Trending

கொரோனாவுக்கு பின் வரும் மோசமான நாற்ற நோய்

 

bad smell after covid-19

கொரோனா பாதித்த பலராலும் இன்றளவும் நிம்மதியாக வாழ முடியவில்லை. காரணம் கொரோனா ஒரு சுவாச பிரச்சனை நோயாகும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களை ஆய்வு செய்ததில் அதில் சுமார் 72% பேர்களுக்கு பரோஸ்மியா நோய் இருக்கிறது.


நோயை பற்றி


கோவிட்-19 நம் நாசியில் இருக்கும் சில திசுக்களை சிதைப்பதாலும், ஆல்ஃபாக்டரி எபிட்டிலியம் திசுகளை நசுக்குவதாலும் இந்நோய் ஏற்படுகிறது.


எதை முகர்ந்தாலும் நாற்றமாக இருக்கும். சாப்பிட முடியாது, அத்தனை கொடுமையாக இருக்கும்.


மூக்கில் இருக்கும் ஆல்ஃபாக்டரி எபிட்டிலியம் திசுவானது மூளைக்கு சுவையை கடத்தக்கூடிய உணர்வு திசுவாகும். சுவையும் வாசனையும் இணையும் போது தான் உணவானது மூளையால் புரிந்துகொள்ளப்பட்டு உடலுக்கு ஏற்புடையதாகிறது. மூக்கிலிருந்து மூளைக்கு போகும் நியூரானை இந்த பரோஸ்மியா நோயானது சிதைத்துவிடுகிறது.


உணவின் சுவையில் ஏற்படும் மாற்றமோ, அல்லது வாசனையில் ஏற்படும் மாற்றமோ ஒரு மனிதன் தனக்கு பிடித்த உணவையே பார்த்தலும் கூட முகஞ்சுழிக்க செய்துவிடும். பரோஸ்மியா அதை தான் செய்கிறது.


பரோஸ்மியா


சிதைந்த வாசனை பரோஸ்மியா ஆகும். கொரோனா நோய் வந்த பிறகு பெரும்பாலான மக்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நமக்கு எப்படிபட்ட வாசனையை தருமென்றால்,


  • சிகரெட் அல்லது புகை நாற்றம்

  • ரசாயன கழிவு வாடை

  • அழுகிய காய்கறி நாற்றம்

  • வெங்காய வாசனை

  • எரிக்கப்பட்ட ரப்பர் வாசனை


இது நீண்ட காலம் நீட்டிக்கப்படும் போது அது ஹைப்போஸ்மியா ஏற்படுத்துகிறது. இது முற்றிலுமாக வாசனை உணர்வையே நம் நாசியிலிருந்து புடுங்கிவிடும்.


பரோஸ்மியா நோயை எப்படி தெரிந்து கொள்வது?


கொரோனா ஏற்பட்ட பிறகு வரும் சில அறிகுறி மூலம் இது ஏற்படும் விதத்தினை தெரிந்துகொள்ளலாம்


  • நாசியின் வாசனை உணர்வானது குறைவாகுதல்

  • வாசனையே தெரியாமல் போதல்

  • எந்த உணவும் முற்றிலுமாக நாற்றமாக தெரிதல்


காய்கறி மார்கெட்டுக்கு நடந்து போகும் போது. ஒரு கடையில் கொத்தமல்லி வாசனையையும் மற்றொரு கடையில் கருவேப்பிலை வாசனையும் கமழ்ந்து கொண்டிருக்கும், அப்போது எவன் மூக்கை பொத்திக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறானோ அவனுக்கு இந்த பரோஸ்மியா இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.


முதல் பரோஸ்மியா


மார்ச் 2021 கொரோனா தொற்றுக்கு பிறகு, இந்த நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை ஆய்வு செய்தார்கள்.


முதல் நபர்


அவருக்கு 28 வயது. எந்த நாற்றத்தையும் பொருக்க முடியாத அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார். அவருக்கு,


  • லேசான மூச்சு திணறல்

  • காய்ச்சல் 

  • இருமல்


இருந்தது. இந்நோய் பாதிக்கப்பட்ட 57 நாட்களுக்கு பின் அவர் மீண்டும் வாசனையை பெறத்தொடங்கினார். 87 நாட்களுக்கு பின் அவர் பரிபூரணமாக அவரது வாசனையை மீட்டெடுத்தார். அவர் பெரும்பாலும் கூறிய வாசனை என்னவென்றால்,


  • ரப்பர் வாசனை

  • சிதைந்த கழிவு வாசனை


இரண்டாம் நபர்


இவர் ஒரு பெண். இவருக்கு வயது 32. இவரும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கும் முற்றிலுமாக வாசனை இல்லை அல்லது அவ்வப்போது கேவலமான வாசனை ஏற்பட்டது. இவர் தனக்கு,


  • வெங்காய வாசனை

  • கழிவு வாசனை


இருப்பதாக கூறினார். ஆதனால் பரோஸ்மியா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பாதிப்பை ஏற்படுத்த கூடியது ஆகும்.


எவ்வளவு காலம் இருக்கும்?


பொதுவாக கொரோனா தொற்று நீங்கிய பின்னும் ஒரு வாரத்திலிருந்து மூன்று மாதம் வரை இந்த நாற்ற நோய் நீடிக்கலாம். மே 2021 ஆய்வின் படி, 268 பேர் கொண்ட குழுவை பரிசோதித்தனர்.


அவர்களில் 10 நாட்கள் முதல் 3 மாதம் வரை சிதைந்த வாசனையை அனுபவித்தோர் 75 சதவீதத்திற்கும் மேல் ஆகும். இருப்பினும் இந்த நோயின் காலம் தீர்க்கமாக சொல்லப்படவில்லை. அதற்கு இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.


மார்ச் 2021 ஆய்வில் 125 பேர் பரோஸ்மியா ஆய்வில் உட்படுத்தப்பட்டார்கள். அதில் சுமார் 89 பேருக்கு 7 மாதம் வரை இந்த நோயானது நீட்டித்தது குறிப்பிடதக்கது.


சிகிச்சை


கோவிட்-19 வந்த பலருக்கு இப்படி பட்ட வித்தியாசமான நோய்களும் வருவது கண்டிபிடிக்கப்பட்டதே சமீபத்தில் தான். அதனால் இந்த பரோஸ்மியா நோய்கான எந்தவித தீர்க்கமான சிகிச்சையும் இன்னமும் கண்டுபிடிக்கபடவில்லை.


மாற்று நோய்


சிலருக்கு இந்த நோய் கொரோனா தொற்று நீங்கிய பின் பல மாதம் கழிந்த பிற்பாடு பிற்பாடு கூட ஏற்படலாம். அதிலும் சிலருக்கு நாற்றம் மட்டுமில்லாமல்,


  • மூக்கு அடைப்பு

  • எரிச்சல்

  • ஒழுகுதல்


போன்றவைகளும் ஏற்பட கூடும். அதிலும் சிலருக்கு இந்த நோய் ஏற்பட்ட பிறகு கூட கொரோனா தொற்று ஏற்படலாம்.


மருத்துவரை பார்க்க வேண்டுமா?


கோவிட்-19 தொற்று போன பின்னும் கூட இருக்கும் சிக்கல்களுக்கு அல்லது பரோஸ்மியா போன்ற வாசனை நோய்கள் தானாகவே சரியாக கூடும்.


மூக்கின் திசு சேதத்தினால் ஏற்படும் பரோஸ்மியா ஒரு நிலையில் இருந்து படிப்படியாக குறையக்கூடும். ஏனெனில் நம் உடல் தானாகவே திசு சேதத்தினை சரிசெய்து கொள்ளும் திறன் உடையது.


ஆனால் நாற்றமானது படிப்படியாக குறையாமல் மேலும் மேலும் அதிகமானால் நீங்கள் நல்லதொரு மருத்துவரை பார்ப்பது நல்லது. பரோஸ்மியா நோயை வளரவிடுவது, முற்றிலுமாக உங்களது வாசனையை இழக்கச் செய்யவும் கூடும்.


கோவிட்-19 பின்னும் ஏற்படக்கூடும் சில நோய் தொற்று


  • சர்க்கரை நோய்

  • இரத்த அழுத்த அதிகரிப்பு

  • பரோஸ்மியா

  • பாண்டோஸ்மியா

  • ஹைப்போஸ்மியா

  • ஆஸ்துமா

  • ஹார்ட் அட்டாக்


 இந்த வார தென்றலை பெற

 இங்கே தொடவும்


4 Comments

  1. இந்த கட்டுரை எழுத நிறைய தேடல்கள் தேவைப்பட்டு இருக்கும். முயற்சி செய்தமைக்கு வாழ்த்துக்கள்.இதுவரை யாரும் அறியாத செய்திகள் நிறைய உள்ளன.

    ReplyDelete
  2. அனைவரும் கவனமுடன் இருக்க, இந்த பதிவு உதவுகிறது

    ReplyDelete
  3. எனக்கும்இதுபோன்றபிரச்னைஎன்னதீர்வு

    ReplyDelete
    Replies
    1. இந்நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை. அதனால் ஏதும் நீங்களாக சென்று மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம்.

      7 முதல் 9 மாதத்தில் தானகவே இந்நோய் சரியாகி வருகிறது.

      அதுவரை இதை சகித்து கொள்வதே நல்லது

      Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு