Trending

பித்தா பிறைசூடீ பெருமானே - கட்டுரை




'கொடியில் நிலவு கொண்ட நாடுகளிருக்க.... நிலவில் கொடி கொண்ட தேசமடா இந்தியா!'

என்று...


சந்திராயனை முதலில் அனுப்பிவிட்டு நம்மவர்கள் செய்த கர்ஜனை இது.


ஆனால் இதேபோல இரண்டாவதுமுறையும் அலப்பறை அதிகமாகி வெல்லுமுன்னரே துதிபாடியதாலோ என்னவோ மறுமுறை அது நிறைவேறவில்லை.


இது ஒருபுறமிருக்கட்டும்...


ஈசனின் சிரசை அலங்கரிக்கும் பிறை நிலா எப்படி இஸ்லாமியர்களுக்கும் புனிதசின்னமாக இருக்கிறது...?


why religion use moon


அது சந்திரன் பின்னிருக்கும் சின்ன சரித்திரம்.


அதை காலக்கணிதம் என்றும் சொல்லலாம்.


பண்டையகாலத்தில் மக்கள் வானில் உலா வரும் நிலாவை கொண்டுதான்  காலத்தை கணக்கிட்டார்கள்.. 


நிலவற்ற வானம்(அமாவாசை) தொடங்கி மெல்ல வளர்ந்து முழுநிலாவாக (பௌர்ணமி) மாறி மீண்டும் நிலவற்ற வானம் வரும்  முப்பது நாட்களும் (27.3 நாள்கள் துல்லியமாக)


ஒரு மாதம்...!


வயது வந்தபெண்களின் கருவளர் பருவம்போல இதன் கால அளவு இருப்பதால் "மாது"என்ற சொல்லோடு ஒப்பிட்டு இதை மாதம் என்றனர்.


அது வடமொழிக்கு சென்று ஈரான் ஜெர்மன் வழியாக இந்தோ ஐரோப்பியமொழியில் புகுந்து month ஆகிவிட்டது!


moon என்பதும் இதன் நீட்சிதான்.


moon day தான் monday!


மாலை நேர மயக்கத்தை தருவதால் "சோமன்" (சோம்பல்)என்ற பெயரும் மதியை கட்டுப்படுத்தகூடியதால் "மதி " என்றபெயரும் கூட கொண்டது..!


சூரியனை விட மந்தமான பிரகாசம் காரணமாக இதனை மந்தன் எனவும் குறித்து அதனாலேயே ஒருவித அசௌகரியத்தை "மாந்தம்" என்றும் அதுவே பிறகு month என்றானதாகவும் இன்னொரு சாரர் சொல்வர். 


மந்தி -- பெண்குரங்கு


மந்தாரை--இரவில் மலரும் பூ


திங்கள் என்பது நிலவை குறிக்கும் அதனாலேயே அது நிலவைகொண்டு அளவிடும் மாதத்தையும் தமிழில் குறித்தது.


நிலவின் ஒவ்வொரு பிறை தோற்றத்தையும் 1..2..3..4..என 15 வரைக்கும் வடமொழியில் வரிசைபடுத்தியுள்ளனர்‌.


அதுதான்..


திதி... இதைத்தான் நாம் தேதி என்கிறோம்..


அவை...



பிரதமை 1


துவிதியை 2


திரிதியை 3


சதுர்த்தி 4


பஞ்சமி 5


சஷ்டி 6


சப்தமி 7


அஷ்டமி 8


நவமி 9


தசமி 10


ஏகாதசி 11


துவாதசி 12


த்ரையோதசி 13


சதுர்தசி 14



கடைசியாக பஞ்ச தசினு வர வேண்டும் ஆனால் அதை நாம் பௌர்ணமி என்கிறோம்..


பௌர்ணமிக்கு முன் இதனை வளர்பிறை திதிகள் என்றும் இதே 15தின கணக்கீடு பௌர்ணமி க்குபிறகு தேய்பிறை திதிகள் எனவும் அழைக்கப்படும்.


ஒவ்வொரு நாளும் நிலா எந்த விண்மீனின் அருகில் வருகிறதோ அது அந்தநாளின் நட்சத்திரம்.


நீங்கள் பிறந்த தினத்தில் வானில் நிலவு எந்த விண்மீனோடு உலாவந்ததோ அதுவே உங்களின் நட்சத்திரம் ஆகும்.(birthday)


அப்படி நாளொருமேனியுமாக 27 நட்சத்திரங்களோடு தன் ஒருமாத உலகசுற்றுபயணத்தை நிலவு முடித்துக்கொண்டு அடுத்த ரவுண்டை ஆரம்பித்துவிடும்..


ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பிறைவடிவம் கொண்டு நிலா பவனிவரும் இல்லையா..?


அப்படி முழு நிலா அன்று எந்த விண்மீனுடன் நிலவு பவனிவருகிறதோ அந்தநாளின் நட்சத்திரமே அந்த மாதத்திற்கே பெயராக அமைந்தது!!!!


உதாரணமாக.... முழுநிலவு கார்த்திகை விண்மீனோடு வந்தால் அது கார்த்திகை மாதம்...


சித்திரை விண்மீனோடு வந்தால் அது சித்திரை மாதம்..


இந்த கணக்கீட்டில் சில குறைகள் உண்டு.. ஒவ்வொரு ஆண்டும் நாம் ஒரு முழுநாளையே இழக்க நேரிடும்....! இதனால் பருவகாலத்தை சரியாக எதிர்பார்க்க முடியவில்லை!


என்றாலும் இதை வைத்தே மிகநெடுங்காலம் மனிதகுலம் காலம் கணித்து வாழ்ந்திருக்கிறது..


அதை சிவன் சிந்தித்து கத்துதந்தார் என்பதன் அடையாளமாக ஈசன் தலையிலும்..


அல்லாஹ் அறிவித்தார் என்பதாக இஸ்லாமிய கொடிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.


சிந்துநதி மூலம் இந்தியாவை அரேபியர் கண்டறியுமுன்பே வைகையும் தாமிரபரணியும் அவர்களுக்கு வெகு பரீட்சயம்.


ஆதலால் அவர்கள் தமிழர்களிடமிருந்து இக்காலகணிதத்தை கற்றிருக்ககூடும்.


என்றாலும் ஆரம்பத்தில் பூமியின் நிலநடுக்கோட்டில் இருந்தபோது நமக்கு பருவங்கள்பற்றி கவலைஇல்லை.. ஆண்டுமுழுவதுமே வசந்தகாலம்தான்.. பகலில் கடும்வெயில் அந்தியில் நல்லமழை! அங்கு சந்திரனின் காலக்கணிதம் மிகப்பொருத்தம்தான்..!


ஆனால் வடகோளத்திலோ தென்கோளத்திலோ மனிதகுலம் குடிபெயர்ந்தபிறகு கோடை/ குளிர்/ மழை/ இலைஉதிர் /வசந்த காலங்கள் மாறி மாறி சீரான இடைவெளியில் வருவதால்...


சந்திரன் காலக்கணக்கீடு அந்த இடைவெளியை சரியாக கணிக்காது போய்விட்டது.


குறிப்பாக விதைவிதைக்க வேண்டுமாயின் மழைவரும்நாள் தெரியணும்.. கோடைகாலம் தொடங்கும்போது நெல்லை விதைத்தால் என்ன ஆகும்? 


ஆதலால் இதைவிடுத்து நாம் சூரியகாலகணிதத்துக்கு தற்போது(சோழர்காலத்தில்) மாறிவிட்டோம்..!


சூரியகாலகணிதம் உலகெலாம் இன்று பின்பற்றுகிற கிரிகோரியன் காலண்டருடன் பொருந்துகிறது.. 


இன்றும்கூட நாள்காட்டி யில் தமிழ்தேதி குறிப்பிடபடுவது சூரியகணக்கீடு..


ஆனால் பிரதமை துவிதியை என திதி சொல்வது சந்திர கணக்கீடு..


தீபாவளி ..கார்த்திகை போன்ற பண்டிகைகள் நிலவு கணிதம்!


பொங்கல் ..சித்திரைத்திருநாள்.. ஆடிப்பெருக்கு..  முதலியன சூரியகணிதம்!


சூரிய கணித பண்டிகைகள் சொன்னநாளில் சொன்ன தேதியில் கணகச்சிதமாக வரும்!


ஆனால் நிலவுகால பண்டிகைகள் மாதம்விட்டு மாதமே கூட மாறும்..!


 (சொல்லப்போனால் நம்மவர்கள் பின்னாளில் சூரியகாலம் கொண்டு சந்திரநாள்காட்டியை பழுதுபார்த்து adjust செய்துவிட்டார்கள்.)


இஸ்லாமியர்கள் இன்றுவரை நிலவின் அடிப்படை காலண்டரையே பின்பற்றுகின்றனர்... 


அதனாலயே அவர்களின் ரம்ஜான் பக்ரீத் முஹரம் போன்ற விழாக்கள் வருஷத்தின் எந்த மாதத்திலும் எந்த பருவத்திலும் வருகிறது!!!


அதுவும் கூட நிலவு தெரியாவிடில் மேலும் ஒருநாள் தள்ளிப்போகும்! 


இதனால் எந்த இழப்பும் இல்லை.


நாம் மாற்றிக்கொண்டது கூட வேளாண்மையின் பொருட்டே..!


கடிகாரத்தில் மணிபார்க்க தெரிவதும் காலண்டரில் நாள்பார்க்க தெரிவதும்  மட்டும்போதாது...


அந்த கடிகாரமும் காலண்டரும் அதை எதற்காக காண்பிக்கின்றன என்பதையும் இனி யோசியுங்கள்..!


சித்தர்கள் பெரும்பாலும் பித்தர்களை போலத்தான்...


ஐன்ஸ்டினின் நடவடிக்கைகள் கூட முழுபைத்தியக்காரத்தனமாகத்தான் இருக்குமாம்.


பிறைசூடிய அந்த பித்தன் இன்னும் வேறு எதையெல்லாம் கணித்திருந்தானோ....?


-சூரியராஜ்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு