Trending

முட்டை சைவமா? அசைவமா?

 முட்டை சைவமா? அசைவமா?

egg veg or non tamil


ஒர் உயிர் நேயவாதியால் இந்த கேள்விக்கு எளிதில் பதிலளிக்க முடியும் என்பது என் நம்பிக்கை.


அந்தவகையில் உயிர்நேயத்தை கடைபிடிக்கும் அடியார் பலருள் இந்த அடியேனும் ஒருவன்.


முட்டை சைவமா? அசைவமா? என்ற வாதத்திற்கு முன்னே, சைவம் என்றால் என்ன? அசைவம் என்றால் என்ன? என்பதை விளங்கிக் கொள்ளுதல் உசிதம்.


சைவம் என்பது சிவம் என்ற சொல்லின் திரிபே ஆகும். 


சைவர்கள் என்போர், "காக்காய்  கறி சமைத்து கருவாடு

மென்று தின்பர் சைவர்" என்பார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்.


அதாவது, "கால் காய்கறி சமைத்து உயிராகிய கரு வாடுமென்று மென்று தின்பர் சைவர்" என்பது பொருள்.


இதை கடைபிடியாதோர் அ சைவர்.


யார் சைவன்? யார் அசைவன்? என்ற கேள்விக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமி அவர்கள், "ஓர் உயிரை கொல்லும் போது கண்களில் நீர் சுரந்தால் அவன் சைவன், வாயில் நீர் சுரந்தால் அவன் அசைவன்" என்ற உயிர்நேய ரீதியில் சொன்ன பதிலையும் கூட முன்னமே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டெழுதியிருந்தேன்.


ஊன் சிதைப்பால் உணவெடுப்போரையும் அந்த ஊன் தந்த உயிரையும் கண்டு ஊனுருக இறைவனிடம் பிரார்த்தனை செய்து, 'அறியாமையால் இவர் இந்த பாவத்தையும் என் மீதே ஏற்றிவிடு இறைவா' என்று வேண்டுவது சன்மார்க்கத்தின் இயல்பு.


அந்த வகையில் சன்மார்க்க உயிர்நேயவாதிகளுக்கு இந்த அருள் இல்லா உலகத்தில் ஆயுள் அதிகம் இருக்காது போகும் என்றே எண்ணுகிறேன்.


பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் போடும் முட்டைகள் சைவம் தான் என்று விலங்கியல் மாணவர்களிலிருந்து ஆய்வாளர்கள் வரை அனைவோரும் கூறுகிறார்கள்.


"நாட்டுக் கோழி முட்டைகளில் மட்டுமே கரு இருப்பதால் அவை மட்டும் அசைவத்தில் சேர்க்கப்படும்" என்கிறார் விலங்கியலாளர் சாமுவேல் ஜோசப் ராஜ்.


இதன் விரி என்னதுவென்றால், "பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகளில் கொழுப்பும் புரதமும் இதர சத்துகளின் கூட்டுமே உண்டே தவிர அதில் உயிர் இல்லை அதனால் அதை உண்பது எவ்வகையிலும் உயிர் கொலை ஆகாது ஆனால் நாட்டுக் கோழிகள் இடும் முட்டைகளில் கரு உண்டு. அவை இடும் முட்டைகளில் உயிர் இருப்பதால் அதை உண்பது உயிர் கொலை ஆகிறது. அதனால் பண்ணை கோழி இடும் முட்டைகள் சைவம், நாட்டுக் கோழி இடும் முட்டைகள் அசைவம்"


தேவையான விடைக்கு ஏற்றார் போல மனித புத்தி அற்பமான வகையில் கேள்வியையும் அந்த விடை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் உண்டு செய்து கொள்கிறது.


எந்த ஒரு உயிரும் தனது இனத்தை பெருக்கி கொள்வதற்கான ஓர் அமைப்பை இயற்கையிலே கொண்டுள்ளது.


மனித இனம் தாய் வயிற்று வழியே எனில் கோழிகளுக்கு தனது தாய் இடும் முட்டை வழியே கருவாகி பின் உருவாகிறாது.


இப்படி ஒரு இயற்கையான பிறப்பமைப்பில் பண்ணை கோழிகள் இடும் முட்டையில் மட்டும் அதிசயமாய் கருவே உருவாகவில்லை எனில் இந்த மூடத்தனமான அழி செயலை உருவாக்கியது யார்?


ஆசைக்காக பிற உயிர்களை தன் தேவைக்கேற்ப இரை ஆக்கும் அற்ப புத்தி மனிதனுக்கு ஒரு சாபக்கேடு.


பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு 'ஸ்டீராய்டு' என்ற மருந்து பொருள் செலுத்தப்படுகிறது. இது ஒரு கோழியை தன் இயல்பிலிருந்து வேகமாகவே வளரச்செய்யும் தீஆற்றலை தரும் அதோடு இந்த ஸ்டீராய்டில் இருக்கும் வேதிப்பொருள் இயற்கையே ஓர் உயிர்க்கு தந்த அமைப்பான இன்னொரு உயிரை இவ்வுலகுக்கு தரக்கூடிய கருவினை உற்பத்தி செய்யும் திறனையே அந்த கோழியிடம் இருந்து பறித்தெடுக்கிறது.


மனிதன் இதனால் ஒரு கரு உற்பத்தி ஆகும் முன்பே அதை அழித்து, கருவே அதில் இல்லை ஆதலால் முட்டையை உண்பது உயிர் கொலையில் சேராது என்று ஆய்வறிக்கை கொடுப்பது எத்தனை மூடத்தனம்.


நாம் எல்லோரும் இந்த இயற்கையின் படைப்புகளே. ஈ எறும்பு ஆடு மாடு கோழி எல்லோருக்கும் உயிர் என்பது ஒன்றே. உங்களது காலில் ஒரு முள் குத்தினால் எவ்வாறு வலிக்குமோ, அவ்வாறே தான் அவைகளுக்கும் வலிக்கும். 


முள்ளினை எடுக்க உங்களுக்கு கை இருக்கிறது. பாவம், நம்மை அண்டி பிழைக்கும் உயிர்கள். கத்தி அழுவதை தவிர அதற்கு ஒன்றுமே தெரியாது.


மனிதன் தன் சுயநலத்திற்காக ஒரு உயிரின் இயற்கை அமைப்பையே முற்றிலுமாக மாற்றி, ஒரே ஒரு ஊசியில் அதன் வம்ச விருத்தியையே ஓழித்துக்கட்டி இப்போது முட்டையில் உயிர் இல்லை அதனால் அது சைவம் தான் என்று கூறுவது எத்தனை வேதனையாய் உள்ளது தெரியுமா?


ஒரு பெண்ணிற்கு இரண்டொரு ஊசியை செலுத்தி அவளின் தாய்மையையே பறித்தெடுக்கும் காரியத்தை அல்லவா மனிதன் கோழிகளுக்கு செய்து கொண்டிருக்கிறான்.


இப்படி இருக்க எந்தவகையில் கோழியின் முட்டை சைவமாகும்? உயிரான கரு வாடிவிட்டது இனி அங்கே வெறுமை அன்றி ஒன்றுமில்லை. 


உடலை மட்டும் பெற்றெடுக்கும் தாயின் கண்ணீர், ஓர் உயிரை இழந்ததாய் எண்ணும் போது, கரு இல்லாத வெற்று முட்டையும் ஓர் உயிர் உறைய வேண்டிய வாசலாகும் என்பதை உணருங்கள்.


இன்றைய அறிவியல் அந்த சிறு உயிரையும் அழித்த பிறகே தான் முட்டையை சைவம் என்கிறது என்பதையும் உணருங்கள்.


முடிவு


உயிர்கொலையை நேரடியாக செய்யாமல் மருந்தின் மூலம் இரத்தத்தின் வழியே மறைமுகமாக செய்து, கருவையே இல்லாமல் செய்துவிட்டு முட்டை உயிர்கொலை அல்ல அது சைவம் தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


உடலை பெருக்க பிற உயிரை அழிப்பது தகாது. அதுவும் கருவிலே அழிப்பதை காட்டிலும் கொடுஞ்செயல் இருக்காது.


கருணையாளன் இதை புரிந்து கொள்ளட்டும்.


எல்லா உயிரும் வாழட்டும். 


தீசன்

👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 39

6 Comments

 1. அர்ஜுனன் உறவினரை கொல்ல தயங்கிய போது உடல்தான் அழிகிறது. உயிருக்கு அழிவில்லை கொல்லத் தயங்காதே கிருஷ்ணர் சொல்கிறார். ஒரு பொருள் அழிந்தால்தான் ஆக்கம் நடைபெறும். பாவங்கள் தீரும் வரை பிறவிகள் தொடரும். அது நாயாகவும் நரியாகவும் இருக்கலாம். ஒரு நாய்க்கு மானம் நிகழ்கிறது என்றால் அப்பிறவியில் பாவம் தீர்க்கப்படுகிறது. ஒருவரது குணங்கள் கூட இறைவனால் தீர்மாணிக்கப்பட்டவையே. கஞ்சன் என்று ஒருவனை கரித்து கொட்ட வேண்டிய அவசியம் இல்லை. அக்குணம் அவனுக்கு இறைவனால் கொடுத்து அனுப்பப்பட்டது. பிற உயிர்கள் கொல்லப்பட்ட கூடாது என்பதை ஏற்கலாம். ஆனால் விதிக்கப்பட்டது என்பதை உணர வேண்டும். நமக்கும் மரணம் உண்டு. அது இவ்வகை மரணம் என்பதை படைத்தவன் முடிவு எடுக்க முடியும். நமக்கு அந்த உரிமை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நல்லது. உரிமை இல்லாத போது அத்தீமைக்கு காரணமாகாமல் இருப்பது நல்லது

   Delete
 2. தெரிந்துகொண்டபிறகு கஷடமாக உள்ளது

  ReplyDelete
 3. I'm also agree.. egg is definitely non veg

  ReplyDelete
 4. அப்படியே 'பால்' சைவமா அசைவமா என்பதையும் ஒரு ஆய்வு விசாரணை செஞ்சு புடுங்க புண்ணியமா போகும்..

  ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு