Trending

காப்பீடு திட்டம் அட்டை online apply

 

காப்பீடு திட்டம் அட்டை online apply

கலைஞர் மருத்துவ காப்பீடு அட்டை என்று மக்களால் அழைக்கப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை apply செய்து download செய்யும் வழிமுறை இந்த பதிவில் தரப்படுகிறது. கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.


முக்கிய தகுதி


காப்பீடு திட்டம் அட்டை online apply செய்து அட்டை பெறும் தகுதி உள்ளவரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கு (₹1,20,000) குறைவாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு காப்பீடு அட்டை திட்டம் பொருந்ததாது. 


காப்பீடு அட்டை online apply வழிமுறை


ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானத்தை உள்ளவர் உங்களது ஊரின் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று (VAO) ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்தும் விதமாக வருமான சான்றிதழை எடுத்து கொள்ளவும் அல்லது வருமான சான்றிதழை online apply செய்து கொள்ளவும்.


வருமான சான்றிதழ் online apply


வருமான சான்றிதழை online apply செய்யும் வழிமுறை கீழே தரப்பட்டு உள்ளது. காப்பீடு அட்டை apply செய்ய காலாவதி ஆகாத வருமான சான்றிதழ் மிகவும் முக்கியமாகும். கட்டுரையை முழுமையாக படித்து முயற்சி செய்யவும்.

  1. www.tnesevai.tn.gov.in எனும் இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்
  2. பயனாளர் உள்நுழைவு பொத்தானை சொடுக்கவும்
  3. கீழே உள்ள New User? SignUp here பொத்தானை சொடுக்கி உங்களது விவரங்களை உள்ளிடவும்
  4. உங்களுக்கான கணக்கு இ-சேவை வலைதளத்தில் உருவாகும்.
  5. பின், உங்களுக்கான CAN Number Register செய்து கொள்ளவும்.
  6. துறை அடிப்படையிலான பட்டியலில் Revenue Department தேர்வு செய்யவும் 
  7. REV-103 Income Certificate தேர்வு செய்யவும்
  8. விவரங்களை உள்ளிட்டு வருமான சான்றிதழ் apply செய்து கொள்ளவும். 
  9. 2 நாளில் apply செய்த வருமான சான்றிதழ் online pdf வடிவத்தில் VAO மேற்பார்வைக்கு பின் வந்து சேரும்.

காப்பீடு அட்டை apply செய்ய வருமான சான்றிதழ் மிகவும் முக்கியமாகும்.


காப்பீடு திட்டம் அட்டை யாருக்கு பொருந்தும்?


கீழே தரப்பட்டுள்ள இவர்களுக்கு மட்டுமே நீங்கள் எடுக்கும் காப்பீடு அட்டை பொருந்தும்

  1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்
  2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்
  3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்

மேலே தரப்பட்டுள்ள இவர்களின் பெயர்கள் உங்களது குடும்ப அட்டையில் பதிவாகி இருக்க வேண்டும் இல்லையெனில் காப்பீடு திட்டம் அட்டை இவர்களுக்கு பொருந்ததாது.


வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களும் முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை அகதிகளுக்கும் கூட தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை பொருந்தும்.


காப்பீடு திட்டம் அட்டை பெறுவது எப்படி?


வருமான சான்றிதழ் காப்பீடு திட்டம் அட்டை பெற மிகவும் முக்கியமானதாகும். அதை பெற்ற பிறகு உங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கு உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை பிரிவில் படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யலாம் அல்லது மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை பெறும் படிவம் - Download Here


படிவத்தோடு சேர்த்து இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  1. வருமான சான்றிதழ்
  2. ஆதார் கார்டு நகல்
  3. ரேசன் கார்டு நகல்
  4. குடும்ப உறுப்பினர்கள் புகைப்படம்

இந்த ஆவணங்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பிரிவாளரிடம் கொடுத்த ஒரு வாரத்தில் உங்களுக்கு URN Number அல்லது Policy Number கிடைத்து விடும். அதன் பிறகு காப்பீடு திட்டம் அட்டை online மூலமாகவே download செய்து பெற்றுக் கொள்ளலாம். காப்பீடு திட்டம் அட்டை download செய்யும் வழிமுறை கீழே தரப்பட்டு உள்ளது. கட்டுரையை முழுமையாக படிக்கவும்.


காப்பீடு திட்டம் அட்டை online download


காப்பீடு திட்டம் அட்டை online apply

கீழே தரப்பட்டுள்ள படிநிலைகள் மூலம் காப்பீடு திட்டம் அட்டையை online download செய்து கொள்ளலாம். கட்டுரையை முழுமையாக படித்து முயற்சி செய்து பார்க்கவும்.

  1. இங்கே சொடுக்கி Payer Claims Management வலைதளத்திற்கு செல்லவும்
  2. அங்கே உங்களது விவரங்களை உள்ளிட்டு Search செய்யவும்
  3. உங்களுக்கான காப்பீடு திட்டம் அட்டை online download செய்து கொள்ளலாம்

காப்பீடு திட்டம் அட்டை apply செய்யும் படிவம்


கீழே தரப்பட்டுள்ள இந்த படிவத்தினை நகல் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள காப்பீடு திட்டம் அட்டை பிரிவிற்கு கொண்டு செல்லவும்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு