Trending

சிரித்துக் கொண்டே அழுத கண்ணதாசன்

உண்மை சம்பவம்



இயல்பான மனிதனைக் காட்டிலும் கவிஞர்களுக்கு என ஒரு தனித்திறன் உண்டு. அவர்கள் எத்தனை பெரிய காவியம் எழுத அமர்ந்தாலும் தங்கள் மனதை அதிகம் பாதித்த நிகழ்வின் கோட்டில் இருந்து நகர மாட்டார்கள். 


எழுதபோகின்ற சம்பவம் வேறு ஒன்றாகினும் வந்த இன்பத்தையோ துன்பத்தையோ ஆகமம் போல் சொல்வது அவர்கள் வழக்கம்.


கலைஞரும் அண்ணாவும் இதை உரையிலே நிகழ்த்தக்கூடிய சாமர்த்தியசாலிகள். 


காலம் போற்றும் வள்ளுவர் முதல் தற்கால ஜாம்பவான் கவிப்பேரரசு வைரமுத்து வரையிலும் தங்கள் மனம் தொட்ட நிகழ்வுகளை கவி கட்டாமல் இருந்திருக்கமாட்டர்.


கண்ணதாசனுக்கோ இதில் முனைவர் பட்டமே தரலாம்.


அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி


நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலம் தானா


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது


நான் போட்டால் தெரியும் போடு 

தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு


நான் பார்த்தாலும் பார்த்தேனடி மதராசு பட்டினத்த


தம்பியின் அறிவு யாருக்கு உதவி

தேர்தலில் நின்னா மந்திரி பதவி


மருதமலை மாமணியே முருகையா


இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்


அப்படி ஒரு நல்ல பாடல் எழுதுவதற்கான வருத்தமான நிகழ்வு தான் இது!


1961 ஆம் ஆண்டு பாவமன்னிப்பு எனும் திரைப்படத்தினை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கொண்டு இயக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர் பீம்சிங் அவர்கள்.


கவிஞர் வெற்றி கொடி கட்டி திகழ்ந்த காலம் அறுபதுகளின் இறுதி, எழுபதுகளின் தொடக்கமாகவே இருந்தாலும் கூட, தங்கம் தேடிய வைரமாகவே அவர் எப்போதும் மதிக்கப்பட்டார்.


அப்படி ஒரு நாளில் இயக்குனர் பீம்சிங் அவர்கள் கவிஞர் கண்ணதாசனிடம் படத்தின் ஒரு முக்கிய பாடலுக்கான சூழ்நிலையை விளக்கிக் கொண்டிருக்கிறார்.


கண்ணதாசனுக்கு எதிரே அமர்ந்திருந்த எம்எஸ்வி அவர்கள் ஹார்மோனியத்தை அசைத்தபடியே மெல்லிய கீதத்தை உண்டு செய்தார்.


இசை தவழும் அந்த சமயத்தில் அவ்வறையினுள் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் நுழைந்தார்.


அந்தப் புதிய மனிதர் இயக்குனர் பீம்சிங்-ஐ பார்த்து, 'கவிஞருக்கு போன் வந்திருக்கு சார்' என்றார்.


பாடலுக்கான சூழ்நிலையை கேட்டுக் கொண்டிருந்த கவிஞர், சட்டென எழுந்து அறையை விட்டு வெளியே வந்து 'டெலிபோனை' எடுத்தார்.


'ஹலோ! கண்ணதாசனுங்களா…. சார் நாங்க 'கோர்ட்'லேந்து வந்திருக்கோம், உங்க வீட்ட ஜப்தி பண்ண ஆர்டர் வந்திருக்கு… கொஞ்சம் வரீங்களா…'


அந்த காலத்தில் நீதிமன்றம் சொல்லும் ஜப்தி தீர்ப்புகளை அந்த வீட்டின் முன்பு வந்து பலமாக பறையடித்துக் கொண்டு தான் சொல்வார்களாம்.


டெலிபோனில் கவிஞருக்கு அந்த பறையின் சத்தமும் கேட்காமலில்லை.


'டமாரத்தை நிறுத்துங்க, நான் வரேன்' என்று கூறி போனை வைத்த கவிஞர், ஏதோ ஒரு சிந்தனையிலே பாடலை தொடர்வதற்காக composing அறையினுள் நுழைந்தார்.


இதே சமயத்தில் கவிஞர் அவர்களின் வீட்டில் ஒரு திருவிளையாடல் நேர்ந்திருக்கிறது.


வீட்டின் ஜப்தி ஆர்டரை சொல்ல வந்த, அப்பறையடிக்கும் நபரை சுற்றி கவிஞரின் அப்போதைய பத்து குழந்தைகளும் கைதட்டி ஆடத் தொடங்கிவிட்டது.


வீட்டையே இழக்கப் போகிறோம் என்பதை அறியாத அக்குழந்தைகள். 'டம் டம் டம்' என்னும் ஒலியை கேட்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கலாயினர்.


வீட்டினுள் இருந்து கவிஞர் அவர்களின் மனைவி வந்தார்கள். அந்நபரை சுற்றிக் கொண்டு தெருக்கூத்து கட்டிக் கொண்டிருந்த தன் மகன்களை கவனித்தார்கள். 


விடாது ஆடிக்கொண்டிருந்த அவர்களின் முதுகினில் 'டப்பு டப்பு டப்பு' என்று மூன்று சாத்து சாத்தினார்கள்.


அடிவிழுந்த உடனே என்ன நடக்கிறதென்றே தெரியாமல் வீட்டுக்குள் ஓடிய அக்குழந்தைகளில் ஒருவன், 'அம்மா...எனக்கந்த டொம்மு வேணும்' என்று அடம்பிடிக்கத் தொடங்கினான்.


டெலிபோனில் முக்கிய செய்தியை கேட்ட கவிஞர், பின்புலத்தில் நிகழ்ந்த இச்சம்பவங்களையும் தொலை தூர ஒலி போல கேட்டுவிட்டு, யோசனையிலே composing அறையினுள் நுழைந்து இயக்குனர் பீம்சிங் முன் அமர்ந்தார்.


மனதின் கணத்தையும் குழந்தைகளால் வந்த ஹாஸ்யத்தையும் அடக்கமுடியாத கவிஞர் தன் மனதில் சற்றே வந்தமர்ந்த சுமையான சுகத்தினை இயக்குனர் பீம்சிங்கிடம் பாடலாக சொன்னார்,


கவிஞர் எழுதிய அப்பாடல் இதோ,


காலம் பல கடந்து

அன்னை முகம் கண்டேனே

கண்ணீரும் புன்னகையும்

கலந்து வர நின்றேனே


ஒன்று பட வழியில்லையே

உண்மைக்கு மொழி இல்லையே

உள்ளம் திறந்து ஒரு சொல்

சொல்வதற்கும் முடியலையே


சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்


சிலர் அழுவார் சிலர்

சிரிப்பார் நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்


பாசம் நெஞ்சில்

மோதும் அந்த பாதையை

பேதங்கள் மூடும் பாசம்

நெஞ்சில் மோதும் அந்த

பாதையை பேதங்கள் மூடும்

உறவை எண்ணி சிரிக்கின்றேன்

உரிமையில்லாமல் அழுகின்றேன்


சிலர் அழுவார் சிலர்

சிரிப்பார் நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்


கருணை பொங்கும்

உள்ளம் அது கடவுள் வாழும்

இல்லம் கருணை மறந்தே

வாழ்கின்றார் கடவுளைத்தேடி

அலைகின்றார்


சிலர் அழுவார் சிலர்

சிரிப்பார் நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன்


காலம் ஒரு நாள்

மாறும் நம் கவலைகள்

யாவும் தீரும் காலம் ஒரு

நாள் மாறும் நம் கவலைகள்

யாவும் தீரும் வருவதை

எண்ணி சிரிக்கின்றேன்

வந்ததை எண்ணி அழுகின்றேன்


சிலர் அழுவார் சிலர்

சிரிப்பார் நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்

அழுவார் நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்


கண்ணதாசதாசன்

1 Comments

  1. பாவ மன்னிப்பு திரைப்படமே ஒரு காவியத்துவமானது.. படம்முழுவதிலுமே சோகம் இழையோடினாலும் அசாத்தியமான கதாபாத்திர தேர்வுகளால் அவை உயிரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும்..


    அதில் அத்தனை பாடல்களுமே ஆஹா அடடா ரகம்தான் என்றாலும்.. இந்த பாடல்வரும் சூழல்தான் அட்சரசுத்தமாக பொருந்தும்.

    அதன் பின்னணியில் அதனை மிஞ்சிய இந்த கதை இருப்பதை இப்போதுதான் அறிகிறேன்.



    வருவதை எண்ணி சிரிக்கின்றேன்..!

    வந்ததை எண்ணி அழுகின்றேன்..!!

    (நடந்துமுடிந்த பல சம்பவங்கள் அது இனிப்பாக இருந்தாலும் கூட அது இனி மீண்டும் எப்போது கிடைக்குமோ என ஏங்கி அழுகையை தானே வரவைக்கும்!)

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு