Trending

நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? மக்கள் கருத்து

 
மதுசுந்தரேஸ்வரன், புதூர்


ஆரோக்கியமாக வாழ தகுதியான மருத்துவர்கள் தான் தேவை, தகுதியானவர்கள் கண்டறிய நீட் தேவை


அழகேஸ்வரன் கா, இராமநாதபுரம்


ஒரே நாடு ,ஒரே மதம், ஒரே மொழி என்று பேசுபவர்கள்

ஏன் ஒரே நாடு, ஒரே கல்வியை (சமச்சீர் கல்வி) பற்றி பேச மறுக்கிறார்கள் ?

நாடு முழுவதும் பொதுக்கல்வி முறை (சமச்சீர் கல்வி) வேண்டும் . நீட் வேண்டாம்


பொன்னியின் செல்வன் மு, பட்டுக்கோட்டை


மாநில மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதில் ஒன்றிய அரசு தலையிடுவது தவறு. அதேபோல் ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேரவேண்டும் என்றால் அதற்கு ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் செலவாகிறது ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்களால் இந்த செலவைச் செய்வது கடினம். அதேபோல் தமிழ் மொழிப்பெயர்ப்பில் தவறுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது ஆனால் அதற்கும் தீர்வு காணப்படவில்லை. அதேபோல் எனக்குத்தெரிந்து எந்த நுழைவுத்தேர்விலும் நகைகள்,முழுநீள கைச்சட்டை அணிய கூடாது என்று விதியில்லை நீட் தேர்வில் மட்டும் ஏன் இப்படி? நாங்கள் யாரும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வை எதிர்க்கவில்லை ஆனால் மாநில அரசின் மருத்துவக்கல்லூரிக்கு மத்திய அரசு நுழைவுத் தேர்வு வைப்பது என்பது எதிர்க்கப்பட வேண்டியது தான்.


குரு தண்டபாணி, திருச்சி மாவட்டம் 


அது தகுதித் தேர்வு கட்டாயம் அவசியம் ஏனெனில் சாதாரண அரசுத் துறைக்கு தகுதித்தேர்வு இறக்கும்போது ஓர் உயிரை காப்பாற்றும் மருத்துவத்துறைக்கு ஏன் இத்தேர்வு இருக்கக்கூடாது இன்றைய சூழ்நிலையில் போலி மருத்துவர்கள் அதிகம் காணப்படுகிறார்கள் தகுதி இல்லாதவர்கள் கூட மருத்துவர்கள் என கூறுகிறார்கள் அதனால் அதனை ஒழிக்க வேண்டும் என எண்ணினால் கட்டாயம் மருத்துவத் துறைக்கு நீட் தேர்வு மிகவும் அவசியம்


விஐய், இராமநாதபுரம் 


நீட் தேர்வு வேண்டாம். நாம் மருத்துவர்களை உருவாக்க வேண்டும். நம் பிள்ளைகளை கொல்வதற்கு இல்லை


பிரசன்னகுமார், கீழ்வேளூர்


பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களும் மருத்துவர் ஆகலாம். அதனால் நீட் தேர்வு வேண்டும்


அம்மாச்சிநாதன், மதுரை


தமிழகத்தில் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் மருத்துவ கனவை இந்த நீட் என்னும் அரக்கன் தகர்க்கிறது இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் படி மாநில அரசு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது என்பது முட்டாள்தனமான முடிவு எனவே கல்வி என்பது மாநில பட்டியலில் வருகிறது என்பதால் நீட் என்பது தேவையில்லை என்பது எனது கருத்து


ப.சுர்ஜித், திருவாரூர்


இந்த நீட் தேர்வு என்பது முழுக்க முழுக்க, மாணவர்களை மதிப்பெண்ணை நோக்கியே ஓட செய்கிறது, ஆனால், மருத்துவம் என்பது மனிதம் சம்பந்தமானது, மதிப்பெண்ணை மட்டும் முக்கியமாக கொண்டு மாணவர்கள் படிப்பதால் அவர்களிடம் மனிதம் என்பது கேள்விக்குறியாகும்  வாய்ப்பு இருக்கிறது, எனவே இந்த NEET தேர்வு வேண்டாம்..


பூ.பூபாலன், கோரிப்பாளையம்


நீட் தேர்வு வேண்டாம். படிப்பு என்பது நமது அறிவை வளர்த்துக் கொள்ள தானே தவிர கட்டாயத்தின் பெயரில் படிப்பது நமது அறிவை கூறு போடுவதற்கு சமம்.


கார்த்திகேயன், திருவாரூர்


12 ஆண்டுகள் தொடர்ச்சியான கற்றல் மூலம் ஒரு மாணவர் படிப்படியாக நாளடைவில் அடைந்திருந்த கல்வி அறிவினை அதன்மூலம் அவனுக்கு வழங்கப்பட்ட மதிப்பீட்டினை முற்றிலும் புறக்கணித்து ஒரு சாதாரண அனுமதிக்கான நுழைவுத்தேர்வு என்பதனையும் தாண்டி தகுதியை நிர்ணயிக்கும் தேர்வாக கருதப்படுவது வேதனையான செய்தி.


தீர்வு 1 - Waitage முறைப்படி கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயித்துக் கொள்ளலாம். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு 90% மருத்துவ படிப்பு அனுமதிக்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுக்கு 10%. 


தீர்வு 2 - கல்வி முறையும் தேர்வு முறையும் மதிப்பெண் வழங்கப்படுவதும் இந்திய அளவில் சமமாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காகவே நீட்தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. எனவே 11 ம் வகுப்பு முதலே இந்திய அளவில் ஒரே பாடத்திட்டம் ஒரே கல்வி முறை என்று நிர்ணயித்து விடலாம்


ஜெ. விக்னேஷ்வரி, கண்கொடுத்தவணிதம்


பாடபுத்தகத்தை மனனம் செய்து பொதுத்தேர்வில் வெற்றி பெறுவதை மட்டுமே மாணவர்களின் நோக்கம் ஆகிறது  உண்மையில்  மருத்துவ படிப்பிற்கு தேவையான அடிப்படை அறிவியல் பற்றி அறிந்து கொள்ள யாரும் முயற்சி செய்வதில்லை  ஆதலால் நீட் தேர்விற்கு தயார் செய்யும்போது  அனைத்தையும் புரிந்து படிக்க வாய்ப்புகள் அதிகம் அது எதிர்கால மருத்துவம் சார்ந்த கல்விக்கு உதவும். 


கணேஷ், காரைக்குடி 


பல்வேறு மாணவர்களின் கனவை சிதைத்து அவர்களின் உயிரை குடிக்கும் எமனாக மாறும் நீட் தேர்வு வேண்டாம் .


இ.ருக்மணிகணேசன், திருவல்லிக்கேணி


நீட் தேர்வு இருக்கும்பட்சத்தில் ஏழை எளிய மாணவர்களும் எந்த ஒரு லஞ்ச மோசடிகளுக்கு உட்படாமல் தங்களது திறமைகளை தேர்வின் மூலம் நிரூபித்து மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடிகிறது மேலும் தற்போது உள்ள இட ஒதுக்கீடு மேலும் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைகின்றது தற்போது உள்ள கல்வி முறையின் படி நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றது எனவே அடிப்படைக் கல்வியில் நாம் மாற்றம் கொண்டு வர வேண்டும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் தேர்விலும் நமது வெற்றியை நிலைநாட்ட இயலும் மற்றும் மருத்துவம் என்பது ஒரு சேவை அது தற்போது வேறு வேறு நோக்கத்தோடு செல்கிறது பணம் மட்டுமே கொடுத்து படிப்பவர்களுக்கு உண்மையான சேவையைப் பற்றி அறிய வாய்ப்பு இல்லை அனைவருக்கும் வாய்ப்பினை வழங்க நீட் தேர்வு என்பது ஒரு பொதுவான வழியாக அமைகிறது என்பதே எனது கருத்து


வே.து.யோகேஷ்வரன், திருவாரூர்


என்னைப் பொருத்தவரை மருத்துவத்தில் நீட் என்ற தகுதித்தேர்வு அவசியம்.


ஏனெனில் நீட் தேர்வு இல்லாதபட்சத்தில் பல பணக்காரர்கள் தனது பிள்ளைகளை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று கோடிகளைக் கொட்டி அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவர்.


இவ்விடத்தில் அம்மாணவனின் திறமை மற்றும் திறன் கேள்விக்குறியாகிறது.


அதுவே ஒரு ஏழை மாணவனுக்கு மருத்துவத்திற்கான நல்ல திறமை இருப்பினும் மருத்துவ சேர்க்கை என்பது பொருளாதார அடிப்படையில் நிராகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.


அதுவே நீட் தேர்வு இருந்தால் ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் தகுதி என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை என்பது நடைபெறும்.


அதற்காக சரியான பயிற்சி அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நல்ல திறமை வாய்ந்த ஆசிரியர்களாலும் அதற்கென பயிற்சிபெற்ற நிபுணர்களாலும் வழங்கப்பட வேண்டும் என்பதும் எனது கருத்து. 


மேலும் தமிழ்நாட்டின் மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்களே பயிலும் வகையில் நீட் தேர்வானது நம் மாநில அரசால் நடத்தப்பட வேண்டும்......


வீரவேல், சென்னை


பணம் படைத்தவர்கள் தனியார் கல்வி நிறுவனத்தில் பயின்று படிப்பு தகுதியில்லாமல் மருத்துவகல்லூரியில் சேர்கின்றனர். ஏழை மாணவர்கள் நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுத்தாலும் அவர்களால் நீட் என்ற தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு அவர்கள் படித்தபள்ளியில் கேட்கப்டாதவையாகும்


கா.நித்திலவாணி, திருவாரூர்


ஒரு பிள்ளை குறைந்தது 12 அல்லது 14 ஆண்டுகள் பள்ளிக்கூடத்திற்கு சென்று படித்து 1,2 தேர்வல்ல 3 பொதுத்தேர்வுகள் எழுதிய பிறகு தான் பெரும்பாலும் மேற்படிப்பு என்ற கட்டத்திற்கு செல்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒரு பொதுவான தகுதி தேர்வு தானே!அதற்கு மேலும் தனித்தனியே நுழைவுத்தேர்வு சில படிப்புகளுக்கு தேவைப்படுமாயின் இத்தனை வருடங்கள் படித்த படிப்பிற்கு அர்த்தம் இல்லை என்று கருதி கொள்ளலாமா? NEET ஐ பொருத்தவரையில் அப்படிதான் தோன்றுகிறது. எனது தோழி ஒருவர் அவளுக்கு சிறுவயது முதலே மருத்துவ படிப்பு படிக்க வேண்டும்  என்ற விருப்பம் அதற்கு தகுந்தார் போல் நன்றாகவும் படிப்பாள் NEET கட்டாயம் ஆனபிறகு வேறு வழி இல்லாமல் 2 வருடம் நீட் Coaching உம் சென்றாள் Middle class குடும்பத்தை சேர்ந்த அவளுக்கு வருடத்திற்கு 20000 செலுத்தி coaching class போவது கடினம்தான் இருந்தாலும் அவளது குடும்பமும் அவள் கனவுக்காக துணை நின்று இரண்டு வருடம் பணமும் செலுத்தி Support பண்ணினார்கள். 2 வருடங்கள் 2 பொதுத் தேர்வுகள் அதே சமயத்தில் NEET க்காகவும் கடுமையான உழைப்பை கொடுத்து prepare செய்தாள்.  NEET Exam இல் Govt Seat வாங்குற அளவிற்கு Cut off மதிப்பெண் பெற முடியவில்லை. NEET Repeat செய்ய Coaching Class க்கு மீண்டும் பணம் செலுத்த யோசித்த  அவள், மருத்துவ கனவை விடுத்து இரண்டாவது Option ஆன Nursing படிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.  இதில் பிரச்சனை என்னவென்றால் இவள் கடின உழைப்பை செலுத்தி NEET ஐ மட்டும் நம்பி இல்லாமல் 12 ஆம் வகுப்பும் நன்றாகப் படித்து (500+) மதிப்பெண் பெற்றதால் தான் தமிழ்நாட்டிலேயே சிறந்த MMC Chennai இல் இப்பொழுது படித்து வருகிறாள். ஒருவேளை NEET பாடத் திட்டங்களை மட்டுமே சில வருடங்கள் படித்து அதை பலமுறை முயற்சித்தும் Clear செய்யமுடியாத நிலமை ஒருவருக்கு ஏற்பட்டால் அவர்கள் வேறு மேற்படிப்பு சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. கடைசியில் காலமும் தாழ்த்தி கனவும் விடுத்து கிடைப்பதை எடுத்துக்கொண்டு இருக்கும் நிலைமை.   நீட் என்பது பெரிய Civil Service Exam க்கு தயார் செய்வது போல் தனியாக சில வருடங்கள் Coaching சென்றால் மட்டுமே Free Seat கிடைக்கும் Mark ஐ பெறலாம் போலும். இதெல்லாம் இல்லாமல் NEET ஐ clear செய்பவர்கள் அதிசயமான புத்திசாலிகளாக இருக்கக்கூடும். என்னைப் பொருத்தவரையில் நீட் என்பது மருத்துவ கனவோடு வளர்ந்து வரும் சாதாரண குடும்பப் பின்னணியை கொண்ட நன்றாகவும் படிக்க கூடிய மாணவர்களுக்கு பெரிய சவாலே. இதில் வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இல்லை.


தேவதர்ஷன், திருவாரூர்


நீட் தேர்வு மிகவும் அவசியமானது. ஏனெனில், நான் பன்னிரெண்டாம்‌ வகுப்பில் குறைந்த மதிப்பெண்‌ வாங்கினேன்.

ஆனால் அதற்கு நான்‌ கவலை படவில்லை. என் திறமையை நிரூபிக்க நீட்‌ தேர்வு உதவியாக இருந்தது. இதன் விளைவாக நான் இப்பொழுது ஹோமியோபதி மருத்துவம் பயில்கிறேன். இதேபோல் என்னை போன்று நிறைய பேர்‌ பயனுற்று இருப்பார்கள். நீட் தேர்வு என்பது ஒருவரின்‌ மன‌ அறிவியல் திறமையை நிர்ணயிக்கும் களம்.


அ.தமிழ் வளவன், திருவாரூர் 


நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து மாணவர்களுக்கும் தான். இத்தேர்வு இருந்தால் தகுதியான மாணவர்கள் மருத்துவராவார்கள். அது மட்டும் அல்லாமல் பணத்தை பயன்படுத்தி எவராலும் மருத்துவ துறையில் உள்ளே வர முடியாது...


நாத்திக.பொன்முடி. நாகப்பட்டினம் ( நத்தம்)


குப்பனும் சுப்பனும் படிக்கவில்லை ஆனால் குப்பன் மகன். சுப்பன் மகன்.

இப்பொழுது தான் படிக்கிறார்கள் கல்வியை சுவாசிக்கிறார்கள். கிராமப்புற  மாணவ -மாணவியர்களும் மருத்துவம் படிக்கலாம் என்றிருந்த இலட்சியத்தை உடைத்து அவர்களின் மருத்துவ கனவை குழித் தோண்டி புதைத்த ஒன்றிய அரசை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. அனிதா போன்ற பல சகோதரிகள் உயிரை பறித்த சமூகக் கேடு. அப்படியென்றால் குற்றவாளி யார்? ஒன்றிய அரசு.  (நீட்) மருத்துவ நுழைவுத்தேர்வு தேவையில்லை தேவையில்லை.. அது ஒரு நவீன தீண்டாமை முறை.

தூக்கி வங்கக் கடலில் வீசப்பட்ட வேண்டும்… நீட் தேர்வால் கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு முழுக்க முழுக்க வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது..

நீதி. நேர்மை. துணிவு இருந்தால் மாணவ மாணவியர்கள் மீது அக்கறை இருந்தால் தயவுசெய்து நீட்டை வங்க கடலில் தூக்கி வீசுங்கள். நன்றி


அஜய்


மருத்துவத்திற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே டாக்டர் ஆக வேண்டும். school இல் படிக்கும் ஒரு சில பேரை தவிர அனைத்து மாணவர்களும் புரிந்து படிக்காமல் மனப்பாடம் மட்டுமே தான் செய்கிறார்கள். அதற்கு மாணவர்கள் ஒன்றும் பண்ண முடியாது ஏன் என்றால் அவர்கள் சிறிய வயதில் இருந்தே மனப்பாடம் பண்ணி படித்து பழகிவிட்டார்கள். உயர் கல்விக்கு போகும்பொழுது அதில் மனப்பாடம் கல்வி செயல்படாது. புரிந்து படித்தல் தான் சிறந்தது. மாணவர்கள் சிறிய வயதில் இருந்து மனப்பாடம் கல்வியாகவே இருப்பதால் உயர் கல்விக்கு செல்லும்போது அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு நீட் தேர்வு வேண்டும். நீட் தேர்வு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே டாக்டர்க்கு படிக்கவேண்டும். எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன் . இதில் எதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்


சக்திவேல், விழுப்புரம்  


NEET தேர்வு என்பது இன்றைக்கு CBSE மற்றும் ICSE பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் மட்டுமே அச்சமின்றி எழுத முடிகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு அது வானில் பறக்கும் விமானத்தை தரையில் நின்று பார்ப்பது போல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். நாட்டில் எந்த பள்ளியில் பயின்றாலும், மாணாக்கர்கள் தேர்வை கண்டு அஞ்சாது இருப்பது போல் இருக்குமேயானால் NEET தேர்வை வரவேற்கலாம். சம கல்வி என்பது சாதி மத வேறுபாடின்றி மட்டுமே இல்லாமல், தரத்திலும் சமத்துவமாக இருக்குமேயானால் அதுவே சம கல்வி. அதன் பின்பு NEET தேர்வு நடந்தால் யாருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்காது. 

அதே போல், மருத்துவம் என்பது நம் வாழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே NEET நுழைவு கடினமாக இருத்தல் அவசியம். அனைவருக்கும் சமமாக பயிற்சி அளித்து அதில் சிறந்த மாணாக்கர்களை முறையாக தேர்வு செய்து அவர்கள் மருத்துவ பணியாற்றுதல் நன்று.


கவின்ராஜ், வேதாரண்யம்


முடியாத செயல் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது கடினமாக உழைத்து தேர்ச்சி பெறலாமே


முனைவர் சோ .கோதண்டராமன், காரைக்கால்


நீட் தேர்வு வேண்டும். ஏன் என்றால் மருத்துவம் என்பது உயிர்காக்கும் தொழில். அதற்கு மற்ற பட்டப்படிப்புகளை விட ஒரு மேல் அளவீடு தேவை. மேலும் இன்று அனைவருமே மருத்துவம் பயில்கின்றனர். அதற்குச் சான்றாக வீதிக்கு பல மருத்துவமனைகள் இருப்பது கண்கூடு. அதில் இருக்கும் பெயர் பலகையில் கூட M.S, MD என்ற முதுநிலை படிப்புகள் அதிகம் காண்கிறோம்.  மருத்துவர்கள் பல்கி பெருகிவிட்ட சூழலில் அதனைக் கட்டுப்படுத்தி மருத்துவக் கல்வியைத் தரப்படுத்த தகுதிவாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இன்றியையாத ஒன்றாகி விட்டது.


ஆர்த்தி ஆரோக்கியசாமி, பொன்னிரை


நீட் தேர்வானது தமிழக பள்ளி கல்வித் துறையின் கல்வி முறையினை அர்த்தமற்றதாக்குகிறது. இது தேசிய அளவில் நடைபெறுவதால் முறையான பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சி என யாவும் பல மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. பல மாணவர்த்துகளின் மருத்துவ படிப்பினை நீட் தேர்வானது வியாபாரமாக்குகிறது.


வெற்றிவேல், திருச்சி


இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்கு பொதுவான மொழியாக ஆங்கிலம் மட்டுமே உள்ளது.

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஹிந்தியில் மட்டுமே இருந்தது. ஹிந்தி தெரியாத நம் மக்களுக்கு ஹிந்தியில் எழுதப்படும் நீட் தேர்வு எதற்கு?


இரா. மகேஸ்வரி, திருவாரூர்


இத்தேர்வின் காரணமாக 12 ஆண்டுகள் வரை அரசு ஒரு மாணவனுக்கு அளித்த கல்வியின் தரம் கேள்விக்குறி ஆகிறது.

இதன் மூலம் கல்வி சந்தை ஆக்கப்படுகிறது.

மாணவர்களும் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

அனைவருக்கும் சமமான கல்வி சமமான வாய்ப்பு எனும் அடிப்படையே தகர்த்தெறிய படுகிறது. 100% தகுதியுள்ள மாணவருக்கு வாய்ப்பு மறுக்க படுகிறது. மருத்துவம் படிக்க என்ன தகுதியை நிர்ணயிப்பது யார் எதற்காக இந்த தகுதி நிர்ணயிக்கப்படுகிறது எல்லாமே வியாபாரம் என்பது தெள்ளத் தெளிவாக இதன் மூலம் அம்பலமாகிறது..


சரி அப்படியே இந்த தகுதி தேர்வை நடத்தினாலும் அதை நடத்துவதற்கு இந்த இந்திய அரசாங்கத்துக்கு தகுதி இல்லையா? தகுதித் தேர்வை கூட நடத்த முடியாத ஒரு அரசாங்கம் ஒரு நல்ல மருத்துவரை சமூகத்துக்கு அளிக்குமா? அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு உயிர் காக்கும் நடமாடும் கடவுள்களை நம் சந்ததிக்கு தர ஆக்கபூர்வமான   அனைவருக்கும் சமமான கல்வி சமமான வாய்ப்பு ஆகியவற்றை குடிமக்களுக்கு அளிக்க அரசு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.


கதிர்வேந்தன், மறைக்காடு


1) தேர்வுக்கான பாடத்திட்டம் நாடுதழுவிய அளவில் சமமாய் இல்லை.

2) பயிற்சி மையங்களை மட்டுமே இத்தேர்வு வாழ்விக்கிறது.

3) ஏற்கனவே மருத்துவம் நீண்டகால படிப்பு. இத்தேர்வின் பொருட்டு ஓரிருவருடங்கள் கூடுதலாக செலவழிக்க நேரிடுகிறது. 

4) குறைந்த பட்ச தேர்ச்சி முறையால் ஏழை மாணவர்கள் இதில் தேர்வானாலும் கூட பணமில்லாமல்  கல்லூரியில் சேரமுடியாது! ஆனால் தேர்ச்சி பெற்ற செல்வந்த பிள்ளைகள் கல்லூரியில் சேரமுடிகிறது.

5)இத்தேர்வினால் பள்ளிகளின் தேர்வுமுறை மற்றும் மதிப்பெண் சான்று மதிப்பை இழந்துபோகிறது.


Moulana, Chennai


Medical or engineering or arts if u want to study you can we don't want any restrictions. Everyone can study and everyone needs to study. when Neet exams come medical study goes to only higher class education people. the government can sell their property to private but you can never sell our Studies. Tamilans will not accept this type of shits. Tamilnadu always rocks. Ban neet


Mothishwaran, Trichy  


Seriously I don't know how hard it is and how they are conducting Exams. But I definitely don't want NEET Exam. Because I know student's pain.


Abi prashanth, Dindigul


Because the Neet exam provides all the students those who are interested in the medical field will help them to achieve. The government must give free neet coaching centers in every nook and corner in Tamilnadu.


V. Sukumar, Sambavar vadakarai


If neet is not there, there is a lot of chance of getting medical seats as private school students. Because in a private school they start teaching 12th subject during 11th. This might increase their mark. But in a government school in 11th, they study 11th syllabus and in 12th they study 12th so no mark increase. And if they don't get a seat this time they must join other courses. Due to neet if they work for a year there is a chance of getting a seat. Due to the neet, only understanding students get the medical seats. But otherwise who mockup all subjects they got a seat. So if the government wants to help the government school students they start a high-class neet coaching for only government schools students. It might increase the government school students cut off in neet


Madhumitha P, Chatrapatti.


In my point of view, those who obtained high scores in 12th (i,e high cut-off marks) should definitely go for medicine but need is also needed.

Bcoz the student might have a second chance to get inside medicine.

The government may give 40% priority to 12th marks and another 40% priority to neet marks and balance 20% priority to self-finance students( in private colleges). The marks obtained in public exams should also be considered and along with the neet, marks should also be considered. On this basis, neet is needed. But only neet is not essential. 


Sharath, Trichy


Up to 12th standard, they are keeping exams and students may feel like writing exams for the whole life before there were cut-off marks. Students study for the state exams but now 12th marks are useless and neet coaching centers are everywhere they are gaining profits. Some people are starting their preparation from 11std onwards. What is the use of schools then?


நீட் தேர்வு பற்றிய தென்றல் கருத்து (இங்கே தொடவும்)

தென்றல் இதழ் 32

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு