Trending

கார்பன் அளவை குறைக்க இனி என்ன நடக்கும் இந்தியாவில்

 


2070 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவு பூஜ்ஜியமாகும் என்று நவம்பர் 1 அன்று ஸ்காட்லாந்தில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான 26வது மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் பேசினார்கள். 


இந்தியாவின் சுற்றுசூழலை காக்க வேண்டி அரசு எதிர்நோக்கும் இலக்குகளை பிரதமர் மோடி அவர்கள், 'பஞ்சாமிர்தம்' என உவமை போட்டு சொன்னார்கள். அவை,


  1. 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரிசாராத எரிசக்தி அளவு 500 ஜிகா வாட் ஆக இருக்கும்


  1. 2030 ஆம் ஆண்டில் இந்தியா தனது எரிசக்தி தேவைகளில் 50 சதவீதத்தை மரபுசாரா எரிசக்தி மூலம் பெறும்.


  1. இன்று முதல் 2030 ஆம் ஆண்டு வரை இந்தியா வெளியேற்றும் கார்பன் 100 கோடி டன் அளவுக்கு மிகாமல் இருக்கும்


  1. இந்திய பொருளாதாரத்தில் கார்பன் அளவு, 2030 ஆம் ஆண்டில் 45 சதவீதமாக குறையும்.


  1. 2070 ஆம் ஆண்டு இந்தியாவில் கார்பன் வெளிப்பாடு பூஜ்ஜியம் என்ற அளவை எட்டும்.


இந்தியாவில் இனி என்ன நடக்கும்?


இந்தியா நிச்சயம் முதலில் மின் துறையை குறிவைக்கும். சூரிய ஆற்றல் மற்றும் காற்றலை மூலமாக தனது மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு அதிகம் திட்டமிடும்.


அடுத்து ஹைட்ரஜன். ஹைட்ரஜன் மூலம் தனது போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய ஆற்றலை தேடும். காரணம் ஹைட்ரஜன் கார்பன் வெளிபாடு மிக மிக குறைவு. அதனால் காற்று மாசு மட்டுமல்லாமல் பஞ்சாமிர்தத்தில் சொன்ன மூன்றாவது இலக்கான "இன்று முதல் 2030 ஆண்டு வரை இந்தியா வெளியேற்றும் கார்பன் 100 கோடி டன் அளவுக்கு மிகாமல் இருக்கும்" என்பதை சாதிக்கும்.


டிகார்பனைஷேசனுக்கான அனைத்து வித தொழிற்நுட்பங்களும் இந்தியாவில் பல்கி பெருகும். அதன் மூலம் இந்திய சூழலுக்கு நன்மையும் மக்களுக்கு இடஞ்சலும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.


LED பல்புகளை தவிர அனைத்துவிதமான கார்பன் கக்கும் பல்புகளும் தடை செய்யப்படும்


மக்களின் அனைத்து விதமான வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அதிக கார்பனை வெளியிடும் வாகனங்கள் ஒன்று அரசாங்கத்தால் பறிக்கப்படும் அல்லது தண்டம் செலுத்தும் படியோ அல்லது முற்றிலுமாக தடையோ செய்யப்படலாம்.


நிலக்கரி மூலம் பெறப்படும் ஆற்றல்கள் முற்றிலுமாக நிறுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் அதை மூலமாக வைத்து செயல்படும் தொழிற்சாலைகள் அதில் பணிபுரிவோர், வாகனங்கள் போன்றவை வேறொரு துறைக்கென மாற்றப்படும் அல்லது முற்றிலுமாக தடைசெய்யப்படும். இதன் மூலம் பல லட்ச பேர் தன் வேலையை இழக்கவும் நேரிடலாம். உதாரணமாக நிலக்கரி மூலம் செயல்படும் தொடர்வண்டிகள் முற்றிலுமாக அரசாங்கத்தால் தடை செய்யப்படும்.


குளிரூட்டும் சாதனங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்கப்படும் அல்லது அவைகளும் முற்றிலுமாக நீக்கப்பட்டு தேவைப்படும் இடங்களில் மட்டும் உபயோகிக்கலாம் என்று சட்டம் வரும்.


நெகிழிகள் பூரணமாக அழிந்தொழிய வாய்ப்பு உள்ளது.


பொது இடங்களில் பயன்படுத்தப்படும் அடுப்புகள் மின்சார அடுப்பாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற சட்டம் பிறக்கும்.


சிகரெட் பிடிக்காதே பலகை போய் சிகரெட் விற்காதே என்ற கெடுபிடி பலகை வரும்.


வாகன பயன்பாட்டுக்கு நாடு சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அல்லது மின்சார இருசக்கர வாகனங்களை கட்டாயமாக்கும். இதனால் பெட்ரோல் டீசல் வாகனங்கள் அழியும். அவற்றை அந்த காலத்திலும் பயன்படுத்துவோர் அதன் உதிரி பாகத்திற்கு கூட ஆயிரமாயிரங் கணங்கில் செலவழிக்கவும் கூடும்.


வெப்பத்தை கிரகிக்காத எலக்ட்ரானிக் பொருட்கள் வரலாம். தற்காலத்தில் இது சாத்தியமற்றதாகினும் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புண்டு.


வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்பது கட்டாயமாக்கப்படும். இடமில்லாதவர்களுக்கு கூட ஜப்பானிய முறையில் போன்சாய் வளர்ப்பை இந்தியா ஊக்குவிக்கலாம்.


இருப்பது போக இனி தேவைக்கு தார் சாலைக்கு மாற்று ஏற்படுத்தப்படும்.


சின்ன சின்ன டீ கடைகளிலிருந்து ஹோட்டல் வரை கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டி சோதனைக்கு உள்ளாக்கப்படலாம்.


உடலை எரித்து தகணம் செய்யும் முறையானது ஒன்று ஏதுமொரு மாற்றுவழிக்கு உட்படுத்தப்படலாம் அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படலாம்.


பல லட்ச ஏக்கர் சூரிய மின்சாரத்திற்காக வேண்டி ஆக்கிரமிக்கப்படும்.  அதோடு மட்டுமல்லாமல் பொது வெளியில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான மின் சாதனங்களும் சூரிய ஆற்றலுக்கு மாற்றமடையும்.


தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு நிச்சயம் அதிக கெடுபிடி இருக்கும். ஒன்று கரியை வெளியிடும் பட்டாசுக்கு மாற்று வரும் அல்லது பட்டாசு வெடிக்கும் நேரமானது மிக மிக சொற்பமாகும். இந்தியா இதனை சாத்தியப்படுத்த அதிக சிரத்தை எடுக்கும். காரணம் ஒரே நாளில் இலக்கினை தாண்டிய அளவிற்கு மேல் கார்பன் கரியை வெளியிட தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு அதிக நேரம் எடுக்காது.


ஒவ்வொரு ஊரிலும் செயற்கை வனங்கள் ஏற்படுத்தப்படும். குறைந்தபட்சம் 5 கிலோமீட்டருக்கு ஒரு பூங்கா ஏற்படுத்தப்படலாம்.


பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் போன்ற அதிக மக்கள் பயன்பாட்டு பகுதிகளில் வெப்பத்தை கிரகிக்கும் பொருட்கள் தடை செய்வதோடு மட்டுமல்லாமல் மக்கள் திரளாக கூடுவது கூட தடை செய்யப்படலாம்.


2070 க்கும் மேல் இந்தியாவால் தான் சொன்ன இலக்குகளில் ஒன்றை கூட தொட முடியாது போனால்?


நாம் பல கடலோர கிராமங்களை இழக்க நேரிடும். உலக வெப்பநிலை 60⁰ செல்சியஸ் வரை உயரும். இதனால் நகரத்தீ சாதாரணமாகும். பல்வேறு பறவைகள் உயிரனங்களின் முற்று பெறும் பேரழிவை பார்க்கும் தலைமுறையினராய் நாம் இருப்போம். நம் உடல் காலத்திற்கேற்ற பரிணாமம் பெற சிரமம் எடுக்கும். இதனால் உடல் மட்டுமல்ல உலகமே தூக்கு கயிற்றில் ஊஞ்சலாடுவது போல ஆகக்கூடும்.


சொல்லமுடியாது, இயற்கையை காக்கும் இந்த இலக்கிற்கு மேற்சொன்ன முன்னெடுப்புகளில் ஒன்று கூட நடைபெறாமலும் போகலாம்.


காரணம், இது இந்தியா.


தீசன்

தென்றல் இதழ் 23

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு