Trending

கர்ம யோகம் எளிய நடையில்

3 கர்ம யோகம்

கர்ம யோகம் karma yogam

சென்றவாரம் தொடரில் சாங்கிய யோகத்தை படித்த பலருக்கும் தொழிலை பற்றிய சந்தேகம் எழுந்திருக்கும். கண்ணன் சாங்கிய யோகத்தை கூறி முடிக்கும் பொழுது தொழிலை பற்றிய சந்தேகம் அர்ஜுனனுக்கும் எழும். பார்த்தனின் அந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக பரந்தாமன் சொல்லும் ஞான வார்த்தைகளே கர்ம யோகமாகும். கருமம் என்பது வினைப்பயனையும் கர்மம் என்பது செய்யும் தொழிலையும் அல்லது செயலையும் குறிக்கும். பல இடங்களில் இவ்விரண்டு சொல்லும் ஒரே பொருளாக தொழிலையே கூட குறிக்கும்.


கண்ணன் சொன்ன கர்மயோகத்தின் படி வாழ்ந்தவரை அடையாளம் காண கொஞ்சம் வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால் அதில் எனக்கு முதலில் தென்பட்டது முகமது நபிகளே ஆகும்.

கர்மயோகம் ஆழ்ந்த பல கருத்துக்களை கூறினாலும் அது அடிக்கடி அறிவுறுத்தும் சில கருத்து என்னவெனில், 'உடம்பு இருப்பவர்கள் அனைவருமே ஏதும் ஒரு தொழிலை கட்டாயம் செய்தல் வேண்டும், அந்தத் தொழிலில் ஆசைகளை விட்டு விடக்கூடாது அதாவது ஆசைகொண்டு அல்லது ஆசை எதிர்பார்த்து அத்தொழிலை செய்யக்கூடாது' புலன்கள் தொழிலில் புகுவது இயற்கை அதை அடக்குவதே கர்மயோகம் சொல்லும் முறையாகும்


இந்தக் கருத்துக்களுக்கு ஆக சிறந்த பொருத்தம் உடைய ஒரு நபர் முகமது நபிகளே ஆகும். கண்ணனும் அர்ஜுனனும் இந்த கருத்துக்களுக்கு தகுதியற்றவர்கள் என்று நான் சொல்லவில்லை. இருவேறுபட்ட மதம் ஆயினும் அது சொல்லும் கருத்துக்கள் வெகு பல ஒன்றாகவே இருக்கிறது. முகமது நபிகள் அந்த கருத்துக்களை சொல்வதோடு வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்.


முகமது நபிகள் அரபு நாட்டின் மன்னராக இருந்தார் அவர் நினைத்திருந்தால் எத்தனை இன்ப வெள்ளத்திலும் மூழ்கி இருக்கலாம். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டு ஆகவேண்டும் எனும் கர்ம யோகத்தின் படி, முகமது நபிகள் ஒரு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அது அரசராக இருக்கும் தொழில் அல்ல, அரசு என்பதே சேவை ஆகும். அது தொழிலில் சேராது. அதனால் அவர் மன்னராக இருந்தபோதும் கூட ஆடு மேய்த்தார். ஒரு அரசராக இருந்தும்கூட ஆடு மேய்த்தார் என்பதை தெரிந்து கொள்ளும்போது அவர் புலன் ஆசைகளை தொழிலில் புகுத்தவில்லை என்பது தெரிகிறது.


ஞானம் தெரிந்தவர்கள் கூட கர்மம் செய்ய வேண்டும் என்கிறது கர்மயோகம். ஞான துளிகளை அள்ளி கொடுத்தவர் முகமது நபிகள். இப்போது உள்ள நவீன ஞானிகள் போல் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஞான தத்துவங்களை தூக்கி வீச வில்லை அவர். தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டே அவரது வாழ்வியல் தத்துவங்கள் அமையும். இறைவனே தமக்கு சொன்னதாக குர்ஆன் அமைந்திருக்கும். 


இத்தனை நேரம் நான் நபிகளை பற்றி கூறியதற்கு காரணம், இன்று நாம் பார்க்கப் போகும் கீதையின் கர்ம யோகத்தில் வரும் கருத்துக்களுக்கு அம்மாமனிதரின் வாழ்வு சாலப் பொருந்தும் தொழிலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெளிவுற தெரிந்து கொள்ள கீதையை படியுங்கள், அப்படி இல்லையானால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை படியுங்கள். இனி கர்ம யோகத்தை காண்போம்


கண்ணன் சாங்கிய யோகத்தில் தெளிந்த அறிவுடையவர்கள் ஞானத்தை அடைந்து விடுவார்கள் என்று கூறியிருப்பார். 


அர்ஜுனன் கேட்க தொடங்குவான் 


கண்ணா செயலை காட்டிலும் அறிவே சிறந்தது என்று நீயே கூறிவிட்டாய். அப்படியிருக்க நான் ஏன் இந்த கொடுமையான காரியத்தில் ஈடுபட வேண்டும்? என் அறிவு இவர்களை கொல்ல வேண்டாம் என்று கூறுகிறது. அமைதியை நாட சொல்கிறது. ஆனால் நீயோ கடமை எனக்கூறி போர் செய்யச் சொல்கிறாய். அறிவுதான் சிறந்தது என்றும் கூறுகிறாய். எனக்கு புரியவில்லையே. ஒரே ஒரு வார்த்தையில் எனக்கு புரியும்படி இதை விளக்கு.


இப்போது கண்ணன் பேசத் தொடங்குவார்


அர்ஜுனா நீ ஒன்றை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். அறிவில் தெளிந்த ஞானிகளும் கூட தொழில் செய்யாமல் இருப்பது இல்லை. அப்படி தொழிலில் ஈடுபடாமல் இருப்பவன் தமோ குணத்தை சேர்வதாகும். தொழிலே செய்யாமல் இருப்பவன் துறவியாகி விடமாட்டான். கடுமையான தவத்தில் இருப்பவன் செயலற்றவன்  என்றும் ஆகிவிடாது. அவன் செய்கின்ற செயல்களில் லாபமில்லை நஷ்டமில்லை. லாபத்தை எதிர் நோக்காது தொழிலில் ஈடுபடுபவன் கர்ம யோகத்தை எட்டுகிறான். அதனால் எந்த தொழில் செய்தாலும் அதன் மீது பற்று வைக்காதே அதாவது அதனால் விளையும் பலனை நோக்கி ஆசை கொள்ளாதே. உனது தொழில் எதுவாக இருப்பினும் அது உலகத்தாருக்கு நன்மை செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். 


அர்ஜுனா, இந்த உலகத்தில் உயர்ந்த மனிதர்கள் எதை எதை செய்கிறார்களோ அதையே ஏனைய பிற மக்களும் கடைபிடிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு என்று எந்த கடமைகளும் கிடையாது. நான் அடையாத சுகங்களை இல்லை. ஆனாலும் நான் எப்போதும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறேன். அதாவது ஏதாவது ஒரு கடமையினை நான் செயலாற்றிக் கொண்டே இருக்கிறேன். அதற்கு காரணம் என்னை பின்பற்றுபவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். 


பாரத செல்வா, ஒரு உண்மையை புரிந்து கொள் உலகில் மூன்று குணங்கள் தான், சாத்வீகம், ரஜோ, தமோ.  சாத்வீகம் என்பது அடக்கமும் அமைதியும். அது செயலற்று போவதே இல்லை. சாத்வீகத்தில் உதிப்பது ஞானமாகும். அந்த ஞானத்தை அறிவும் கொடுக்கிறது. அவர்கள் கடைபிடிக்கும் பொறுமை குணமானது சோம்பேறித்தனத்தை காட்டாது, சோம்பேறி குணம் தமோ பிரிவினருக்கு தான் பொருந்தும். தமோ பிரிவினருக்கு என்னதான் உலகில் பல கடமைகள் இருந்தாலும், அவர்களின் செயலற்ற நிலையே சோம்பேறித்தனம் ஆகும். இதில் இடையே இருக்கும் ரஜோ குணங்கள் உலகில் அதிகமாகும். அவர்கள் ஈடுபடும் எந்த தொழிலிலும் ஆசை இல்லாமல் இருக்காது. ரஜோ குணத்தோர்கள் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுகிறார்கள் எனில் அத்தொழிலில் லாபம் நோக்கம் இல்லாமல் இருக்காது. பலன் கிடைக்காத எந்த தொழிலையும் ரஜோகுணம் கொண்டவர்கள் செய்ய மாட்டார்கள். ரஜோ குணம் தமோ குணமாகுவததும் தமோ குணம் ரஜோ குணமாகுவதும் இயல்பே. இவர்கள் சாத்வீக குணத்திற்கு உயர புலனடக்கம் ஒன்றே உதவும். 


அர்ஜுனா, இப்போது நீ போர் செய்யவிருக்கிறாய். போரில் வென்றால் எத்தகைய இன்பத்தை அனுபவிக்கலாம் எனும் எண்ணத்தை இந்நேரம் உனது அறிவு சிந்திக்கத் தொடங்கி இருக்கும். புலன்களை கட்டுப்படுத்த கற்றுக்கொள் அந்த ஆசைகள் உன்னை அழிவுக்கு அழைத்துச் செல்லும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் அதனதன் நிகழ்ச்சியிலே விருப்பு வெறுப்புகள் உண்டு அதை அடைந்து விட்டோம் ஆனால் அதுவே உனக்கு பகை ஆகிவிடும். பிறருக்கு செய்கின்ற தர்மம் மிக மிக உயர்ந்தது. ஆனாலும் சுய தர்மமே சிறந்தது. நீ உனது கடமையில் உறுதியாய் இருந்தாயானால் அதைவிட சிறப்பு இவ்வுலகில் இல்லை. சுய தர்மத்தை செய்து ஒருவன் இறந்து போனாலும் கூட அதை விட சிறப்பு இருக்காது.


அர்ஜுனன் கேட்கிறார்,


கண்ணா, ஒருவன் விரும்பாவிட்டாலும் அவனைப் பாவம் செய்யத் தூண்டுவது எது?


கண்ணன் சொல்கிறார்,


அர்ஜுனா, அதன் பெயரே ஆசையாகும். அந்த ஆசை தான் கோபத்திற்கும் காரணமாகும். துரியோதனன் உங்கள் மீது கோபம் கொள்கிறான். அதற்கு காரணம், அவனுக்கு உங்களது திறமையின் மீதும் செல்வத்தின் மீதும் இருக்கும் மோகம் ஆகும். 


பாரத செல்வனே, செய்யும் கடமைகளில் இருந்து ஆசையை நீக்கிவிடு. உன் கடமையான தர்மம் காப்பதை ஆசையின்றி செய். அதில் விளையும் பலன்களை உன்னுடைய தாக்காதே. அதுவே உன்னை அமைதியான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.


-ஈசதாசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு