Trending

காந்தியடிகளின் பொன்மொழிகள்

 

காந்தியடிகளின் பொன்மொழிகள்

மகாத்மா காந்தியடிகள், மகாத்மா எனும் பட்டத்திற்கு உகந்தவர். காலம் அவரைத் தின்று செரித்தாலும் அவரது பொன்மொழிகள் சாகாது. அவற்றில் சில முக்கியமான பொன்மொழிகளையே இங்கு பதிவிட்டு உள்ளோம். இன்றைய காலத்தில் காந்தியடிகளை மதிப்போரைக் காட்டிலும் மதவெறியினால் அவரை பழிக்கு உள்ளாக்கி அவமதிப்போரே அதிகமாகி வருகின்றனர். அத்தகைய இச்சூழலில் காந்தியடிகளும் ஓர் சமத்துவ விரும்பியே. அவர் எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணிய மாண்பாளரே எனக்கூறி நிறுவி பொய்மை அகற்றி உண்மைச் சொல்ல வேண்டியது நம் கடமை. அதற்காகவே இந்த காந்தியடிகளின் பொன்மொழிகள் பதிவை வெளியிட்டுள்ளோம். இப்பதிவில் இடம்பெற்ற பொன்மொழிகள் காந்தியடிகளின் நூல் வழி மற்றும் கட்டுரைகள் வழி பெறப்பட்டவையே. இப்பொன்மொழிகள் வாயிலாக காந்தியடிகளை போற்றுவோம். சத்தியம் காப்போம்.


காந்தியடிகளின் பொன்மொழிகள் 1-15


1. சமூகத்தோடு ஒட்டி வாழும் தன்மையை உடையவன் மனிதன். தனி மனிதன் சாதனைகள் பிறருக்கும் உபயோகப்பட வேண்டுமானால் போதுமான அளவு சாமர்த்தியமுள்ள வேறு எந்த மனிதனுக்கும் சாத்தியமானவைகளாக அவை இருக்க வேண்டும்.


2. வாழ்க்கை வட்சியத்தை நோக்கி முன்னேறாமல் கீழ்நோக்கிச் செல்வது சுலபமான காரியம்.


3. மோசமான நிலைமை ஏற்படப்போகிறது என்றிருந்தால் அப்போது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதன் மூலம் அந்நிலைமை ஏற்படாதபடி தடுக்க முடியும். இது நாம் அனுபவபூர்வமாகக் காணும் உண்மை.


4. உலக மக்களின் செய்கைகள் நாசகாரச் செய்கைகளாக இருந்திருந்தால் உலகம் முன்னமே அழிந்திருக்கும் என்பதை நாம் உணர முடியாதா? அன்பு, அல்லது வேறுவிதம் சொல்ல வேண்டுமானால், அஹிம்சையால் தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது.


5. உலகுக்கு நல்லவளாக இருக்க நான் கடவுளுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.


6. நான் சாகவேண்டுமென்று தூற்றுக்கணக்கானவர்கள் விரும்பினாலும் சத்தியம் நிலைக்கட்டும்.


7. எனது நம்பிக்கையின் முதல் படி அஹிம்சை,கடைசிப்படியும் அஹிம்சையே.


8. நான் நம்பிக்கையை எப்பொழுதும் இழக்கவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்திலும் நம்பிக்கை எனதுள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும். என்றும் எனது நம்பிக்கையைக் கொல்ல முடியாது.


9. ஆத்மீக மனப்பான்மைக்குப் பீதியின்மையே முதல் தேவையாகும். கோழைகளிடம் தார்மீக மனப்பான்மையைக் காணமுடியாது. எங்கு பீதிநிலவுகிறதோ அங்கு மதம் இல்லை; கடவுளும் இல்லை.


10. உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அது போல ஆத்மாவுக்குப் பிரார்த்தனை மிகவும் அவசியம்.


11. ஹிருதய பரிசுத்தத்தில்தான் அழகைக் காண முடியும்


12. வாழ்க்கையின் ஒரு மாறுதலே சாவாகும். அதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆதலால் சாவை நாம் எப்பொழுதும் எதிர்பார்க்க வேண்டும். சாவுக்கு அஞ்சுபவன் கோழையே.


13. எப்போதும் மாணவர்களுக்கு சிறந்த பாட புத்தகம் அவர்களது ஆசிரியரே


14. பிறரை வெல்ல அன்பைத் தவிர வேறு நல்ல ஆயுதம் இல்லை


15. மன்னிப்பு என்பது பலமுடையோரின் குணம். பலவீனமானர்கள் ஒருபோதும் யாரையும் மன்னிக்க மாட்டர்.


காந்தியடிகளின் பொன்மொழிகள் 16-30


16. உண்மையைத் தவிர வேறு எந்த ராஜதந்திரமும் எனக்குத் தெரியாது


17. மதம் என்பது வேறொன்றும் இல்லை உண்மையும் உயிர்நேயமும் தான்


18. மதத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுபவர்களுக்கு மதம் என்றால் என்ன என்றே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.


19. ஒரு நாட்டின் மகத்துவத்தை அந்நாட்டின் வாயில்லா ஜீவன்கள் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைக் கொண்டு தீர்மானிக்கலாம்.


20. மனிதரின் சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி


21. உறுதியான மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட சிறு குழுவால் வரலாற்றின் போக்கையே மாற்ற முடியும்.


22. இந்த உலகத்தை மாற்ற விரும்பினால் முதலில் உன்னை மாற்று


23. எல்லா நீதிமன்றங்களை விடவும் உன் மனசாட்சி சிறந்தது. 


24. இந்த உலகத்திற்கு உண்மையான அமைதியை போதிக்க வேண்டும் என்றால் முதலில் அதனை குழந்தைகளிடம் இருந்தே துவங்க வேண்டும்.


25. மற்றவர்களை கெட்டவர்கள் என்று கூறுவதன் வழியாக ஒருபோதும் நாம் நல்லவராகிவிட முடியாது.


26. செய்யும் வேலையை விட வேலையின் முடிவைப் பற்றி அதிகம் கவலை கொண்டால் தடைகளும் குற்றங்களுமே கண்ணில் தென்படும்


27. தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் இல்லை


28. எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மை தான் அடிப்படை


29. வன்முறையை விரும்பும் மனிதர்கள் வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில் அவர்களது வன்முறையே அவர்களை கொன்றுவிடுகிறது.


30. நம்பிக்கை காரணத்தோடு இருக்க வேண்டும். குருட்டாம் போக்காய் இருக்கக்கூடாது.


காந்தியடிகளின் பொன்மொழிகள் 30-50


31. உலகில் போதுமான அளவு வளம் உள்ளது. பேராசைக்கான அளவு வளம் இல்லை


32. சக மனிதரின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவனே உண்மையான தலைவன்


33. முயற்சியில் தான் மகிழ்ச்சியே ஒழிய முயற்சியை அடைந்ததில் இல்லை


34. கண் பார்வை அற்றோர் குருடர் அல்லர். தன் குற்றத்தை உணராதோரே குருடர்


35. கோபத்திற்கு சரியான பதில் அமைதியே


36. நமது இன்றினை நம்பி இருக்கிறது நமக்கான நாளை


37. அழிவிற்கு மத்தியில் வாழ்வும் கட்டாயமாக இருந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். ஆதலால் அழிவிற்கும் மேலாக உயர்ந்தொரு நெறி இருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்ட நெறியின் கீழ் மட்டுமே நல்ல ஒழுங்கான சமூகம் அர்த்தம் உள்ளதாகவும் வாழ்வதற்கு உகந்ததாகவும் இருக்க முடியும்.


38. அகிம்சை மனோ நிலையை அடைவதற்கு மிகவும் கடுமையான பயிற்சி தேவையாய் உள்ளது. ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கை போன்று அதுவும் ஒரு நியமத்துடன் கூடிய வாழ்க்கையாகும்.


39. நான் என்னை ஒரு தேசியவாதி என்று கூறிக் கொள்கிறேன் ஆனால் என் தேசியம் பிரபஞ்சத்தை போன்று பரந்ததாகும்


40. என் தேசியம் முழு உலகத்தின் நன்மையும் உள்ளடக்கியது


41. பாரதம் மற்ற நாடுகளை எரித்த சாம்பலில் இருந்து எழுவதை நான் விரும்பவில்லை. பாரதம் ஒரே ஒரு மனிதனைக் கூட சுயநலத்திற்காக பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை


42. நம் தளவாடங்கள் ஏற்கனவே தோற்றுவிட்டன. நாம் இப்பொழுது புதிதாக ஏதாவது வழியை தேடுவோம் நாம் சத்தியமாகிய கடவுளையும் அன்பின் சக்தியையும் முயல்வோம். நமக்கு அது கிடைத்து விட்டால் வேறு எதுவும் வேண்டி இருக்காது


43. நான் உலக சமாதானத்திற்கு குறைவான வேறு எதற்காகவும் போரிடவில்லை


44. இந்திய இயக்கம் பலாத்காரம் அற்ற சத்தியாகிரக அடிப்படையில் வெற்றிக்கு அழைத்து செல்லப்படுமானால் அது தேசபக்தி என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுக்கும்


45. நான் ஒருபோதும் பொய்மையோடு ஒன்றியதில்லை. அது எனக்கு இயற்கையாகவே இல்லை


46. மனிதன் தன்னை எல்லோரிலும் கடையனாக கருதாத வரையில் விடுதலை அவனிடமிருந்து விலகி தான் இருக்கும்


47. அகிம்சை என்பது பணிவின் கடைசி நிலை அந்த பணிவு இன்றி விடுதலை ஒருபோதும் கிட்டாது


48. நான் கண்ட சத்திய தரிசனம் ஆயிரம் சூரியன் சேர்ந்தாலும் அளந்து காண முடியாத மகத்தான ஒளி கொண்ட சத்திய ஜோதி


49. எல்லா உயிர்களையும் தன்னைப் போலவே நேசிக்கும் ஆற்றல் பெறுவது மிக அவசியம். ஆன்ம தூய்மையின்றி உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிடத்தும் ஒன்றி நிற்கும் அனுபவத்தைப் பெற முடியாது. ஆன்ம தூய்மை இன்றி அஹிம்சா வழியையும் கடைபிடிக்க முடியாது. தூய்மையற்றவன் இறைவனை காண தகுதியற்றவன்.


50. என் வாழ்க்கையே நான் இந்த உலகிற்கு தரும் செய்தி


காந்தியடிகளின் பொன்மொழிகள் படங்கள்


காந்தியடிகளின் பொன்மொழிகள்

காந்தியடிகளின் பொன்மொழிகள்

காந்தியடிகளின் பொன்மொழிகள்

காந்தியடிகளின் பொன்மொழிகள்

காந்தியடிகளின் பொன்மொழிகள்

காந்தியடிகளின் பொன்மொழிகள்


Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு