Trending

இந்திரனும் மானுடனும் - சிறுகதை

இந்திரனும் மானுடனும் - குகன்

இந்திரனும் மானுடனும் - சிறுகதை


கைலாயத்தில் முப்புரம் எரித்த முதல் சித்தனான சிவபெருமான் தவநிலையை மேற்கொண்டிருந்தார். வைபிரேட்டுடன் அதிர்ந்தது ஈசனின் 'ஸ்மார் ஃபோன்' . அதனை எடுத்து பார்த்தார். 'வாட்ஸ் அப்பில்' விநாயகர் அனுப்பிய 'பி.டி.எப்' ஐ கிளிக்' செய்தார். 


"நம் கம்பெனியில் மிக சோம்பேறி தனத்தோடு வேலையின்றி பொழுதைக் கழித்து, உலகத்தை செழிப்பாக வைக்கும் பணியை மறந்தவராக இந்திர தேவன் உள்ளார். இதனை கவனம் கூர்ந்து மேலிடம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிக்கு". என்று விநாயகர் அதில் கையொப்பம் இட்டிருந்ததை சிவன் படித்தார்.



அதனை பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கும்


'ஃவார்வெட் ' செய்துவிட்டு மீண்டும் தவநிலையில் மூழ்க தொடங்கினார் ஈசன். ஒரு மணி நேரத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும் ‌ஈசனது அலுவலகமான கைலாயத்திற்கு வருகை புரிந்தனர். 



மூவரும் இந்திரனை வரவழைத்தனர். 


"இந்திரனே நீ  'ஆபிஸ் டைம்ல வொர்க் பாக்காம நடன அழகிகளின் டான்ஸ பாத்துக்கிட்டு இருக்க அதுனால பூமியில சரியா மழை பெய்றது இல்ல., மரங்கள் எல்லாம் வளமடைரதில்ல , மக்கள் உணவு இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க" என பிரம்ம தேவன் இந்திரனிடம் கூறினார். 



இந்திரனோ "பிரம்ம தேவரே.. நான் என் டியூட்டிய கரக்டாதான் செய்யுறேன்" என்று மறுமொழி கூற. 



"உன்னால பல மானிடர்கள் அவஸ்த்தை படுறாங்க, இயற்கையுடன் ஒன்றி வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடவுளே உனக்கு கண்ணு இல்லையா,மூக்கு இல்லையான்னு பல கேள்விய கேட்டு எங்கள திட்டுறாங்க.. இப்படியே நீ பண்ணிக்கிட்டு இருந்தினா 'கம்பெனிய' மூட வேண்டியது தான் என்று விஷ்ணு எச்சரித்தார்.



 "உன்னை இந்த கம்பெனியிலிருந்து டிஸ்மிஸ் செய்யலாம்னு மூனு பெரும் முடிவெடுத்துருக்கோம்" என அனைவரையும் தொடர்ந்து சிவனும் கூறினார்.



இதைக்கேட்ட இந்திரன் சற்று அதிர்ச்சி அடைந்து "எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க எனக்கு ஒரு ச்சான்ஸ் தாங்க " என் மூவரையும் வேண்டி கேட்டுக்கொண்டார்.



மூவரும் ஆலோசித்ததை தொடர்ந்து "சரி உனக்கு ஒரு ச்சான்ஸ் தறோம் அத சரியா செஞ்சா தான் உனக்கு இங்க வேல... " என்று கூறினர். "சீக்கிரம் சொல்லுங்க...?" என்று ஆவலோடு இந்திரன் கேட்க ". "பூமியில் ஏழையாக உள்ள ஒரு விவசாயியின் நிலத்தில் நீ விவசாயம் செய்து அவரை நீ பணக்காரன் ஆக்க வேண்டும்" என எவ்வித யோசனையுயின்றி வைகுண்டநாதனான விஷ்ணு கூறினார். 



"அப்பாடா.... இவ்வளவு சின்ன விசயமா" என மனதில் மகிழ்ச்சி அடைந்த இந்திரனுக்கு "மேலும் ஒரு நிபந்தனை.. இந்திர தேவனே நீ இந்த டாஸ்க்கை செய்து முடிக்கும் வரை உன்னை போலவே வேலைய சரியா செய்யாத இன்னொரு இந்திரனை நான் பணியமர்த்துவேன் அதை சமாளித்து வெற்றி பெறவேண்டும்" இவ்வாறாக கூறி முடித்தார்.



அவ்வளவு தானே என நினைத்து மூவரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு பூலோகம் நோக்கி புறப்பட்டான் இந்திரன். பூமியில் மானுடர் போல் சாதரண தோற்றம் கொண்டு 'ஏழை விவசாயி' யாராவது கண்ணில் படமாட்டார்களா என தேடி அழைந்துக்கொண்டிருந்தான். 



அண்ணாமலை நாதர்கோயில் வாசலில் "சிவபெருமானே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்துப்பா!!!. மழை சரியா பேயாம பயிரெல்லாம் கருகிப்பெய்டுது இல்ல ஒரேயடியா மழைபெஞ்சி முழுகி பெய்டுது. இதுனால நாட்ல உணவு பஞ்சம் இதெல்லாம் நீ பார்த்துக்கிட்டு தானா இருக்க" என்று ஒருவர் புலம்பியதை கேட்ட இந்திரன் நாம் தேடிய ஆள்‌ கிடைத்துவிட்டான் என நினைத்து அந்த சந்நிதி வாசலில் காத்திருந்தான்.  



அவரும் விழிகளில் வந்த கண்ணீரை தனது வேட்டியின் நுனியால் துடைத்துக் கொண்டே வெளியில் வந்தார்.சற்று இளவயது தோற்றம் கொண்ட அவரிடம், "ஐயா.. நீங்க புலம்புனதுலாம் என் காதுல விழுந்திச்சி.நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில வேல பாத்தேன் சரியா வேலை செய்யாததுனால என் முதலாளி என்ன கம்பெனியில இருந்து வெளிய அனுப்பிட்டாரு . சோத்துக்கே வழி இல்ல நானும் உங்க கூட சேந்து விவசாயம் பண்றன்...ஐயா..??"என்று கெஞ்சியபடி அவரிடம் வேண்டினான் தேவவேந்தன். 



"சரிப்பா எனக்கும் ஒரு ஆள் தேவதான்,ஆனா சம்பளம் தர அளவுக்கு நா பணக்காரன் இல்ல...!"என்று அவர் கூற "சம்பளம்லாம் வேனா ஐய்யா.."என்று இந்திரன் கூறினான்."ஆமா உன் பேரு என்னப்பா..? என்று அவர் கேட்டார். 'ஐயா என் பேரு 'மூர்த்தி' என சில வினாடி யோசித்து இந்திரன் கூறினான். இந்திரன் உடனே "ஐயா ஒங்க பேர நான் தெரிஞ்சிக்கலாமா? என்று கேட்டான். தெரிஞ்சிக்கலாம் இதுல என்ன இருக்கு என் பேரு 'நடராஜன் ' என்றார். 


நடராஜனுக்கு தாய், தந்தையர் இல்லை மனைவி மட்டுமே துணை இருந்தாள் அவளும் நான்கு மாத கர்ப்பமாக இருந்தாள் .


தான் இக்காலத்தில் மனைவிக்கு துணையாக இருப்பதால். இவ்வருட விவசாயத்திற்கு மூர்த்தியை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தான்.சில மாதங்களில் நடராஜனும், மூர்த்தி என்ற பெயர் கொண்ட இந்திரனும் நெருங்கிய நண்பர்கள் போல ஆயினர்.தன் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவளுக்கு செலவு செய்ய ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி இருந்தான் நடராஜன். அதனை இந்த விளைச்சல் முடிந்தவுடன் அடைப்பதாக கடன் கொடுத்தவர்களிடம் கூறி இருந்தான்.


"ஆடிப் பட்டம் தேடி விதை"என்ற பழமொழிக்கேற்ப ஆடி மாதத்தில் அனைத்து விவசாயிகளும் விதைவிதைக்க தயாரானனர். வானம் பார்த்து விவசாயம் செய்த காலங்கள் எல்லாம் பொய்த்து விட்டது என்றாலும் , ஆடி மாதம் விதைத்தால் அற்புதமான விளைச்சலை தரும் என்ற நம்பிக்கை இன்றளவும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளும் விதைவிதைக்க தொடங்கினர்.

நடராஜனும் மூர்த்தியும் கூட.


ஐந்து மாதங்கள் மலமலவேன கடந்து மார்கழி மாதமும் வந்தது பயிர்களில் பால் நெல் அரும்பு  வளர்ந்திருந்தது . கால நிலை மாற்றத்தால் கடுமையான புயல் இம்மாதம் வந்து கனத்த மழை மற்றும் புயலினால் ஊரே வெள்ளக்காடாய்  மாறி அளவுக்கடந்த தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழிந்து முற்றிலும் நாசமாயின. 


நடராஜனும் இந்நிலையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கடன் கொடுத்தவர்கள் நடராஜனையும் அவன் மனைவியையும் அறசொற்களால் கடிந்தனர்.


அன்று நடராஜன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நேரம் அவன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருந்தது.  'மூர்த்தி' அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றான். இதை அறியாத நடராஜன் கடனை கட்டமுடியாததாலும் நாலு பேர் முன்னர் குடும்பத்தை கொச்சைப்படுத்தி பேசியதாலும் விஷமருந்தி இறந்து விட்டான். மருத்துவமனையில் நடராஜன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவள் இறந்து விட்டாள்.இதனை நடராஜனுக்கு தெரிவிக்க வீட்டிற்கு சென்று பார்த்ததும் தான் நடராஜன் இறந்த செய்தி 'மூர்த்தி' என்ற பெயர் கொண்ட இந்திரனுக்கு தெரிந்தது. 


அதனால் மூம்மூர்த்திகளையும் வேண்டினான் இந்திரன். மூவரும் ஒருங்கே இந்திரனுக்கு காட்சி தந்தனர். "மூம்மூர்த்திகளே.. நான் வேலை செய்யாமல் இருந்ததால் என்ன நிகழ்கிறது என்ற உண்மையை கண் கூடாக தெரிந்து கொண்டேன். ஆனால் பாவம் அந்த சிறு குழந்தை தாய், தந்தை இல்லாமல் எப்படி  வாழும் . எனவே இருவரில் யாராவது ஒருவரை உயிரொடு வையுங்கள்.."என்று அழுது இந்திரன் வேண்டினான்.


"அவர்களுக்கு விதி முடிந்து விட்டது. இனி அவர்களை உயிரொடு கொண்டு வர முடியாது" என்று ஈசன் கூறினார்.


" இந்திரனே உன் தவற நீ உணர்ந்ததால் உன்ன மறுபடியும் பணியமர்த்துறோம் எங்களோட வா....."என பிரம்ம தேவன் இந்திரனை அழைத்தார்.


"பிரபுவே..என்னை மன்னித்துவிடுங்கள் நான் நீங்கள் கொடுத்த வேலையை முடிக்காமல் எங்கும் வரமாட்டேன்" என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு வைராக்கியத்துடன் இந்திரன் பிரம்ம தேவனிடம் கூறினான்.


 "நீ தப்ப உணர்ந்துட்ட  அதனால நீ சரியா வேலை செய்வ உன்னை போலவே அமைத்த இந்திரனை வைத்து இனி சமாளிக்க முடியாது" என்று விஷ்ணு கூற.  



"அப்போ நீங்க அந்த சிறுவனை செல்வந்தனாக்கி நல்ல வாழ்க்கையை அமைத்து தருவேன் என்று 'அக்ரிமென்டல' 'சைன்' போட்டால்தான் நான் வருவேன்" எனகூறினான் இந்திரன். விஷ்ணுவும் மற்ற இருவரும் வேறு வழியில்லாமல் அதையே செய்தனர். இந்திரனும் தவறை உணர்ந்த ஒரு வேலைக்காரன் எப்படி வேலையை சரியாக செய்ய வேண்டும் என நினைப்பானோ அதே போல் நாம் வேலையை சரியாக செய்வோம் என உறுதி மொழியுன் 'கம்பெனியில் ரீஜாயின்ட்' செய்தான்.

2 Comments

  1. சிரிக்கவும், சிந்திக்கவும் வேண்டிய கதை👌 வாழ்த்துக்கள் குகன் 💐💐💐

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு