Trending

உணவு பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் கட்டுரை

 உணவு பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் கட்டுரை

உணவு பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் கட்டுரை


உணவு பொருள் வீணாவதை தடுத்தல்


900 கோடிக்கும் மேல் இருக்கும் இந்த உலகில் சுமார் 85 கோடிக்கு மேலான மக்கள் தினமும் உணவின்றி தவிக்கிறார்கள்


உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் 1 பங்கு உணவு பொருட்களானது வீணாகி அழிகிறது. இதனால் இந்த உணவை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு, பணம், நேரம், கனிம வளம் என அழைத்துமே வீணாகிறது.


எப்படி வீணாகிறது


1) தேவைக்கேற்ப சமைக்காததே முதற் காரணம். ஒரு வீட்டில் நால்வர் இருக்கிறார்கள் எனில் நால்வருக்கு மிகுதியாக செய்வதனால் பெருமளவு உணவு நஷ்டமாகிறது என்பது ஆய்வு கூறுகிறது.


2) விழா காலங்களில் திருமண சடங்குகளில் செய்யப்படும் மிகுதியான உணவுகள் மிஞ்சுவதை ஏழைகள் (அ) உணவு கிடைக்காதோருக்கு கொடுக்காமல் குப்பைகளில் கொட்டுவதால் உணவு பொருட்கள் வீணாகிறது.


3) தேவைக்கு மிஞ்சியதை உண்பதாலும் உணவு வீணாகிறது இதனால் உடல் நலமும் கெடுகிறது


சிக்கனம்


சிக்கனமாக உணவு பொருளை பயன்படுத்துதலை அறிதல் வேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அந்நாளை கடக்க முயற்சி செய்யுங்கள். காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தலாம். சரியாக குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தும் போது உணவு பொருள் வீணாவதை 65% தடுக்க முடிகிறது என்பதை அமெரிக்க ஆய்வு சொல்கிறது.


ஹோட்டல் தவிர்க்கவும்


மதிய உணவை வேலைக்கு செல்வோர் ஹோட்டலில் சென்று உண்பார்கள். பெரும்பாலான மக்களுக்கு உணவு பொருள் கிடைக்காமல் அவைகள் குப்பை தொட்டிக்கு செல்ல உணவகங்கள் துணை செய்கிறது. ஹோட்டலில் ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் உணவில் நூற்றில் 30% குப்பை தொட்டிக்கு செல்கிறது.


மதிய உணவை காலையிலேயே எடுத்து செல்வதன் மூலம் ஹோட்டல்கள் தங்களது உற்பத்தி அளவை குறைக்கும் இதனால் பெருமளவு உணவை சேமிக்கலாம்


இன்னொரு வழி


ஹோட்டல் உணவு நீங்கள் உண்பவரானால் நீங்கள் எப்போதும் ஒரு பிளாஸ்டிக் பையோ அல்லது ஒரு டப்பாவோ எடுத்து வைத்து கொண்டு உணவகத்திற்கு செல்லவும். தேவையானவற்றை உண்ட பிறகு உணவு மிஞ்சவதாயில் கூச்சமின்றி அவற்றை நீங்கள் கொண்டுவந்த கொள்கலனில் எடுத்து வைத்து கொள்ளவும். பின் பசித்தால் அவற்றை உண்ணவும். இதனால் உணவகங்களில் வாடிக்கையாளர் மிச்சப்படுத்தி குப்பைகளில் கொட்டப்படும் உணவு பொருட்கள் அதிக அளவில் சேமிக்கப்பட நீங்களும் காரணமாவீர்கள்.


நூதன திட்டம்


உணவு வீணாவதை தடுக்க லண்டன் நகரத்து மக்கள் தங்கள் வீடுகளில் வீணாகும் பொருட்களை ஒரு பொது இடத்தில் சேமிக்க தொடங்கினார்கள். உணவுகள் தேவைப்படுவோர் அந்த இடத்திலிருந்து இலவசமாக உணவினை கொண்டு செல்லலாம். இதுபோன்ற திட்டங்களை அரசு கொண்டுவர பெருமளவு உணவு வீணாவதை தடுக்கலாம்.



கவனம் தேவை


பொருட்களை வாங்கும் போது கவனம் அவசியம். விரைவிலே காலாவதி ஆகும் பொருட்களை உணவிற்காக வாங்கும் போது அதை கவனமுடன் சரிபார்த்து வாங்குதல் வேண்டும். இது உடல் நன்மை மட்டும் அல்லாது உணவு பொருள் வீணாவதை தடுக்கவும் உதவுகிறது.


உரம் செய்


வீணாகும் உணவை உரமாக மாற்றுவதனால் நல்லமுறையில் உணவு வீணாவதை தவிர்க்கலாம். உரக்குழி முறை மூலம் உணவுகளை உரமாக மாற்றலாம். குறைவான இடவசதி கொண்டோர் வீட்டின் மாடிகளிலே உரமாக்க முயலலாம். 


காய்கறி மிச்சங்கள் உரமாக்க அதிகம் பயன்படுகிறது. வெங்காய தோல்கள், கேரட் மேல் மற்றும் அடிபகுதி, முள்ளங்கி, வெண்டைக்காய் என அனைத்துமே எருவாக்க பயன்படுவதோடு மட்டுமல்லாமல் நல்ல விலைக்கு விற்பனையும் ஆகிறது.


உணவு வடிவமைப்பு


வெளிநாடுகளில் வீட்டிலும் வெளி உணவகங்களிலும் உணவு வடிவபைப்பானது பின்பற்றப்படுகிறது. இதனால் ஒவ்வொரு உணவும் அதில் சேர்க்கப்படும் அனைத்து உணவு பொருட்களையும் காட்டும் விதமாக பிரித்து தட்டில் வைத்து பரிமாறப்படுகிறது. இதனால் மக்கள் உணவு வகைகளை உணர்ந்து அனைத்தையுமே சரியான அளவில் உண்கிறார்கள். இதனால் சாதாரணமாக ஹோட்டலில் வீணாகும் 30% உணவுகள் பாதியாக குறைகிறது என ஆய்வுகள் கூறுகிறது. இம்முறை வீட்டிலும் பயன்படுத்துவதால் பெருமளவு உணவு வீணாவதை தவிர்க்கலாம்


இதையும் காண்க

முடிவு


நாம் மூன்று வேளையும் தவறாமல் உண்கிறோம் ஆனால் உலகில் தினமும் 85 கோடி மக்களுக்கும் மேலானோர் ஒரு வேளை உணவு கூட கிடைக்காத நிலையில் உள்ளார்கள். உணவு பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் கட்டுரை மூலம் இதை உணர்ந்து உணவினை சிக்கனமாகவும் தேவைக்கு அதிகம் இல்லாமலும் உட்கொண்டு ஆரோக்கியத்துடன் உணவு வீணாவதை தவிர்த்திடுங்கள்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு