Trending

பாரத சமுதாயம் வாழ்கவே! | சுதந்திர தின சிறப்புப்பகுதி

 உணர்வில் கலந்த பாரதி


எட்டயப்புரத்தில் பாரதி பிறந்தது, வளர்ந்தது, கவிதை புனைந்து காசினியை வென்றது என பல செய்திகள் அனைவரும் அறிந்ததே…


பாரதியார் படத்தில்(சினிமா)-வில் வந்த ஒரு காட்சி சற்றே உண்மையிலிருந்து மாற்றப்பட்டிருக்கும்.


எட்டயபுர அரசர் கவிதையாளர்களுக்கான ஒரு போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அரசவை புலவர் காந்திமதிநாதன் ஆவார். எட்டயபுர சமஸ்தானத்திலே புகழ்பெற்ற கவியும் அவர் தான். அதே சமயத்தில் சிறுவனான பாரதியின் பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் பரவிகிடந்தது. சமஸ்தான புலவருக்கோ இது தர்ம சங்கடமாக இருந்தது.


'புலவன் நானிருக்க பிள்ளையை புகழ்கிறார்களே' என்ற ஆணவ வருத்தம் அவருக்கு.


இந்த சமயத்தில் எட்டயபுர அரசர் இந்த போட்டியை தயார்படுத்தினார். போட்டியின் விதிமுறை என்னவென்றால்,


கவிதையின் ஈற்றடி அதாவது இறுதி வரி எதிர் போட்டியாளரால் முன்பே சொல்லப்பட்டு விடும். அதை கொண்டு பாடுபவர் கவிதையை புனைய வேண்டும். அதுவும் கண நேரத்தில்.


காந்திமதிநாதனுக்கு லட்டு கிடைத்தது போல எதிர் போட்டியாளராக பாரதி சிக்கினார். பல நாளாக பாரதியை மட்டந்தட்ட காத்திருந்த காந்திமதிக்கு இது சரியான வாய்ப்பாக தோன்றியது.


காந்திமதிநாதன் பாரதிக்கு ஈற்றடியை கூறினார், "பாரதி சின்னப்பயல்"...


அரசர் உட்பட அவையோர் அனைவரும் பலமாக சிரிக்கத்தொடங்கினர். பாரதியார் தன் நாவில் குடியிருக்கும் தமிழை நினைத்திருப்பார்.


ஆண்டில் இளையவன் என்றந்தோ,

அகந்தையினால் ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனஞ்செய்- மாண்பற்ற காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்


பொருள்


வயதில் இளையவன் என்று அகந்தையினால் இங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய்த, மரியாதை இல்லாத கருவண்ண இருள் போன்ற உள்ளங் கொண்ட காந்திமதிநாதனை பார், அதி சின்ன பயல்.


அவையினர் கரகோஷத்துடன் வயிறு வலிக்க சிரிக்க,

பாரதியின் இவ்முள் மௌவல் வரிகளை கேட்ட காந்திமதிநாதனோ குறுகிப்போனார்.


பாரதியார் படத்திலும் இதுவே காட்டப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு பின் நடந்ததே பாரதியின் உண்மை முகமாகும்.


தன்னை விட வயதில் பெரியோரை அவமரியாதையாக பாடியது பாரதி மனதிற்கு ஒவ்வவில்லை.


முன் பாடிய கவியை சற்று நேரத்திலே மாற்றினார்.


ஆண்டில் இளையவன் என்றைய, அருமையினால் ஈண்டின்று என்னை நீ யேந்தினையால்- மாண்புற்ற காரது போல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்

பாரதி சின்னப் பயல்'.


பொருள்


வயதில் இளையவன் என்றும் பாராமல், சிறப்பு கண்டு என்னை நீ இங்கு தாங்கியதால் - மாண்புள்ள மேகம் போல் உள்ளம் கொண்ட காந்திமதி நாதனுக்கு பாரதி சின்னப்பயல் (உலகமே அதி சிறியது என்றும் பொருள் கொள்ளலாம்)


இந்த மாற்றப்பட்ட கவிதையை கேட்ட அவையோர், பாரதியின் பண்பை கண்டு வியந்து மகிழ்ந்தனர். ஆஸ்தான புலவர் காந்திமதிநாதனுக்கும் உள்ளம் குளிர்ந்தது.


பாரதியின் திறமையை காட்ட நினைத்த சினிமா, அவரின் பண்பை காட்ட தவறிவிட்டது. 


மகாகவி பாரதியார் தன் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களில் உணர்வு பூர்வமாக ஐக்கியமானவர். 


பேய் மழை பெய்யும் போதும் புயல் வெள்ளம் வந்த போதும்


திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து

வெள்ளம் பாயுது பாயுது பாயுது

தாம்தரிகிட


என்று பாடி மகிழ்ந்தவர். இதுபோன்று மழையை ரசித்து ஒரு புயலில் சிக்கி சாகப்போன பாரதி திடீரென ஒரு பள்ளிக்குள் புகுந்து கணவன் மனைவி பேசுவசாய் ஒரு கவிதை புனைந்துள்ளார் பாருங்கள்,


கணவன்:

வானம் சினந்தது; வையம், நடுங்குது

வாழி பராசக்தி காத்திடவே

தீன குழந்தைகள் துன்பப் படாதிங்கு

தேவி அருள்செய்ய வேண்டுகிறோம்


மனைவி:

நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே; இந்த

நேரமிருந்தால் என்படுவோம்?

காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மை

காத்தது தெய்வ வலிமையன்றோ?


குடிக்க கஞ்சியில்லாத நிலையில், இருந்த நெல்மணியை புள்ளுக்கு பகிர்ந்தளிந்த நிலையில் புனைந்த கவி தான்,


விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்

சிட்டுக் குருவியைப் போலே


எட்டுத் திசையும் பறந்து திரிகுவை

ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை

மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்

வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)


காலமெல்லாம் கவிஞன் கானமென்னும் கவிமழையில் நீந்துகிறான், உணர்வு என்னும் பெருமழையில் வாழுகிறான், வறுமையென்னும் கொடும் மலையை தாங்குகிறான். பாரதி அதற்கு விதிவிலக்கல்ல..


ஆனால் அக்கொடிய நிலையிலும் பாரதியால்,


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?

பல தோற்ற மயங்கங்களோ?


என்னும் சுகமான பாடலை பாட முடிந்தது. 


இன்று சுதந்திரத் திருநாள். விடுதலைக்காக பாடுபட்ட பல கோடி இந்தியர்களை நினைத்துப் பார்க்கும் பொன் நாள். இது எண்ணி பார்க்கும் காலம்.


இன்று நாம் எண்ணி பார்க்கிறோம். பனியன் மட்டுமே அணிந்த சிறுவன் நாட்டிற்காக உழைக்கின்ற தலைவர்களின் கருத்துகளை செய்திதாள் வழியே சாலை சாலையாக ஓடி ஓடி பரப்பிக்கொண்டிருந்த, இப்போது 80 வயதாகியிருக்கும் அந்த சிறுவனை எண்ணிப்பார்கின்றோம்.


கணவன்மார்களை வழியனுப்பிவிட்டதோடு மட்டுமல்லாமல் தன் குழந்தைகளையும் தயார்படுத்தி தாங்களும் முன் நின்று தேசத்தை காப்போம் என குரல் தந்த நம் இந்திய மாதர்களை எண்ணி பார்க்கின்றோம்.


ஒரு நாள் உணவிற்கே கஷ்டப்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்தியாவின் விடுதலைக்காக எதுவுமே எதிர்பாராமல் நடுதெருவில் வந்து போராடியதை எண்ணி பார்க்கின்றோம்.


தென்றல் பாரதியின் கவிதையை துணைக்கு அழைக்கிறது. அவரது இந்த பாடலை 75 ஆவது சுதந்திர தினத்திற்காகவும் அனைத்து கலாச்சார இந்திய மக்களும் என்றும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியும் பணிவுடன் பதிவு செய்கிறோம்.


பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே

பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே 


முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பில்லாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை

ஒப்பில்லாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை 


பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே

பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே 


முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பில்லாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை

ஒப்பில்லாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை 


பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே

ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய

பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே 


மனிதர் உணவை மனிதர் பறிக்கும்

வழக்கம் இனியுண்டோ

மனிதர் நோக மனிதர் பார்க்கும்

வாழ்க்கை இனியுண்டோ

புலனில் வாழ்க்கை இனியுண்டோ

நம்மில் அந்த வாழ்க்கை இனியுண்டோ 


இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

என் அரும் பெரு நாடு

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

என் அரும் பெரும் நாடு

கனியும் கிழங்கும் தானியங்களும்

கணக்கின்றி தரும் நாடு

நித்தம் நித்தம் கணக்கின்றி தரும் நாடு 


இனி ஒரு விதி செய்வோம் 

அதை எந்த நாளும் காப்போம்

இனி ஒரு விதி செய்வோம் 

அதை எந்த நாளும் காப்போம்

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்

ஜகத்தினை அழித்திடுவோம் 


பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே

ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய

பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே 


முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பில்லாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை

ஒப்பில்லாத சமுதாயம்

உலகத்துக்கொரு புதுமை 


பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே

பாரத சமுதாயம் வாழ்கவே

வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே


வாழ்க பாரதி புகழ்...!

வாழ்க இந்தியா...!

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு