Trending

தளபதி 66 கதை இதுதான்!

தளபதி 66 கதை


விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாகிவிட்டது. அது வெளியாகும் முன்பே விஜய் ரசிகர்களால் "தளபதி 66" விஷயம் கசியத்தொடங்கியது. பிறகு விஜயும் ராஸ்மிகா மந்தனாவும் இணைந்து நிற்கும் படம் வெளியாகி தமிழ் சினி உலகை சூடுபிடிக்க தொடங்கின.


மாஸ்டர் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே 'சூரரை போற்று' இயக்குநர் சுதா கொங்கரா விஜய்க்கு கதை சொல்லி இருந்தார். பீஸ்ட் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, அட்லீ, லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், ரவி அரசு போன்றோர்களும் விஜய்க்கு கதை சொல்லி இருந்தார்கள்.


இதைவிடுத்து, கலைப்புலி தாணு, லலித், முரளி ராமசாமி போன்றோரும் விஜய்யின் கால்சீட்டுக்கு காத்துகொண்டிருந்தனர்.


எப்போதும் விஜய் ஒருபடத்தை நடித்த முடித்த பிறகு ஒரு மாதம் ஓய்வில் இருப்பார். அதன் பிறகு தான் அடுத்தபடத்துக்கு தயராவார். அந்த படமும் 'விஜய் வந்தால் ஆரம்பித்துவிடலாம்' என்ற நிலையில் தயராகி இருக்கும். இதுதான் விஜய் அடுத்தடுத்த படங்களை வெற்றியடைய செய்வதற்கான ரகசியம்.


'பீஸ்ட்' நடித்து முடித்த பிறகு ஒருமாதம் ஓய்வில் இருந்த விஜய் அடுத்து கலைப்புலி தாணுவிற்கு கால்சீட் தரப்போவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜூவுக்கு விஜய் கால்சீட் கொடுத்தார்.


தளபதியின் 66வது படத்தை தெலுங்கின் பிரபலமான இயக்குநரான 'வம்சி' இயக்கபோவதாக பேசப்பட்டது. பின் அது உறுதியானது.


விஜய் இத்தனை தமிழ் கதைகளை தள்ளிவிட்டு தெலுங்கு கதைக்கு ஓகே சொன்னதை பற்றி சினி வட்டாரம் பேசி கொள்வது என்னவென்றால், தமிழில் விஜய் இப்போது 80 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு உள்ளார். தெலுங்குப்பட தயாரிப்பாளரான தில் ராஜூ விஜயை 120 கோடிக்கு ஓகே செய்து உள்ளார். இதனால் விஜயின் தற்போதைய சம்பளம் உயரும். அதனால் தான் விஜய் இந்த படத்திற்கு நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.


இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளர், '20 வருடங்களாக இப்படி ஒரு கதையை கேட்டதில்லை' என்று விஜய் கூறியுள்ளதாக கூறி பெருமைபட்டார்.


ஏற்கனவே காஜல் அகர்வாலையும் சமத்தாவையும் வைத்து வம்சி எடுத்த 'பிருந்தாவனம்' படம் தரமான வெற்றியை பெற்றது. இப்போதும் வம்சி தன்னுடைய அக்மார்க் பாணியான குடும்ப பட கதையையே விஜயை வைத்து செய்ய உள்ளார்.


இதற்காக ஹைதராபாத் ஏர்போர்ட் அருகில் மிகப்பெரிய வீடு ஒன்று தயாராகி கொண்டுள்ளதாக விஷயங்கள் வருகிறது. அதுவும் படத்தின் முக்கால்வாசி காட்சிகள் பீஸ்ட் படத்தை போலவே அந்த வீட்டில் தானாம். ஆனால் ஹைதராபாத்திலே 2 மாதங்கள் தங்கி நடிக்கும் வகையில் இருப்பதால் விஜய் வீட்டு செட்டை சென்னையில் போட சொல்லி இருக்கிறார்.


தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, மாமா, அத்தை என்று ஏகப்பட்ட நபர்கள் இருப்பதாக கதை உள்ளதாம். 


தன்னுடைய ஆரம்ப நாட்களில், 'பூவே உனக்காக' 'லவ் டுடே' 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற குடும்ப காதல் படங்களில் விஜய் நடித்துகொண்டிருந்தார். அந்த படங்கள் தான் அவருக்கு முதன்மையான ரசிகர்களை பெற்று தந்தது. பின் 'போக்கிரி' படம் வந்ததில் இருந்து விஜய் ஆக்சன் பாணியை கையிலெடுத்தார். அதிலிருந்து அவரது வளர்ச்சி அசுர வளர்ச்சியானது. 


விஜய் 66 படம் இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளதால் ரெண்டு மொழிகளிலும் பிரபலமாக உள்ள கதாநாயகியை போட படக்குழு முனைந்துள்ளது. விஜயுடன் நடிக்க ஏற்கனவே பல நடிகைகளுக்குள் போட்டி இருக்க, 'கீர்த்தி சுரேஷ்' தன்னை போட சொல்லி கேட்டிருந்தாராம். அதே சமயத்தில் இன்னொரு வாய்ப்பையும் விட்டுவிட கூடாது என்று எண்ணிய பீஸ்ட் நடிகை 'பூஜா ஹெக்டே'வும் விஜயுடன் மீண்டும் கைகோர்க்க தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்துள்ளார். ஆனால் கடைசியாக படக்குழு ராஸ்மிகா மந்தனாவை கன்பார்ம் செய்துவிட்டது.


நடிகையும் முடிவு செய்த உடனேயே படவேலைகள் அதிகமாயின, கடந்தவாரம் தளபதி 66க்கான அனைத்து வேலைகளும் தொடங்கப்பட்டது


வம்சி சொன்ன குடும்பக்கதை விஜயின் சம்பளத்தை 80 கோடியிலிருந்து 120 கோடிக்கு சந்தேகம் இல்லாமல் உயர்த்தும். அதே சமயம் தமிழ் நடிகர்களின் திறமையை இந்திய சினிமா அறிந்து கொள்ள இந்த படம் ஒரு வாய்ப்பாகவும் அமையும். 


சினிமேன்

2 Comments

  1. ஓ இதுதான் கதையா?

    ReplyDelete
  2. குடும்ப கதையில் நடிக்கிறாரா? அவர் ரசிகர்களுக்கு அது செட் ஆகுமா? விஜயின் புது முயற்சி. பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு