Trending

பொருள் இல்லாமலே புரிந்து கொள்ளக்கூடிய திருக்குறள்கள் (அறம்)

அறத்துப்பால்

valluvar


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீந்தார்

இறைவன் அடி சேரா தார்


தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்கா தெனின்


செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


நிறைமொழி மாந்தர் பெருமை, நிலத்து

மறைமொழி காட்டி விடும்


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது


அறன் என பட்டதே இல்வாழ்க்கை, அஃதும்

பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்


மங்கலம் என்ப மனை மாட்சி, மற்று அதன்

நன்கலம் நன் மக்கட் பேறு


குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது.


காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது


தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்


நன்றி மறப்பது நன்று அன்று, நன்றல்லது

அன்றே மறப்பது நன்று


அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்


தீயினாற் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே

நாவினால் சுட்ட வடு


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்

கல்லார் அறிவிலா தார்


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்


அறங்கூறான் அல்ல செயினும், ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது


புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின், சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு


தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு


தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்


பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு


தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்


பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்


அறவினை யாதெனில், கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்


நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி


உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்


பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும், மற்று

நிலையாமை காணப் படும்


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு


எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு


பிறப்பென்னும் பேதைமை நீங்கச், சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு


தூய்மை என்பது அவாவின்மை, மற்றது

வாய்மை வேண்ட வரும்


இன்பம் இடையறா தீண்டும் அவா என்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்


நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும்


இருவேறு உலகத்து இயற்கை திரு வேறு

தெள்ளியராதலும் வேறுஉங்களின் புரிதலுக்காக திருக்குறளின் அடிவரையறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் வார்த்தைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. புதுமையை விரும்பும் தமிழுலகம் இதையும் ஏற்கும் என நம்புகிறேன். பொருள் இல்லாமலே புரிந்து கொள்ளக் கூடிய இந்த திருக்குறள்களிலும், படிக்கும் உங்களுக்கு சிறிது பொருள் விளங்கவில்லையானால் அது என் குறள் தேர்வின் பிழையே அன்றி உங்களதல்ல.


-தீசன்1 Comments

  1. கடைசி குறளுக்கு மட்டும் விளக்கம் தந்துவிட்டீரே..!

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு