பாக தயாராகுங்கள்.


இராமன் இராவணனை வதைத்துவிட்டு லங்காபுரியிலிருந்து அயோத்திக்கு சீதையுடன் வரும் போது அவ்வூர் மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்றதையே நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்றொரு கதை உண்டு. அதாவது தீப ஒளி திருநாள்.


இது ஒரு எளிமையான பண்டிகை. இதற்கு இத்தனை பகட்டு தேவையே இல்லை. 'கண் வனப்பு கண்ணோட்டம்' என்கிறது சிறுபஞ்சமூலம். கண்ணுக்கு அழகானது உன் கண்ணோட்டத்தில் தான் உள்ளதே தவிர ஆடம்பரத்தில் இல்லை.


வருடத்திற்கு ஒருநாள் தான் ஆடை வாங்குகிறீர்களா, வருடம் முழுவதும் போடுவது போல வாங்க வேண்டும். வருடத்திற்கொரு முறை உடுத்துவதுபோல் வாங்கலாகாது.


பேரியம் நைட்ரேட் உப்பு வைத்து தயாரித்த பட்டாசுகளுக்கும், சரவெடிகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டானது தடை செய்திருக்கிறது.


வருடத்திற்கு ஒருமுறை தானே வெடி வெடிக்கிறோம் அதில் என்ன கட்டுப்பாடு என சிலர் தன் மனஸ்தாபங்களை அள்ளி வீசக்கூடும்.


திடீரென எகிரும் ஒலி மற்றும் காற்று மாசுபாட்டால் இந்தியாவில் வருடத்திற்கு வருடம் இறக்கும் பறவைகள் மற்றும் நாய்களின் எண்ணிக்கை ஆயிரம் என்ற எண்ணிலிருந்து தொடங்குவதை பார்க்கும் போது வேதனையாய் இருக்கிறது.


அதனால் இந்த தீபாவளியை உங்கள் உயிரில் கவனங்கொள்வதோடு மட்டுமல்லாமல் உயிர்நேயத்தோடும், எளிமையோடும் அனுசரிக்க முயலுங்கள்.


தென்றல் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் 


ஆசிரியர்


இந்த தென்றலை காண இங்கே தொடவும்

3 கருத்துகள்