Trending

நேருவும் குழந்தைகளும் கட்டுரை

 

நேருவும் குழந்தைகளும் கட்டுரை
படம்: தினமணி


முன்னுரை


குழந்தைகள் மீது அதீதமான அன்பு கொண்ட ஜவகர்லால் நேரு அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். பண்டித நேரு என்று பெரும் தலைவர்களால் மதிப்போடு அழைக்கப்பட்ட பண்டிதர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் நவம்பர் 14 குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தனது பிறந்தநாளே ஒட்டுமொத்த குழந்தைகளுக்கான நாளாக இருப்பதையும் அவருக்கும் குழந்தைகளுக்கும் இருக்குமான அன்பு பந்தத்தையும் இக்கட்டுரையில் காண்போம்.


குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. குழந்தைகளைக் கொண்டாடிய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பிறந்த தினம் 'குழந்தைகள் தினமாக' கொண்டாடப்படுகிறது. பள்ளிக் கல்வியோடு பொது அறிவு, வலிமை, துணிவு, திறமை, ஆராய்ச்சி என்று பலவகையான திறமைகளையும் குழந்தைகள் பெற வேண்டும். அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி, இந்தியாவை வளம் கொழிக்கும் நாடாகச் செய்வார்கள்; தலைமை ஏற்று வழி நடத்துவார்கள். அதனால் குழந்தைகளை அன்பாய் அரவணைத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினார் நேருஜி.


➤ ரோஜாவின் ராஜா நேரு கட்டுரை


அந்த அன்பின் ஊற்றாலே குழந்தைகளால் நேரு 'நேரு மாமா' என்றும் அழைக்கப்பட்டார். எனவே தான் அவர் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.


குழந்தைகளுக்காக நேரு


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமாரான பண்டித மணி ஜவகர்லால் நேரு குழந்தைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற முன்னெடுப்பால் பல்வேறு திட்டங்களை குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தினார்.

  • குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டும் பல திட்டம் அறிமுகம் ஆனது
  • பள்ளிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவோடு பால் கொடுப்பதற்கு நேரு முனைந்தார்
  • சினிமாத்துறையில் குழந்தைகளுக்கென 1955 ஆம் ஆண்டு இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கத்தை உருவாக்கினார்
  • நேரு தன்னுடைய மகள் இந்திரா பிரியதர்ஷினி என்ற இந்திரா காந்திக்கு அனுப்பிய கடிதங்கள் நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அன்பினை வெளிப்படுத்துகிறது.

ஐந்தாண்டு திட்டத்தில் குழந்தைகள்


இந்தியாவில் நேருவின் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது இந்தியாவில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நேரு அவர்கள் இலவசமான ஆரம்பக் கல்வியினை கட்டாயம் ஆக்கினார். குழந்தைகளின் எதிர்கால நலனில் எத்தனை முக்கிய இடத்தினை கல்வி பெறுகிறது என்பதனை வெளிநாடுகளில் கல்வி பயின்ற ஜவகர்லால் நேரு நன்கு அறிந்திருந்தார்.


➤ நேரு பற்றிய கட்டுரை


குழந்தைகள் குறித்த நேருவின் பொன்மொழிகள்


குழந்தைகளுக்கு சரியான கல்வியை அளிப்பதன் மூலமே நாட்டில் மேன்மையான ஒழுக்கத்தினை உருவாக்க முடியும் 


குழந்தைகள் தோட்டத்தில் இருக்கும் மலர் மொட்டுகள் போன்றவர்கள், அவர்களே தேசத்தின் எதிர்காலம் மற்றும் நாளைய குடிமக்கள் என்பதால் அவர்களிடத்தில் மிகவும் கவனம் தேவை


அன்பு ஒன்றே குழந்தைகளைத் திருத்த வழி. குழந்தையுடன் அன்பால் நட்பு செய்தால் மட்டுமே அந்த குழந்தையை மிகச் சரியாக புரிந்து கொள்ள இயலும்


ஒட்டுமொத்த சமுகத்திற்கும் சேவை செய்யவே கல்வி போதிக்கப்படுகிறது. இதை குழந்தைகள் சரியாக புரிந்து நடந்து எதிர்கால இந்தியாவை மேம்படுத்த வேண்டும்.


நேருவின் குழந்தைப்பருவம்


நேரு தன் சிறுபிள்ளை வயதில் இருந்தே நாளிதழ்கள் படிப்பதை கடமையாகக் கொண்டிருந்தார்.


அந்த நாளிதழ்கள் மூலம் ஆகாயத்தில் பறக்கச் சோதனைகள் நடப்பதைப் பற்றியும், ரஷ்யா, ஜப்பான் யுத்த நடவடிக்கைகளைப் பற்றியும், இங்கிலாந்து தேர்தல் பற்றிய விபரத்தையும், அறிவியல் சம்பந்தமான செய்திகளைப் பற்றியும் நன்கு தெரிந்து வந்தார். அதன் மூலம் ஆசிரியர்கள் கேட்கும் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தார்.


➤ விடுதலைப் போரில் நேரு


அதற்காக அவரைப் பாராட்டி புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன. அந்த புத்தகங்களில் ஒன்று 'கரிபால்டியில்' வாழ்க்கை வரலாறு. அநஅத புத்தகத்தைப் படித்த ஜவகருக்கு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பாரத நாட்டை மீட்க வேண்டுமென்ற எண்ணம் அன்றே அவருள் எழுந்தது. 


இதனால் தான் சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குழந்தைகள் மீது அத்துனை அக்கறை செலுத்தி வந்தார். பசுமரத்து ஆணி போல் குழந்தைப் பருவத்தில் நமக்கு கிடைக்கும் அனுபவங்களே பின் நாளைய நமது வாழ்க்கையினை நிர்ணையம் செய்கிறது. இதற்கு நேரு வாழ்வு ஒரு உதாரணம்.


முடிவுரை


அண்ணல் காந்தியடிகளின் அன்பு வழியில் சென்ற ஜவகர்லால் நேரு இந்தியாவை நேசித்தார், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தார். அதற்காக இந்திய மண்ணின் குழந்தைகளை தயார்படுத்தினார். நேருவும் குழந்தைகளும் பரஸ்பர அன்பையும் அறிவையும் பரப்பினார்கள். நம் தாயகம் 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அன்றிருந்து இன்று வரை இந்தியா தன் கல்வி நிலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. பண்டிதர் ஜவகர்லால் நேரு அவர்களின் தொலைநோக்கு பார்வையும் குழந்தைகளின் மேல் அவரால் அரசு காட்டிய அக்கறையுமே இன்றைய இந்தியாவாக தலைநிமிர்ந்து நிற்கிறது. அதை வாழ்த்தி வணங்கி உயர்த்த முனைவதே இந்தியராகிய நமது கடமை


நேருவும் குழந்தைகளும் கட்டுரை pdf


கட்டுரையை Download செய்க 

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு