Trending

Vivekanandar Quotes in Tamil | விவேகானந்தர் பொன்மொழிகள்

 

vivekanandar quotes in tamil

விவேகானந்தர் ஆற்றல் பற்றி முழங்கிய பொன்மொழிகள் | Vivekanandar Potency Quotes in Tamil


நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள். ஆதலால் எதையும் செய்யக் கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்கிறது.


எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள் மகத்தான காரியங்களை மகத்தான தியாகங்கள் தான் செய்ய முடியும்


உங்களில் ஒவ்வொருவரும் பேராற்றல் உடையவராக நிச்சயம் இருக்கமுடியும் என்று நான் சொல்கிறேன். நீங்கள் பேராற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் இருந்தே தீர வேண்டும் இதுதான் என் ஆணை


இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் எதனாலும் தடுக்க முடியாத அளவற்ற மனவலிமையும் கொண்டவர்கள் தான் இப்போது நம் நாட்டிற்கு தேவைப்படுகிறார்கள்


நம் நாட்டு மக்கள் தங்களிடம் இருக்கும் சக்திகளை உணர்ந்து கொள்ளவில்லை. அதனால் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை நாம் எழுச்சி பெற செய்ய வேண்டும்.


பலவீனத்திற்கு பரிகாரம் ஓயாமல் பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதில்லை. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான் பலவீனம் நீங்குவதற்கு சரியான பரிகாரம்


நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்


வலிமையோடு இருங்கள் உங்கள் சொந்த காலில் நில்லுங்கள் சுய உதவி செய்து கொள்ள தெரியாதவர்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்கள்


வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் இதில் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனின் மன நிலைதான் இப்போது நமக்கு இருக்க வேண்டும்


நமக்குள் எல்லா ஆற்றல்களும் இருக்கின்றன எனவே நம்மால் இந்த உலகத்தையே இயக்க முடியும்


ஒவ்வொரு நாடும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்க்க கூடாது. இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருங்கள்


வலிமையோடு இருங்கள் மூடக் கொள்கைகளை உதறித் தள்ளுங்கள். உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் நீங்கள் அணுக கூடாது. இதுதான் நான் உங்களுக்கு சொல்ல விரும்பும் முதல் அறிவுரை


மனம் அதிகமாக ஒருமுகப்படும் அளவிற்கு அதன் ஆற்றல் அதிகமாக ஓரிடத்தில் செலுத்தப்படுகிறது. அதுதான் மனிதனின் ஆற்றலை பற்றிய ரகசியம்


Vivekanandar Quotes in Tamil (Scroll down for more)


விவேகானந்தர் லட்சியம் பற்றி முழங்கிய பொன்மொழிகள் | Vivekanandar Ambition Quotes in Tamil


லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன். எனவே உயர்ந்த ஒரு லட்சியம் கொண்டிருப்பது நல்லது


மரணம் வருவதோ உறுதி ஆனால் இறப்பதற்கு என்று மேலான ஒரு லட்சியத்தை கொண்டு மேலான ஒரு குறிக்கோளுக்காக வாழ்ந்து இறந்து போவது மிகவும் சிறந்தது


ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக இரு. ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்


மகத்தான லட்சியத்தை ஒருவன் மேற்கொள்வதும் அதற்காக அவன் தன் முழு வாழ்க்கையை அர்ப்பணிப்பதும் ஒரு மகத்தான செயலாகும்


நீங்கள் மகத்தான காரியங்களை செய்யாமல் சின்னஞ்சிறிய செடி கொடிகளைப் போல் பிறந்து பிறந்து சாகும் மிகவும் கீழ்த்தரமான வாழ்க்கை நடத்துவதில் என்ன பெருமை இருக்கிறது?


இனி அழுகை என்பதே உங்களிடம் இருக்கக்கூடாது. சுய வலிமை பெற்ற வீரர்களாக எழுந்து நில்லுங்கள். நீ வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள்.


நம்மை ஆண்மை படைத்தவர்களாக்கும் மதம் தான் நமக்கு வேண்டும். நம்மை ஆண்மை படைத்தவர்களாக்கும் கல்வி தான் நமக்கு வேண்டும்.


நீ மனிதனாக பிறந்திருக்கிறாய், நீ வாழ்ந்து மறைந்ததற்கு பின்னால் ஒரு அழியாத அடையாளம் எதையாவது விட்டுச் செல். வாழ்க்கை என்ற கத்தி துருபிடித்து அழிந்து போவதை விட தேய்ந்து அழிந்து போவது மேல். அதிலும் முக்கியமாக மற்றவர்களுக்கு ஒரு சிறிது நன்மை செய்யும் பொருட்டு அழிந்து போவது மிகவும் நல்லது.


நீ உன் உடலை மிகவும் வலிமை உள்ளதாக ஆக்கிக் கொள்ளவேண்டும் மற்றவர்களும் அவ்விதமே செய்யும்படி சொல்லித்தர வேண்டும்


நான் வலிமை வேண்டும் வலிமை தான் வேண்டும் என்று சொல்கிறேன். ஒவ்வொரு துறையிலும் அளவற்ற வலிமை நமக்கு இருக்க வேண்டும்


இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம் இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்கள் ஆக்கிக்கொள்ள வந்திருக்கிறோம்


இரவும் பகலும் நீங்கள் உங்கள் ரத்தத்தை சிந்தி உழைத்தால் இந்த வாழ்க்கையில் உங்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை


எழுந்து கொள்ளுங்கள் விழித்துக்கொள்ளுங்கள் லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் செல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் முழங்குவோம்


Vivekanandar Quotes in Tamil (Scroll down for more)


விவேகானந்தர் இளைஞர் பற்றி முழங்கிய பொன்மொழிகள் | Vivekanandar Youth Quotes in Tamil


அறிவாற்றலும் தூய்மையும் கொண்ட ஒரு நூறு இளைஞர்கள் முன் வாருங்கள் நாம் இந்த உலகத்தையே மாற்றி அமைக்கலாம். கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை


தங்கள் பணியை செய்து முடிப்பதற்கு நெருப்பில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அப்படியே செய்வதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும்


இளைஞர்களை ஒன்று திரட்டி செயலில் ஈடுபடு செய்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இந்த இளைஞர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று வசதி ஒழுக்கம் ஆன்மிகம் கல்வி ஆகியவற்றை கொண்டு போய் சேர்ப்பார்கள். இதை நான் சாதித்தே தீருவேன். அல்லது செத்து மடிவேன்.


முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். என் இளம் நண்பர்களே வலிமை பெறுங்கள். இதுதான் நான் உங்களுக்கு கூறும் அறிவுரை. நீங்கள் பகவத் கீதையை படிப்பதை விட கால்பந்து ஆடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும்.


நீ தூய்மை உள்ளவனாகவும் வலிமை உள்ளவனாகவும் இருந்தால் நீ ஒருவனே உலகில் உள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய். நான் இப்போது புயல் வேகத்தில் வேலை செய்ய விரும்புகிறேன். பயமற்ற இதயங்கள் தான் எனக்கு வேண்டும்


நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களை கிரகித்துக் கொண்டு அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி இருக்கச் செய்தால் பெரிய ஒரு நூல் நிலையம் முழுவதையும் மனப்பாடம் செய்து இருப்பவனை விட நீங்க அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்


நாம் எதையும் அவசரப்பட்டு செய்து விடக்கூடாது தூய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருக்க வேண்டும்


தூய்மையும் நேர்மையும் உன்னிடம் இருந்தால் எல்லாம் சரியாக அமையும் இப்போது உன்னை போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நம் நாட்டிற்கு தேவைப்படுகிறார்கள்.


நீயே தூய்மை பொருந்தியவன். ஓ மாபெரும் வீரனே கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள் எழுந்து நில் இந்த உறக்கம் உனக்கு ஏற்றதல்ல. நீ உன்னை துன்படுபவனாகவும் பலவீனமாகவும் நினைக்காதே எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே விழித்தெழுந்து நீ உன் ஆற்றலை - இயல்பை வெளிப்படுத்து


ஒரு கொள்கையை எடுத்துக்கொள் அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிருந்த ஆதரவான ஒரு காலம் வரும்


குறிக்கோளுக்கு செலுத்தும் கவனத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா ரகசியமும் அடங்கி இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது


தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள் ஒரு நாளிலோ ஒரு வருடத்தில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்


நீங்கள் மிகவும் உயர்ந்த இலட்சியத்தை எப்போதும் பற்றி இருங்கள். உறுதியாக இருங்கள் பொறாமை சுயநலம் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். சத்தியத்திற்கும் மனித குலத்திற்கும் உங்கள் தாய் நாட்டிற்கும் எப்போதும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள் அவ்விதம் நீங்கள் செய்தால் இந்த உலகத்தை அசைத்து விடுவீர்கள்.


பெயர் புகழ் மற்றவர்களை அடக்கி ஆளுதல் இந்த ஆசைகள் இல்லாமல் நாம் வேலை செய்வோம்


தடைகள் இல்லாமல் பெரிய காரியங்கள் எப்போதாவது செய்யப்பட்டிருக்கிறதா? போதிய அவகாசம் பொறுமை உறுதியான சங்கல்பம் ஆகியவைதான் வெற்றியை கொடுக்கும். இரும்பு போன்ற உறுதியான சங்கல்பங்களும் இதயங்களும் தான் நமக்கு இருக்க வேண்டும் உறுதியுடன் இருங்கள்


உன்னிடம் அளவற்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள். பிறகு அந்த நம்பிக்கையை நாட்டிற்கு வழங்கு. எதற்கும் கலங்காத நம்பிக்கை எதற்கும் தளராத தன்னம்பிக்கை உனக்கு இருக்க வேண்டும்


நான் எல்லாவற்றையும் செய்யக்கூடியவன் என்று நீ உன்னை பற்றி நினைத்தால் அது போலவே ஆகி விடுவாய்


இளைஞர்களே என் நம்பிக்கை எல்லாம் உங்களிடம் தான் இருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் மகத்தான வர்களாக மாறுவதற்குரிய எல்லையற்ற ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்


உண்மையில் நீங்கள் யாரும் பலவீனர்கள் இல்லை. எழுந்து நில்லுங்கள் உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துங்கள்


நீ உன்னை பலவீனன் என்று நினைக்கும் போதெல்லாம் உனக்கு மட்டுமின்றி நமது திருப்பணிக்கும் தீமை செய்கிறாய் என்பதை அறிந்து கொள். எல்லையற்ற நம்பிக்கையும் வலிமையும் தான் வெற்றிக்கு உரிய நியதிகள்.


என் அன்பு குழந்தைகளே! குறைகளும் பலவீனங்களும் உள்ளவர்கள் தான் பாவம் செய்வார்கள் பொய் பேசுவார்கள். இதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தைரியசாலிகள் மனவலிமை உள்ளவர்களும் எப்போதும் நல்லொழுக்கத்தில் இருப்பார்கள். நீங்கள் அழ வழியை பின்பற்றி தைரியமும் பிறரிடம் இரக்கமும் உள்ளவர்களாக இருங்கள்


தூய்மை பொறுமை விடாமுயற்சி ஆகியவை எல்லா தடைகளையும் தாண்டி விடுகின்றன பெரிய நிகழ்ச்சிகளெல்லாம் மெதுவாகவே நடைபெறும். தைரியத்துடன் வேலை செய்துகொண்டே போ பொறுமையோடும் உறுதியோடும் வேலை செய்வதுதான் வெற்றிக்கு உரிய ஒரே வழி


கீழ்படிய தெரிந்தவனுக்கு தான் கட்டளை விடவும் தெரியும் முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள்


நான் எல்லோரையும் விட பெரியவன் என்று தன்னைப்பற்றி நினைப்பவன் பெரிய காரியம் எதையும் சாதிக்க முடியாது. பெருமுயற்சி பெரும் தைரியம் வீரம் இவை அனைத்திற்கும் மேலாக கீழ்ப்படிதல் நமக்கு இருக்க வேண்டும் இந்த குணங்கள் தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாயத்தின் உயர்வுக்கும் உரிய வழியாகும்


Vivekanandar Quotes in Tamil (Scroll down for more)


விவேகானந்தர் இந்தியா பற்றி முழங்கிய பொன்மொழிகள் | Vivekanandar India Quotes in Tamil


நாமும் உருப்படியாக ஒன்றும் செய்ய மாட்டோம். சிறிது நல்ல காரியம் செய்ய முயற்சி செய்பவர்களையும் ஏளனமாக பேசுவோம். இந்தக் குறை தான் நம் இனத்திற்கே சர்வதேசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வறண்ட இதயமும் முயற்சி செய்யாமல் இருப்பதும் தான் நம்முடைய எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். எனவே நாம் இந்த இரண்டையும் உதறித்தள்ள வேண்டும்


தற்கால ஜாதி வேற்றுமைகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. தற்கால ஜாதி வேற்றுமைகள் வாழ்க்கையைக் உருக்குகிறது. தற்கால ஜாதி வேற்றுமைகள் சமுதாய முன்னேற்றத்தை கட்டுப்படுத்துகிறது. தற்கால ஜாதி வேற்றுமைகள் மக்கள் இடையில் பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்த ஜாதி வேற்றுமைகள் அறிவு வெள்ளத்தின் முன்னால் விழுந்து மாயும்.


நீ ஒரு கருத்தை எடுத்துக் கொள் அந்த ஒரு கருத்தையே உன் வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த ஒரு கருத்தை ஒட்டியே நீ வாழ்ந்து வா. உன் மூளை தசைகள் நரம்புகள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஒரு கருத்தையே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு. இது தான் வெற்றிக்கு வழி


நாட்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வம் தான் உண்மையில் தேசபக்தி ஆகும்


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் மறுமையில் அவர்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழை மக்களுக்காக நாம் இரவும் பகலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக


நான் வணங்கும் தெய்வமாக இந்தியாவை வைத்திருக்கிறேன். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு தூசியும் எனக்கு புனித மாய்ந்தது ஏழை எளியவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் உன் தெய்வங்களாக இருக்கட்டும்


என் சகோதரர்களே நாம் அனைவரும் இப்போது கடுமையாக உழைப்போம் ஆக உறங்குவதற்கு இது நேரமில்லை எதிர்கால இந்தியா நமது உழைப்பை பொறுத்தே அமைந்திருக்கிறது


இப்போது இந்தியாவை மூடியிருக்கும் சோம்பல் நீங்க கொண்டே வருகிறது. இந்தியத்தாய் விழித்துக் கொண்டே வருகிறாள். நமது இந்தியத் தாய் திருநாடு மிக ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இப்போது விழித்திருக்கிறது


இனிமேல் யாரும் இந்தியத்தாய் விழித்து இருப்பதை தடுத்து நிறுத்தமுடியாது. இனிமேல் எந்த காலத்திலும் அவள் தூங்க போவதுமில்லை. இனிமேல் எந்த வெளிநாட்டு சக்தியும் இவளை அடிமைப்படுத்த முடியாது. அவளுடைய காலடியில் எல்லையற்ற ஆற்றல் இப்போது எழுச்சி கொண்டிருக்கிறது


இந்தியாவில் இருக்கும் 30 கோடி மக்கள் நாள்தோறும் கீழ் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் இவர்களின் நல்வாழ்வை மீட்டுத் தருவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாக சபதம் மேற்கொள்ளுங்கள்


இறைவனின் கட்டளை பிறந்து விட்டது. இந்தியா முன்னேறிய ஆகவேண்டும் பாமரர்களும் ஏழைகளும் நலம் பெற வேண்டும் நீங்கள் ஆக்கபூர்வமான நற்பணிகளில் நமது தாய்த்திரு நாட்டின் முன்னேற்றத்திற்காக முழுமனதுடன் வேலை செய்யுங்கள்


இந்தியா அழிவே இல்லாத ஆன்மீக பூமி. இந்த நாடு இப்போது வீழ்ச்சி அடைந்து விட்டது. அதில் சந்தேகமே இல்லை ஆனால் இந்த நாடு நிச்சயமாக எழுச்சி பெறும் எழுந்து நிற்கும் இந்தியாவின் முழக்கம் உலகம் முழுவதையும் பிரம்மிக்க வைக்கும்


நமது இந்தியாவின் பழம்பெருமை மகத்தானது என்பதில் சந்தேகமில்லை ஆனால் இந்தியாவின் எதிர்காலம் இன்னும் மாண்புடைய தாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்


இப்போது இந்தியாவுக்கு என்ன வேண்டும் தியாக மனப்பான்மையும் கொண்ட இளைஞர்கள் குறைந்தது ஆயிரம் பேர் வேண்டும். மூடர்கள் அல்ல


இந்தியாவில் ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து பெற்ற செல்வத்தை எல்லாம் வைத்துக்கொண்டு சொகுசாக உடுத்தி மீனுக்காக உலவுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், 'பசியால் வாடி காட்டுமிராண்டிகளை விட உயர்ந்தவர்கள்' என்று இப்போது சொல்ல முடியாத நிலையில் இருக்கும் இந்தியாவின் 20 கோடி ஏழை மக்களின் நன்மைக்காக எதுவும் செய்யாத வரையில் அவர்களை நான் 'வெறும் பதர்கள்' என்றுதான் சொல்வேன்.


யாருக்கும் தனிச் சலுகை என்பது இருக்கக் கூடாது இந்த தனிச் சலுகைகள் இன் தலையில் அடித்து அவற்றை ஒழிக்க வேண்டும்


வீர மனிதர்கள் சுயநலமற்றவர்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர்கள் இப்படிப்பட்டவர்கள் தான் இந்தியாவிற்கு இப்போது வேண்டும்


இந்தியாவில் வீர முரசுகள் எக்காளங்கள் செய்யப்படுவதில்லையா? தாரைத்தப்பட்டை இந்த நாட்டில் கிடைக்காமலா போய் விட்டன? இத்தகைய கருவிகளின் வீர முழக்கத்தை நமது குழந்தைகளை கேட்க செய்லாகும். மென்மை மிக்க இசைகளை குழந்தை பருவம் முதலே கேட்டு கேட்டு இந்த நாடே கிட்டத்தட்ட பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.


நீங்கள் உண்மையில் என் குழந்தைகள் என்றால் எதற்கும் பயப்பட மாட்டீர்கள் சிங்கங்களாக திகழ்வீர்கள் இந்தியாவையும் உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச் செய்ய வேண்டும் கோழைத்தனம் என்பது இருக்கவே கூடாது


ஏழைகளின் குடிசைகளிலும் இந்தியா வாழ்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் என் சகோதரர்களே இந்திய மண் தான் சொர்க்கம் இந்தியாவின் நலன் தான் என்னுடைய நலன் என்று சொல்லுங்கள்


நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை படுகிறேன் இந்தியர்கள் அனைவரும் என் சகோதரர்கள் இந்திய சமுதாயம் எனக்கு புனிதம் அடைந்த சொர்க்கம் இந்திய மண் தான் என்னுடைய மிகவும் மேலானது சொர்க்கம் இந்தியாவின் நலன் தான் என்னுடைய நலன்


உங்கள் முயற்சியால் இந்தியா மறுமலர்ச்சி பெறும் புதிய இந்தியா தோன்றும் என்பதில் உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். வேலை செய்யுங்கள் வேலை செய்யுங்கள் வேலை செய்யுங்கள் இதுதான் நம் நாடு முன்னேறுவதற்கு உரிய மூல மந்திரமாகும்


இந்தியாவில் கோடானு கோடி மக்கள் பசியிலும் அறியாமையிலும் மூழ்கி இருக்கிறார்கள் அவர்கள் செலவில் கல்வி பெற்றுக் கொண்டு அவர்களுக்காக ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருக்கும் ஒவ்வொருவரையும் நான் துரோகி என்றே சொல்லுவேன்


ஒரு பெரிய மரத்தில் அழகான ஒரு பழம் பழுத்து கனிகிறது. பிறகு அந்த பழம் கீழே விழுந்து அழுகுகிறது. அந்த அழகிய கனியிலிருந்து தரையில் வேர் பாய்ந்து அதிலிருந்து முன்பு இருந்ததை விட பெரிய ஒரு மரம் தழைத்து கிளம்புவதை பார்க்கிறோம். இத்தகைய ஒரு தாழ்ந்த நிலையில் இருந்து இந்தியர்களாகிய நாம் இப்போது வெளியே வந்திருக்கிறோம்.


கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசையிலிருந்து புதிய இந்தியா எழுந்து வெளியே வரட்டும்! மீனவர்கள் சக்கிலியர்கள் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர்களின் குடிசையிலிருந்து புதிய இந்தியா எழுந்து வெளியே வரட்டும்! பலசரக்குக் கடைகள் பலகாரக் கடை களிலிருந்தும் புதிய இந்தியா எழுந்து வெளியே வரட்டும்! தொழிற்சாலைகள் கடை வீதிகள் சந்தைகள் ஆகியவற்றிலிருந்து எல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளியே வரட்டும்! தோட்டங்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் குன்றுகளில் இருந்து மலைகளிலிருந்தும் புதிய இந்தியா எழுந்து வெளியே வரட்டும்

1 Comments

  1. பெயர் இல்லாவிட்டாலும் தொகுத்து வழங்கியவரை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு