Trending

அரசு வேலைவாய்ப்பு (Govt Jobs) செய்திகள் 2022

 

velaivaippu seithigal 2022

நகர ஊரமைப்பு உதவி இயக்குநர்


நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் பணியானது 29 இடங்களில் காலியாக உள்ளது.  இவற்றில் நேரடி நியமனம் எழுத்து தேர்வை TNPSC நடத்த கடந்த வருடம் ஜூலை மாதம் தேதிப்படி 32 வயதிற்குள் உள்ளோர் மட்டும் இதில் பதிவு கட்டணம் 150 மற்றும் தேர்வு கட்டணம் 200 செலுத்தி வரும் மார்ச் 23 க்குள் விண்ணப்பம் செய்யலாம்.


மேலும் விவரங்களுக்கு > www.tnpsc.gov.in என்ற இணையத்தில் அறியலாம்.


ஊரக உருமாற்ற திட்டம்


உலக வங்கி உதவியுடன் 31 மாவட்டங்களில் 120 தொகுதிகளில் இது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு கிராமப்புற சங்கத்தில் 324 இடம் காலியாக உள்ளது. பெண்களின் அதிகபட்ச வயது வரம்பு 40-53 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வி மற்றும் தேர்வுக்கான அனுபவ அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்


மேலும் விவரங்களுக்கு > https://tnjobs.tnmhr.com என்ற இணையத்தில் அறியலாம்.


மெட்ரோவில் வேலை


சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டெட் நிறுவனம் மேலாளர், பொது மேலாளர், உதவி மேலாளர், துணை பொது மேலாளர் என 19 இடங்களை நேர்காணல் மூலம் நியமிக்க உள்ளது. விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தபட்டவர்கள்  ரூ.300, பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.50.


மேலும் விவரங்களுக்கு > www.chennaimetrorail.org என்ற இணையத்தில் அறியலாம்.


வக்பு போர்டு வேலை


அரசு வக்பு வாரியத்தில் காலியாக உள்ள உதவி சட்ட அதிகாரி பணியிடம் 2 நிரப்ப உள்ளது. ஏதும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சட்டத்தில் பட்டம் பெற்றோருக்கு முன்னுரிமை உண்டு. தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.


மேலும் விவரங்களுக்கு > www.tnwaqfboard.tn.gov.in என்ற இணையத்தில் அறியலாம்.


மருந்தாளர் வேலை


தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் மருந்தாளர் 84 பேர் நியமிக்க உள்ளது. நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்ய படுவார்கள். SC ST அருந்ததியினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு 300 மற்றவர்களுக்கு 600. வரும் மார்ச் 17 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு > mrb.tn.gov.in என்ற இணையத்தில் அறியலாம்.


ஜிப்மரில் வேலை


புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் குரூப் பி பணியிடங்கள்களான நர்சிங், ஸ்டெனோ, இன்ஜினியர் உள்பட மொத்தம் 143 இடம் காலியாக உள்ளது. மார்ச் 10லிருந்து 30 வரை விண்ணப்பிக்கலாம்.


மேலும் விவரங்களுக்கு > jipmer.edu.in என்ற இணையத்தில் அறியலாம்.


வங்கி உதவி மேலாளர்


இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் 100 உதவி மேலாளர் இடங்கள் காலியாக உள்ளது. இவற்றில் பணியாற்ற ஏதாவது ஒரு துறையின் இளநிலை பட்டதாரிகள் வரும் மார்ச் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


பெண்கள் வார்டா மாற்றியது பெரும்பாலும் வேஸ்ட் தான்...


மேலும் விவரங்களுக்கு > www.sidbi.in என்ற இணையத்தில் அறியலாம்.


இதையும் காண்க


👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 41

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு